நீண்ட நாட்களுக்குப் பிறகு
சந்தித்த தோழியிடம்
சுற்றித் திரிந்த
பேசிப் பேசி மலைத்த
பொழுதுகளை அளவளாவினேன்
நான் சம்மந்தப்பட்ட
நினைவுகளின் பிம்பத்தை மட்டும்
எளிதில் மறந்துவிடும் அவளிடம்
மயிர்க்கால் கூச்செறியச்
சிறந்த தருணமென அவள்
புளங்காகிதமடைந்த
பொக்கிஷமென நான்
பொத்தி அடைகாக்கும்
நினைவுச் சுளைகளை
உயிர்த்தலுக்குப் போராடும்
போன ஜென்மத்தின்
சுகமான தொலைதல்களை
ஒவ்வொன்றாக மீட்டேன்
அவளைப் பொறுத்தவரையில்
அவைப் பிரேதமாகி
பிரயோஜனம் இல்லாமல்
நினைவறையில் மக்கி
வெகு காலமாகிவிட்டது
மறந்திடாத நினைவுகளால் பூட்டப்பட்ட
நிரந்தர கைதியாக
உணர்ந்தேன்
நிராதரவான நிலையைக் கண்டு
கலங்கிய கண்களுடன்
தோழி சொன்னாள்
'தீண்டாத வரை
முட்கள் குத்துவதில்லை
நினைவுகளைப் போல'
கார்த்திக் பிரகாசம்...
சந்தித்த தோழியிடம்
சுற்றித் திரிந்த
பேசிப் பேசி மலைத்த
பொழுதுகளை அளவளாவினேன்
நான் சம்மந்தப்பட்ட
நினைவுகளின் பிம்பத்தை மட்டும்
எளிதில் மறந்துவிடும் அவளிடம்
மயிர்க்கால் கூச்செறியச்
சிறந்த தருணமென அவள்
புளங்காகிதமடைந்த
பொக்கிஷமென நான்
பொத்தி அடைகாக்கும்
நினைவுச் சுளைகளை
உயிர்த்தலுக்குப் போராடும்
போன ஜென்மத்தின்
சுகமான தொலைதல்களை
ஒவ்வொன்றாக மீட்டேன்
அவளைப் பொறுத்தவரையில்
அவைப் பிரேதமாகி
பிரயோஜனம் இல்லாமல்
நினைவறையில் மக்கி
வெகு காலமாகிவிட்டது
மறந்திடாத நினைவுகளால் பூட்டப்பட்ட
நிரந்தர கைதியாக
உணர்ந்தேன்
நிராதரவான நிலையைக் கண்டு
கலங்கிய கண்களுடன்
தோழி சொன்னாள்
'தீண்டாத வரை
முட்கள் குத்துவதில்லை
நினைவுகளைப் போல'
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment