தம்பி.. பண்டம் எவளோ.?
சமோசா பத்து ருவா
போண்டா பத்து ருவா
வடை பஜ்ஜி எட்டு ருவா
உனக்கெது வேணும் பாட்டி.?
கந்தலான முந்தியில் முடிந்திருந்த
நாலைந்து சில்லறை நாணயங்களை
முன்புறமும் பின்புறமும்
திருப்பி திருப்பி
பார்த்துவிட்டுச் சொன்னாள்
ஒரு டீ மட்டும் குடுய்யா... போதும்
பொன்னிற வெயிலில்
வயதான பாட்டியின்
சில்லறை கவிதையானது
டீ
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment