முதற் பாதியில்
ஓட்ட வேகத்தில் நடந்தவன்
தோய்ந்த கால்களை இழுத்தவாறு தவழ்கிறேன்
பாரம் சுமந்த அவை
பரிதாபகரமாய் தொங்குகின்றன
முடிகள் நரைத்து
தேகம் சுருங்கிவிட்டது
வில்லாய் வளைந்த முதுகு
நிரந்தரமாய் வளைந்தாகிவிட்டது
சமயத்தில் சுயநினைவும் கூட
தப்பிவிடுகிறது
வதைக்கும்
பருவ வேள்வியின் வேதனையில்
தனிமைக்கு இரையான
பாதுகாப்பின்மையின் விரக்தியில்
கரம் சேரா காதலியவள்
அவசரத்தில் எறிந்த
'அந்த சொற்கள்' மட்டும்
குளத்தில் எறிந்த கல்லைப் போல்
அடி நெஞ்சில் அப்படியே தங்கி இருக்கின்றன
சொற்கள் ஒருபோதும் எடையிழப்பதில்லை
கார்த்திக் பிரகாசம்...
ஓட்ட வேகத்தில் நடந்தவன்
தோய்ந்த கால்களை இழுத்தவாறு தவழ்கிறேன்
பாரம் சுமந்த அவை
பரிதாபகரமாய் தொங்குகின்றன
முடிகள் நரைத்து
தேகம் சுருங்கிவிட்டது
வில்லாய் வளைந்த முதுகு
நிரந்தரமாய் வளைந்தாகிவிட்டது
சமயத்தில் சுயநினைவும் கூட
தப்பிவிடுகிறது
வதைக்கும்
பருவ வேள்வியின் வேதனையில்
தனிமைக்கு இரையான
பாதுகாப்பின்மையின் விரக்தியில்
கரம் சேரா காதலியவள்
அவசரத்தில் எறிந்த
'அந்த சொற்கள்' மட்டும்
குளத்தில் எறிந்த கல்லைப் போல்
அடி நெஞ்சில் அப்படியே தங்கி இருக்கின்றன
சொற்கள் ஒருபோதும் எடையிழப்பதில்லை
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment