என் மீதான அவளின் கதாநாயக பிம்பம்
கவர்ச்சிகரமாய் இருந்தது
போக்கில் மெல்லிய புன்னகையை உதிர்க்க
இயேசுவைப் போல் புனிதமானவன் நீ எனச்
செவிகள் கூசிடப் போற்றுவாள்
மழலை சிரிப்புடன் நான் அமர்ந்திருக்க
உலகின் அத்துணை புனித ஆத்மாக்களும்
எந்தன் சிறு பார்வை வேண்டி
பவ்யமாய் நிற்பது போல்
முகம் கொள்வேன்
அப்பிம்பம்
பெருஞ்சுவர் காவலில்லா சிறை
மீண்டெழச் சாத்தியமற்ற
நானே ஆணிகள் துளைத்து
என்மேல் சுமத்திக் கொண்ட
நிரந்தர சிலுவையென
பிறகு தான் புரிந்தது
ஏதோ ஒரு நாள்
இயல்பான மனிதனாய்
எதிர்பாராமல் ஒரு தவறை நிகழ்த்திய போது
அருவருப்பினும் கீழான
அவளின் பார்வையில்
தான் பின்னிய வலையிலேயே
சிக்குண்ட சிலந்தியைப் போல்
முதன்முதலாய் என் கதாநாயக பிம்பம்
துடித்தது
நடக்கும் போது கைகளைப்
பற்றிக் கொள்ளாத ஓர் நாளில்
நூறாவது மாடியிலிருந்து விழுந்த
கண்ணாடியைப் போல்
என் கதாநாயக பிம்பம் சில்லு சில்லாய்
உடைந்தது
சிலுவையைச் சுமந்த சென்ற இயேசுவைப்
பின்தொடர்ந்த பாரபாஸைப் போல்
துரத்தி வந்தவள்
திடீரென்று காணாமல் போய்விட்டாள்
அவள் விட்டுச் சென்ற
அன்பின் வழியில்
அரைகுறையான நான் மட்டும் இருந்தேன்
வெளுத்துப் போன
கதாநாயக பிம்பத்தோடு
கார்த்திக் பிரகாசம்...
கவர்ச்சிகரமாய் இருந்தது
போக்கில் மெல்லிய புன்னகையை உதிர்க்க
இயேசுவைப் போல் புனிதமானவன் நீ எனச்
செவிகள் கூசிடப் போற்றுவாள்
மழலை சிரிப்புடன் நான் அமர்ந்திருக்க
உலகின் அத்துணை புனித ஆத்மாக்களும்
எந்தன் சிறு பார்வை வேண்டி
பவ்யமாய் நிற்பது போல்
முகம் கொள்வேன்
அப்பிம்பம்
பெருஞ்சுவர் காவலில்லா சிறை
மீண்டெழச் சாத்தியமற்ற
நானே ஆணிகள் துளைத்து
என்மேல் சுமத்திக் கொண்ட
நிரந்தர சிலுவையென
பிறகு தான் புரிந்தது
ஏதோ ஒரு நாள்
இயல்பான மனிதனாய்
எதிர்பாராமல் ஒரு தவறை நிகழ்த்திய போது
அருவருப்பினும் கீழான
அவளின் பார்வையில்
தான் பின்னிய வலையிலேயே
சிக்குண்ட சிலந்தியைப் போல்
முதன்முதலாய் என் கதாநாயக பிம்பம்
துடித்தது
நடக்கும் போது கைகளைப்
பற்றிக் கொள்ளாத ஓர் நாளில்
நூறாவது மாடியிலிருந்து விழுந்த
கண்ணாடியைப் போல்
என் கதாநாயக பிம்பம் சில்லு சில்லாய்
உடைந்தது
சிலுவையைச் சுமந்த சென்ற இயேசுவைப்
பின்தொடர்ந்த பாரபாஸைப் போல்
துரத்தி வந்தவள்
திடீரென்று காணாமல் போய்விட்டாள்
அவள் விட்டுச் சென்ற
அன்பின் வழியில்
அரைகுறையான நான் மட்டும் இருந்தேன்
வெளுத்துப் போன
கதாநாயக பிம்பத்தோடு
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment