Skip to main content

Posts

Showing posts from February, 2016
கல்லூரி சேரும் வரையுலுமே அம்மா தான் அவனை சினிமாவிற்கு கூட்டிச் செல்வாள்... தங்கைக்கு சினிமா என்றால் அவ்வளவு பிடித்தம் இல்லை.. அதனால் சினிமா விசயத்தில் அவனும் அம்மாவும் மட்டும் தான் கூட்டு... மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சின்ன கிளை ரோட்டின் கடைசி ஓரத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஸ்ரீமான் தியேட்டர்... சரியாக வீட்டில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் இருக்கும்... ஆண்கள் பெண்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து அமர வேண்டும்.. பால்கனி டிக்கெட் எடுக்கும் வசதியுள்ள பணக்காரர்கள் மட்டும் ஒன்றாக டிக்கெட் எடுத்து அமர்ந்து கொள்ளலாம்... பால்கனி டிக்கெட் 12 ரூபாய்.. பெஞ்சு டிக்கெட் 8 ரூபாய்.. தரை டிக்கெட் 3 ரூபாய்.. தரை டிக்கெட் குறைவாகத் தான் கொடுப்பார்கள்.. அதனால் 2 30 மணிக்கு தொடங்கும் படத்திற்கு 1 மணிக்கே கூட்டிச் சென்று விடுவாள்...மதிய சாப்பாட்டை டப்பாவில் கட்டிக் கொண்டு போன நாட்கள் கூட உண்டு... அவன் ரஜினி காந்தை அளவு கடந்து நேசிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை... ஏனென்றால் அவன் அம்மாவிற்கு ரஜினி, விஜய் படங்கள் என்றால் அவ்வளவு விருப்பம்.. எழுந்து நின்று கைத்தட்டி விசில் அடிக்காத ஒரே குறை தான்.. பட...

அவள் பெயர் மனைவி

காதல் தந்து காமம் தீர்ப்பாள் குழந்தை கொடுத்து குலத்தை காப்பாள் வாழ வந்து வாழ வைப்பாள் தோளில் சாய்ந்து சோர்வை மறப்பாள் தேவை தொலைத்த தேவதையாய் திரிவாள் இன்னுயிர் இழந்தாலும் இவனுயிர் வேண்டுவாள்... கார்த்திக் பிரகாசம்...
அவன் மேல் வந்த அதீதமான நறுமண திரவியத்தின் வீச்சம் உண்மை சொன்னது இன்றும் அவன் குளிக்கவில்லை என்று...!!! கார்த்திக் பிரகாசம்...

தேநீர் சந்திப்பு

கலைந்து கிடந்த கடந்த கால நினைவுகளை மயில் இறகால் சுகமாக ஸ்பரிசித்தது நண்பர்களுடனான தேநீர் சந்திப்பு... கார்த்திக் பிரகாசம்...
அந்த "மூன்று நாட்கள்" தள்ளிப் போய் உன் வருகையை உணர்த்தின... தொடர்ந்து வந்த வாந்தியும் மயக்கமும் உன் இருத்தலை உறுதிப்படுத்தின... பால்கனிகளின் படைப்பு உன்னதமானது மதிப்பு புரிந்தது மரியாதை கூடியது... பாவாடை நாடாவைக் கூட பார்த்து பார்த்து பக்குவமாக கட்டினேன்.. தொப்புள் கொடி பாதையைத் தொட்டு தொட்டு மெய் சிலிர்த்தேன்... வயிற்றில் நீ எட்டி உதைத்தால் வலியிலும் ஆனந்தம் கண்டேன்... இன்று அதிக வலி கொடுக்க ஆரம்பித்துவிட்டாய்.. இதற்கு மேல் உன்னால் என்னை பார்க்காமல் இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறாய்.. புரிகிறது.. எனக்கும் தான்... நம் தொப்புள் கொடியை பிடித்து வெளியே வா... உன் தலையை என் சிறிய துவாரங்களின் வழியே செலுத்து.. பச்சை வண்ண முகமூடி அணிந்திருப்பவர்களை பார்த்து பயப்படுகிறாயா.. பயப்படாதே நான் இருக்கிறேன்.. அவர்கள் மருத்துவர்கள்... வெளிச்சம் கண்களை கூசுகிறதா..? கண்களை மூடிக் கொள்... என் வலியைப் பார்த்து கவலை கொள்ளாதே... இது உன் பிறப்பிற்காக நீ எனக்கு கொடுக்கும் சன்மானம்... நான் விரும்பி ஏற்கும் வெகுமானம்... வந்துவிட்டாய்.. இந்த உலகத்தில் பாதம் பதித்துவிட்டாய்... உனக்கும் எனக்குமான பந...
சிரித்து பார்த்தாள் அழுது பார்த்தாள் கெஞ்சி பார்த்தாள் தட்டில் காசு விழவில்லை...!!! நின்று பார்த்தாள் நடந்து பார்த்தாள் உட்கார்ந்து பார்த்தாள் பசியும் குறையவில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
"நான் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்." அழுத்தமாக சொன்னாள் திவ்யா... "முட்டாள் மாதிரி பேசாத திவ்யா.. சொன்னா புரிஞ்சிக்கோ..." "இவளுக்குச் சொல்லி கொஞ்சம் புரிய வை பிரியா" என்று தன் கனிந்த குரலில் கண்டிப்பாகச் சொன்னான் மணி.. "இதோ பாரு திவ்யா.. இன்னும் எவளோ நாள் நாங்க உயிரோட இருப்போம்னு தெரில.. நாளைக்கே நாங்க செத்து போய்டோம்னா உனக்கு யார் இருக்கா... உன்ன யார் கவனிச்சிப்பாங்க...எத்தன நாளைக்கு நீ தனியா வாழ முடியும்... நாங்க உன் நல்லதுக்கு தான் சொல்லுவோம்னு உனக்கு தெரியும்ல... பையன், ரொம்ப நல்லவனா இருக்கான்... உன்ன நல்லபடியா பாத்துப்பான்... இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கோ மா திவ்யா.." என்று கண் கலங்கிக் கொண்டே சொன்னாள் பிரியா... திவ்யாவிற்கு வார்த்தை வரவில்லை... தொண்டையில் சிக்கிக் கொண்டிருக்கும் வார்த்தைகளை கடினப்பட்டு மீட்டுச் சொன்னாள்... என் கணவர் இறந்த நாளில் இருந்து , நான் விதவை என்று ஒருபோதும் உங்களால் உணர்ந்ததில்லை... என்னை மகள் போல் பார்த்துக் கொண்டீர்கள்... இருவரும் சத்தியம் செய்யுங்கள் "அடுத்த ஜென்மத்தில், நீங்கள் எனக்கு மாமனார் மாமியாராக ...

விசாரணை 2...

ஆந்திர சிறைகளில் இருந்த 288 தமிழர்கள், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கபட்டுள்ளனர்... அவர்கள் அனைவரும் அரசு பேருந்துகள் மூலம், சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்... அப்பொழுது செய்தியாளரின் கேள்விக்குப் பதில் சொன்ன அவர்கள், திருப்பதி கோவில் வழிபாடுக்குச் சென்ற போது, சித்தூர் அருகே பேருந்தை மறித்து, தமிழில் பேசிய ஒரே காரணத்திற்காக போலீசாரால் கைதுச் செய்யப்பட்டதாகவும், மேலும் என்ன காரணத்திற்காக கைதுச் செய்துள்ளீர்கள் என்று கேட்ட போது, அடித்து துன்புறுத்தி, ஆந்திர போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறினர்... எந்தத் தவறும் செய்யாத அப்பாவி மக்கள், "தமிழர்கள்" என்ற ஒரே காரணத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறையில் தண்டிக்கப்பட்டுள்ளனர்... கார்த்திக் பிரகாசம்...
அன்புள்ள அப்பாவிற்கு, நான் பிறந்தது முதலே என்னை ஒரு சுமையாகத் தான் கருதி வந்துள்ளீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்... நான் பெண்ணாகப் பிறந்தது தவறா..? இல்லை உங்களுக்கு பெண்ணாகப் பிறந்தது தான் தவறா ..? என்று பலமுறை சிந்தித்து இருக்கிறேன்... ஆனால் முழுமையாக சிந்திக்க முடியாமல் இரண்டுமே பெருந்தவறு என்ற முடிவுக்கு வந்த பல இரவுகள் என் வாழ்க்கையில் இன்னும் இருட்டாக இருக்கின்றன... நான் பெண்ணாகிப் போன போது, எனக்கு செலவாகிப் போகிறது என்று வருந்தினீர்கள்... இவள் வயதுக்கு வரவில்லை என்று யார் அழுதார்கள் என்று என் காதுபடவே பேசினீர்கள்.. ஆனால் மாமியார் வீட்டில் மரியாதையாக சீர் செய்யவில்லை என்று அவர்களிடம் மல்லுகட்டி நின்றீர்கள்.. நான் பெண்ணாகப் பிறந்துவிட்ட அவமானத்தில் கூனிக் குறுகி நிற்க, பிள்ளை எப்படி வெட்கப்படுகிறது பாரு.." என்று என் அம்மா மற்றவர்களின் கவனத்தைத் திசைத் திருப்பி விழியோரம் வழிந்த கண்ணீர்த் துளிகளினால் என்னை ஆசிர்வாதம் செய்தாள்... ஒருவேளை அவளும் இந்த வேதனைகளை அனுபவித்திருப்பாளோ என்னவோ... வயதுக்கு வந்துவிட்டாய்.. இனி படிப்பெல்லாம் வேண்டாம...
நான் யார்...?? இந்தக் கேள்விக்குண்டான பதில்             தேடுதலிலா...?             உனர்தலிலா...? கார்த்திக் பிரகாசம்...

நட்பு...!!!

முந்தைய நாளின் மழையில் முளைக்கும் காளானைப் போல் அல்ல நட்பு...!!! சுயமாக சுரக்கும் நீருற்று... அது தாகம் தீர்க்க தயங்குவதில்லை...!!! பிறர் அறிய பிரதிபலனும் எதிர்பார்ப்பதில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
              காலணி களைக் கழற்றி விட்டு           பாதங்களை மட்டும் நனைத்தாள்                               அவள்...!!!          அவள் பாதம் பட்ட  மண்ணை கடத்திச்               சென்றன கடல் அலைகள்...!!! கார்த்திக் பிரகாசம்...
நிலவழகில்  நிதானம் இழக்கும்  கடல் அலைகள்... கார்த்திக் பிரகாசம்...
இளையராஜாவின் இளைய ராஜா...!!! இவனுக்குள் யுவனின் இசை அராஜகம்...!!! கார்த்திக் பிரகாசம்...
வழக்கமாக தாமதமாக வரும் அந்த ரயில், அன்று வழக்கத்தை விட ரொம்ப தாமதமாக வந்தது.. மிகவும் பிடித்த "வைரமுத்து" எழுதிய "வைரமுத்து சிறுகதைகள்" புத்தகம் கையில் இருந்ததால் தாராளமாக காத்திருந்தான் மணி... ஆயிரமாயிரம் பேர் சுற்றி இருக்கும் போது, அவன் மட்டும் தனியாக உலாவிக் கொண்டிருந்தான்.. அவனது நினைவுகள் லேசான இறகாய் பள்ளிக் காலத்தை நோக்கி பறந்து கொண்டிருந்ததன... எவ்வளவு அன்பான ஆசிரியர்... எப்பொழுதும் சிரித்த முகமாகவே இருப்பாரே... பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று நிறுத்திய போது, வீட்டிற்கே வந்து அப்பா, அம்மாவிடம் பேசியவராயிற்றே... அன்று அவர் வரவில்லை என்றால், என் படிக்கும் ஆசை வெறும் கனவாகத் தானே போயிருக்கும்... எத்தனை முறை, எனக்காகத் தேர்வுக் கட்டணத்தைக் கட்டி இருப்பார்... எல்லோருக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, எனக்கு சற்று அதிகம் கொடுப்பாரே... எது படித்தாலும் மனப்பாடம் என்ற மாயவலைக்குள் மண்டியிருந்த என்னை, புரிந்துப் படித்தால் மறத்தல் ஒருபோதும் நெருங்காது என்பதை உணர வைத்தவராயிற்றே... இந்த புத்தகம் படிக்கும் பழக்கம் கூட, அவர் ஏற்படுத்திக் கொடுத்தது தானே.. ...
      சாகாவரம் வேண்டதீர்...!!!           யாரையும் துன்பப்படுத்தாமல்       எவரையும் நோகடிக்காமல்           எவருக்கும் பாரமில்லாமல்        சாகும் வரம் வேண்டீர்...!!! கார்த்திக் பிரகாசம்...
        தொலைத் தூரம் சென்றும்    தொந்தரவு செய்கிறாள்         தினம்தினம் கனாவில்     நித்தம் நித்தம் நினைவில்...!!! கார்த்திக் பிரகாசம்...
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, இவனுக்கு புதன்கிழமை என்றாலே நெஞ்சம் படபடக்க துவங்கி விடும்... வயிறு கலக்க ஆரம்பித்து விடும்... புதன் கிழமை வந்தாலே அஞ்சி நடுங்கி, கடைசியில் ஒடுங்கியேப் போய்விடுவான்... காரணம் அப்போது புதன் கிழமை தோறும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த "கல்வி ஆலோசனை நேரம்" என்ற ஒரு மணி நேர நிகழ்ச்சி...! அந்த ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக, இவன் புதன் கிழமைகளையே வெறுத்துக் கொண்டிருந்தான்... நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் இவன் அப்பா எங்கிருந்தாலும், எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்து விடுவார்.. அதை இப்படியும் சொல்லலாம்.. இவனும் எங்கிருந்தாலும் வீட்டுக்கு வந்தாக வேண்டும்... அடுத்த ஒரு மணி நேரம், அந்தப் பிரபல ஆலோசகர் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடை அளிப்பார்... நடுவே நடுவே, "ஆவேசமாக 1000 மார்க்குகெல்லாம் எந்த காலேஜ்'ம் கிடைக்காது... 190 கட் ஆப் இல்லனா கவுன்சலிங் போறதே வேஸ்ட்... அது இது" ன்னு நேரலையிலேயே காகிதங்களைத் தூக்கி எறிவார்.... அந்த ஆலோசகர் பேசப் பேச, அதன...
        வேலை இல்லாதவனின்                  வயிறும்        மூன்றில் இரண்டு பங்கு     நீரால் தான் நிரம்பியுள்ளது... கார்த்திக் பிரகாசம்...

இங்கனம் இவன்...

              சோம்பேறித்தனத்தை இவன்       சோறு போட்டு வளர்க்கிறான்...              சோம்பேறித்தனம் இவனுள்        சோர்ந்துப் போகாமல் சேர்ந்துக் கொள்கிறது... கார்த்திக் பிரகாசம்...

அவளுக்கென...!!!

      குளத்தில்           சேற்றோடு சேர்ந்தே       பூத்துக் குலுங்கும்           தாமரைப் போல       மனதில்           பிரிவோடு சேர்ந்தே       மண்டிக் கிடக்கிறது            உன் மீது நான்         கொண்ட  அன்பு...!!! கார்த்திக் பிரகாசம்...
வருடத்தில் ஒரே ஒரு நாளை மட்டும்      "காதலர்கள் தினமாக" வரலாற்றில் எழுதி வைத்தவன்       எத்துணை கஞ்சனாக இருப்பான்... கார்த்திக் பிரகாசம்...
ஏதேதோ யோசனைகள்...!!! ஏகப்பட்ட கற்பனைகள்...!!! நீயும் நானும் ஒன்றாய் வாழ ஆரம்பித்து மகள் பள்ளிக்குப் போவதாய் மகன் உன் வயிற்றில் உதைப்பதாய் அதை நான் கை வைத்து சிலிர்ப்பதாய் என் தோளிலேயே குழந்தைப் போல் உறங்கிவிட்டாய்...!!! நேற்றுக்கூட என் அம்மாவுக்கும் உனக்கும் சண்டை... யார் மீது தவறு என்று விசாரிக்காமலே உன் மீது கோபப்பட்டுத் திட்டிவிட்டேன்... பின்புதான் தெரிந்தது உன் மீது தவறு இல்லை... உன்னிடம் மன்னிப்புக் கேட்க நம் அறையில் காத்திருந்து "மன்னித்து விடு" என்றேன்... "நான் அப்பவே அதை மறந்துவிட்டேன்" என்று எளிதாக கடந்து சென்றுவிட்டாய்...!!! முத்தமிட எத்தனித்தேன்.. சத்தமிட வேண்டாம் மகள் உறங்குகிறாள் என்று கண்டிப்பு செய்தாய்...!!! சைக்கிள் கூட ஒட்டத் தெரியாத உனக்கு பைக் ஓட்டக் கற்று தருகிறேன்... என் தோளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்...!!! எவரோ அடித்த ஹார்ன் சத்தத்தில் என் தூக்கம் தெளிந்தது... பேருந்து நின்றது... கனவு கலைந்தது... ஏதேதோ யோசனைகள்...!!!  ஏகப்பட்ட கற்பனைகள்...!!! கார்த்திக் பிரகாசம்...
"காதலிக்கிறேன்னு" சொல்றான்ல அவன நம்பலாம்... "காதலிக்கவே இல்லன்னு" சொல்றான்ல அவனக் கூட நம்பலாம்.. ஆனா "காதலிக்கிறனா இல்லையானு" தெரிலன்னு சொல்றான்ல அவன மட்டும் நம்பவே கூடாது...!!! கார்த்திக் பிரகாசம்...
என் அன்பு கோட்டைக்கு உன்னை அரசியாக்க நினைக்கும் அடிமை நான்...!!! உன் பேரன்பில் குளிராட காத்திருக்கும் சூரியன் நான்...!!! உன்னிடம் காதலைச் சொல்ல பயப்படும் தைரியசாலி நான்...!!! கார்த்திக் பிரகாசம்...

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்...

நல்ல மனிதர்களை கதையின் பாத்திரங்களாக்கி, முழுக்க முழுக்க நேர்மறை கருத்துகளையும், செயல்களையும் மட்டுமே அந்த பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெயகாந்தன்... கதையின் முக்கிய கதாபாத்திரமான ஹென்றியில் ஆரம்பித்து, தேவராஜன் துரைக்கண்ணு அக்கம்மா என அனைவருமே நேர்மறையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.. குறிப்பிட்ட கிராமத்தில் வாழும் எல்லா மனிதர்களும் நல்லெண்ணம் கொண்டர்வர்களாக இருப்பது கதையின் சுவாரசியத்தை அதிகரிப்பதுடன் மட்டுமில்லாமல், "வாழ்ந்தால் இதுப் போன்றதொரு கிராமத்தில் வாழ வேண்டும்" என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது... காதலுக்கோ, காமத்துக்கோ கதையில் கொஞ்சம் கூட இடமில்லை... எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாத, யாரைப் பற்றியும் கவலைக் கொள்ளாத, அதே சமயம் மற்ற மனிதர்களை மதிக்க தெரிந்த, உணர்ச்சிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தெரிந்த ஒரு மனிதன் என மிக லேசாக ஆரம்பித்து, ஒரே வாசிப்பில் படித்து முடித்து விடும் அளவிற்கு சுவாரசியமாக, தன் நேர்க்கோட்டில் இருந்து சிறிதும் சிதறாமல் கதை நகர்கிறது... கார்த்திக் பிரகாசம்...
எளிதான வேலைக் கிடைக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது...!!! கடுமையாக உழைக்க வேண்டிய வேலை எளிதாக கிடைத்து விடுகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
ஒரே ஒருமுறை செத்து பார்க்க வேண்டும்...!!! தன் இழப்பிற்காக இருதயம் இறுகி துடிப்பதை நிற்கும் அளவிற்கு யாரேனும் வருத்தபடுகிறார்களா என்று மனக் கண்ணில் காண வேண்டும்...!!! யாரேனும் ஒருத்தர் இருந்தாலும் மரணத்தை வென்ற திருப்தி வர வேண்டும்...!!! கார்த்திக் பிரகாசம்...
அன்று காதலர்கள் தினம்.. மணி அவசரமாக அவசரமாக பிரியாவைப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தான்... ஏற்கனவே "எப்போ தான்டா வருவ" ன்னு இரவில் இருந்து பத்து முறைக்கு மேல் போன் செய்து விட்டாள்... பதிமூன்று வருடங்கள் நட்புக்குள் இருந்த அவர்களது உறவும், உணர்வும் மூன்று வருடங்களுக்கு முன்தான் காதலுக்கு இடம் பெயர்ந்தன.. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள் பிரியா.. அவளது தந்தை இறந்த கால கட்டத்தில் தான், அவனது நட்பு அவளை தன் தோளில் அரவணைக்கத் தொடங்கியது... பத்து வருடங்களாய் நண்பர்கள் தினத்தன்று தவறாமல் சந்தித்துக் கொண்டிருந்த அவர்கள், மூன்று வருடங்களாய் காதலர் தினத்தன்றும் தங்கள் கடமையைப் பின்பற்ற தொடங்கினர்.. இரு வீட்டின் சம்மதத்துடன் இருவரும் சுதந்திரமாய் காதலித்துக் கொண்டிருந்தனர்... இந்த வருடம், எந்தவொரு காதலனும் காதலிக்குத் தந்திடாத ஒரு வித்தியாசமான பரிசைத் தரவிருப்பதாக பிரியாவிடம் மணி கூறியிருந்தான்... அந்த எதிர்பார்ப்பின் மிகுதியால் நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்து கொண்டே இருந்தாள் பிரியா... ஒருவழியாக பிரியாவின் வீட்டை அடைந்தான்... பைக்கின் ஹார்ன் சத்தம் கேட்டு வெளியே...
மற்றவர்களைப் போல் சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பார்த்து கண்டும் காணாமல் மணியால் இருக்க முடியவில்லை.. அவனுக்கு எப்போதுமே சமூகத்தின் மீது பரிதாபமும், தன் மீது ஒரு கோபமும் இருந்து கொண்டே இருந்தன... தவறு/தகாதது என்று தெரிந்தே செய்யும் சமூகத்தின் மீது பரிதாபமும், தவறு என்று தெரிந்தும் அதை திருத்த தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபமும் தான் அது... அந்த பரிதாப உணர்வும், கோப உணர்ச்சியும் அவனை தூங்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தன.. அதுவும் காலையில் பத்து மணிக்கு, மதுபான கடையின் வாசலில் நின்றுக் கொண்டிருப்பவர்களையெல்லாம் நாட்டின் துரோகிகளாகவும், அரசின் தியாகிகளாகவும் கருதினான்... குடித்து விட்டு தெருவில் விழுந்து கிடப்பவனைப் பார்க்கும் போது, அவன் குழந்தை எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறதோ என்று எண்ணி அஞ்சுவான்.. காலை வெயிலில் மது வாங்க வரிசையில் நிற்பவனைக் கண்டால், அவன் தாய் தள்ளாத வயதிலும் ரேஷன் கடையில் அரிசி வாங்க, முழங்கால் வலியில் தள்ளாடுவதாய் நினைத்து கண்ணீர் சிந்துவான்... மது அருந்திய ஒருவன் சாலையில் போதையில் தூங்குவதைப் பார்த்தால், அவன் குடும்பம் அங்கு பட்டினியில் த...
துரத்தி துரத்தி வந்தாய்...!!! திரும்ப திரும்ப பார்த்தாய்...!!! திரும்பி திரும்பி சென்றாய்...!!! எவனோ காவாலிப் பையன் என்றிருந்தேன்...!!! பார்த்து பார்த்து பழகியதோ உன் முகம்...!!! பார்க்காவிட்டால் பதறியதே என் மனம்...!!! நீ  இடிப்பது போல் வந்தாலோ வெடித்தது என் இதயம்...!!! உன்னை இழப்பது போல் வந்ததாலோ கனவை வெறுக்கின்றன என் கண்கள்...!!! விரல்களின் இடுக்குகளில் வெட்கம் பயிரிட்டாய்...!!! கண்களில் கலந்து காமம் கற்பித்தாய்...!!! என் மேல் படையெடுத்து வந்தாய்...!!! நானே உன்னுள் சிறையெடுத்து கொண்டேன்...!!! ஊரறிய உரிமையாக்க கேட்டேன்...!!! தாலி கட்டத் தயங்கவில்லை நீ...!!! என்னை தாயாக்க தாமதிக்கவும் இல்லை  நீ...!!! காலம் நம் காதலுக்கு புது கர்வம் கற்பித்துள்ளது...!!! நான் உன்னை அப்பாவாக்கிவிட்டேன்  நீ என்னை அம்மாவாக்கிவிட்டாய் நம் குழந்தை நம்மை பெற்றோராக்கிவிட்டது...!!! இதை விட சிறந்த தருணம் எனக்கு ஏதேனும் உண்டா...!!! கண்டவனாய் வந்தாய்...!!! கண்ணுக்குள் நிறைந்தாய்...!!! கனநேரத்தில் படர்ந்தாய்...!!! கனவிலே கலந்தாய்...!!! கணவனாய...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...

"No Selfie Zone"

அழகுடன் கூடிய ஆபத்தான இடங்கள்; சுற்றுலா தளங்கள்; குறுகிய சாலை வளைவுகள்; கொண்டை ஊசி வளைவுகள் போன்ற இடங்களில் அதிக கவனமாக இருப்பதற்காக, இது "Accident Zone" என்று அறிவிப்புபலகை பொதுவாக வைக்கப்பட்டிருக்கும்... அந்த காலமெல்லாம் இப்பொழுது மலையேறிப் போய் "No Selfie Zone" என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது... "எல்லாம் சிவமயம்" என்பது மாறி "எல்லாம் செல்பிமயம்" என்று உலகமே உருண்டுக் கொண்டிருக்கின்றது... ஆரம்பத்தில் ஆனந்தமான வரமாய் வலம் வந்து கொண்டிருந்த இந்த செல்பி, இன்று அதிரடியான சாபமாய் மாறத் தொடங்கியுள்ளது... ஆம்... பெரும்பாலனோர் வித்தியாசமான மற்றும் புதுமையான முறையில் செல்பி எடுக்க ஆசைப்பட்டு, அது பெரும் ஆபத்திலோ அல்லது விபத்திலோ முடிவடைவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது... கடந்த வருடம் ஜனவரி மாதம், தாஜ்மஹாலைக் கண்டுரசிக்க காரில் பயணப்பட்டுக் கொண்டிருந்த 20 முதல் 22 வயதையொத்த இளைஞர்கள் சிலர், வேகமாக வந்துக் கொண்டிருக்கும் ரயிலின் முன்நின்று செல்பி எடுக்க முயன்று ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.....