அன்புள்ள அப்பாவிற்கு,
நான் பிறந்தது முதலே என்னை ஒரு சுமையாகத் தான் கருதி வந்துள்ளீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்... நான் பெண்ணாகப் பிறந்தது தவறா..? இல்லை உங்களுக்கு பெண்ணாகப் பிறந்தது தான் தவறா ..? என்று பலமுறை சிந்தித்து இருக்கிறேன்... ஆனால் முழுமையாக சிந்திக்க முடியாமல் இரண்டுமே பெருந்தவறு என்ற முடிவுக்கு வந்த பல இரவுகள் என் வாழ்க்கையில் இன்னும் இருட்டாக இருக்கின்றன...
நான் பெண்ணாகிப் போன போது, எனக்கு செலவாகிப் போகிறது என்று வருந்தினீர்கள்... இவள் வயதுக்கு வரவில்லை என்று யார் அழுதார்கள் என்று என் காதுபடவே பேசினீர்கள்.. ஆனால் மாமியார் வீட்டில் மரியாதையாக சீர் செய்யவில்லை என்று அவர்களிடம் மல்லுகட்டி நின்றீர்கள்.. நான் பெண்ணாகப் பிறந்துவிட்ட அவமானத்தில் கூனிக் குறுகி நிற்க, பிள்ளை எப்படி வெட்கப்படுகிறது பாரு.." என்று என் அம்மா மற்றவர்களின் கவனத்தைத் திசைத் திருப்பி விழியோரம் வழிந்த கண்ணீர்த் துளிகளினால் என்னை ஆசிர்வாதம் செய்தாள்... ஒருவேளை அவளும் இந்த வேதனைகளை அனுபவித்திருப்பாளோ என்னவோ...
வயதுக்கு வந்துவிட்டாய்.. இனி படிப்பெல்லாம் வேண்டாம் என்றீர்கள்.. படிக்கும் ஆர்வம் இருந்தாலும், அப்பா நம் பாதுகாப்புக்காகத் தானே சொல்கிறார் என்று பெருமிதம் கொண்டேன்... ஆனால் அடுத்த சில நாட்களிலேயே வேலைக்குப் போகச் சொன்னீர்கள்... அம்மா நெஞ்சு பொறுக்காமல், ஏன்...? எதற்கு...? அவள் வேலைக்குப் போக என்ன அவசியம்..? என்று கேட்டாள்... எதிர்த்து கேள்விக் கேட்கிறாயா..? என்று நீங்கள் அறைந்ததில் அவளின் இடது காது கேட்காமலேயே போய்விட்டது.. அந்த பயத்திலேயே நான் கேள்வி ஏதும் கேட்காமல் வேலைக்கு வந்துவிட்டேன்...
சென்னையில் இங்கு, ஒரு துணிக்கடையில் வேலை செய்துக் கொண்டிருக்கிறேன்... நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன... மாதந்தோறும் ஒரு நாள் கண்டிப்பாக போன் செய்து விடுவீர்கள்.. சம்பளம் போட்டுவிட்டார்களா... அனுப்பி விட்டாயா என்று கேட்டுவிட்டு உடனே போனைத் துண்டித்து விடுவீர்கள்.. ஒரு நாள் கூட, "நீ நல்லா இருக்கியா.. சாப்பிட்டியா... வேலை ரொம்ப கஷ்டமா இருக்கா" ன்னு ஒரு வார்த்தை கேட்டதில்லை...
நான் கதறி அழாத நாட்கள் இல்லை.. கண்ணீர் படாமல் என் தலையணை எனக்கு தாலாட்டு பாடியதில்லை... அழுது அழுது, தலையணை நினைந்து நினைந்து, அதன் கணம் பன்மடங்கு கூடிவிட்டது... மென்பஞ்சு தலையணை இன்று பெரிய பாரங்கல் போல் சுமக்கிறது.. என் கண்ணீர் மென்பஞ்சையே கல்நெஞ்சம் ஆக்கிவிட்டது.. ஆனால், உங்கள் கல்நெஞ்சத்திற்கு அது புரியவில்லை..
உங்கள் அன்பிற்காக காத்திருந்து காத்திருந்து நான் காணாமல் போய்விட்டேன்... உங்கள் பாசத்தைத் தேடித் தேடி, நான் தொலைந்து விட்டேன்...
அடுத்த ஜென்மத்திலாவது, நீங்கள் விரும்பிய ஆண்மகனாக நான் பிறக்காமல், நான் விரும்பும் அப்பாவாக நீங்கள் இருக்க, அந்த ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன்...
இப்படிக்கு.,
மகள்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment