அழகிய நாய்
அழுகு என்றால்
நாயாய் பிறந்திருக்கலாமோ என
ஏங்க வைக்கும் அழகு
மழை பெய்து
எங்கும் பசுமை பூத்திருந்த
ஓர் நன்னாளில் நான்கு குட்டிகளை
ஈன்றது
கடைக்குட்டியின் சாயல்
தாயின் பிரதியை ஒத்திருந்தது
அதன் மீது மட்டும் கூடுதல் பாசம்
மற்ற குட்டிகளின் மீதும்
அளவில்லா பாசம் தான்
தாயாயிற்றே
உணவைப் பங்கிட்டு அளிக்கும்
தினமும் நக்கிக் கொடுக்கும்
வளர்ந்த நாய்களிடமிருந்து
ஒற்றை ஆளாய் காக்கும்
ரேபீஸ் தாக்கிய அன்று
கடைக்குட்டியைத் தான்
முதலில் கடித்துக் குதறியது
விபரீதம் அறியாமல்
விளையாட்டு என நினைத்து
தலையை நக்கக் கொடுத்தது
கடைக்குட்டி
நிலமெங்கும் சிவப்பு துளிகள்
தாயின் பற்களெல்லாம்
கடைக்குட்டியின் குருதி வாடை
வாயில் கவ்வியிருந்த
கடைக்குட்டியின் கழுத்தைத்
தரையில் விட்டபோது
அது செத்து சில நிமிடங்கள்
ஆகியிருந்தது
அன்றே மற்ற குட்டிகளை மறந்து
அந்த நிலத்திலிருந்து
ஓடிவிட்டது தாய்
எந்த தேடியும் கிடைக்கவில்லை
காற்றில் கடைக்குட்டியின் குருதி வாடை வீசாத
ஒரு நிலத்திற்குத் தப்பியோடியிருக்கலாம்
அல்லது
தன்னையே கடித்து மாண்டிருக்கலாம்
அந்த அழகிய நாய்
அழுகு என்றால்
நாயாய் பிறந்திருக்கலாமோ என
ஏங்க வைக்கும் அழகு
கார்த்திக் பிரகாசம்...
அழுகு என்றால்
நாயாய் பிறந்திருக்கலாமோ என
ஏங்க வைக்கும் அழகு
மழை பெய்து
எங்கும் பசுமை பூத்திருந்த
ஓர் நன்னாளில் நான்கு குட்டிகளை
ஈன்றது
கடைக்குட்டியின் சாயல்
தாயின் பிரதியை ஒத்திருந்தது
அதன் மீது மட்டும் கூடுதல் பாசம்
மற்ற குட்டிகளின் மீதும்
அளவில்லா பாசம் தான்
தாயாயிற்றே
உணவைப் பங்கிட்டு அளிக்கும்
தினமும் நக்கிக் கொடுக்கும்
வளர்ந்த நாய்களிடமிருந்து
ஒற்றை ஆளாய் காக்கும்
ரேபீஸ் தாக்கிய அன்று
கடைக்குட்டியைத் தான்
முதலில் கடித்துக் குதறியது
விபரீதம் அறியாமல்
விளையாட்டு என நினைத்து
தலையை நக்கக் கொடுத்தது
கடைக்குட்டி
நிலமெங்கும் சிவப்பு துளிகள்
தாயின் பற்களெல்லாம்
கடைக்குட்டியின் குருதி வாடை
வாயில் கவ்வியிருந்த
கடைக்குட்டியின் கழுத்தைத்
தரையில் விட்டபோது
அது செத்து சில நிமிடங்கள்
ஆகியிருந்தது
அன்றே மற்ற குட்டிகளை மறந்து
அந்த நிலத்திலிருந்து
ஓடிவிட்டது தாய்
எந்த தேடியும் கிடைக்கவில்லை
காற்றில் கடைக்குட்டியின் குருதி வாடை வீசாத
ஒரு நிலத்திற்குத் தப்பியோடியிருக்கலாம்
அல்லது
தன்னையே கடித்து மாண்டிருக்கலாம்
அந்த அழகிய நாய்
அழுகு என்றால்
நாயாய் பிறந்திருக்கலாமோ என
ஏங்க வைக்கும் அழகு
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment