அந்த "மூன்று நாட்கள்"
தள்ளிப் போய்
உன் வருகையை
உணர்த்தின...
தொடர்ந்து வந்த
வாந்தியும் மயக்கமும்
உன் இருத்தலை
உறுதிப்படுத்தின...
பால்கனிகளின் படைப்பு
உன்னதமானது
மதிப்பு புரிந்தது
மரியாதை கூடியது...
பாவாடை நாடாவைக் கூட
பார்த்து பார்த்து பக்குவமாக
கட்டினேன்..
தொப்புள் கொடி பாதையைத்
தொட்டு தொட்டு
மெய் சிலிர்த்தேன்...
வயிற்றில் நீ எட்டி
உதைத்தால் வலியிலும்
ஆனந்தம் கண்டேன்...
இன்று
அதிக வலி கொடுக்க ஆரம்பித்துவிட்டாய்..
இதற்கு மேல் உன்னால் என்னை பார்க்காமல்
இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறாய்..
புரிகிறது.. எனக்கும் தான்...
நம் தொப்புள் கொடியை பிடித்து வெளியே வா...
உன் தலையை என் சிறிய துவாரங்களின் வழியே செலுத்து..
பச்சை வண்ண முகமூடி அணிந்திருப்பவர்களை பார்த்து பயப்படுகிறாயா..
பயப்படாதே நான் இருக்கிறேன்..
அவர்கள் மருத்துவர்கள்...
வெளிச்சம் கண்களை கூசுகிறதா..?
கண்களை மூடிக் கொள்...
என் வலியைப் பார்த்து கவலை கொள்ளாதே...
இது உன் பிறப்பிற்காக
நீ எனக்கு கொடுக்கும்
சன்மானம்...
நான் விரும்பி ஏற்கும்
வெகுமானம்...
வந்துவிட்டாய்.. இந்த உலகத்தில் பாதம் பதித்துவிட்டாய்...
உனக்கும் எனக்குமான பந்தம்
அந்த மூன்று நாட்கள் தள்ளிப் போனதில் தொடங்கி
பிறகு முந்நூறு நாட்கள் தள்ளி
தள்ளிப் போய்
உன் வருகையை
உணர்த்தின...
தொடர்ந்து வந்த
வாந்தியும் மயக்கமும்
உன் இருத்தலை
உறுதிப்படுத்தின...
பால்கனிகளின் படைப்பு
உன்னதமானது
மதிப்பு புரிந்தது
மரியாதை கூடியது...
பாவாடை நாடாவைக் கூட
பார்த்து பார்த்து பக்குவமாக
கட்டினேன்..
தொப்புள் கொடி பாதையைத்
தொட்டு தொட்டு
மெய் சிலிர்த்தேன்...
வயிற்றில் நீ எட்டி
உதைத்தால் வலியிலும்
ஆனந்தம் கண்டேன்...
இன்று
அதிக வலி கொடுக்க ஆரம்பித்துவிட்டாய்..
இதற்கு மேல் உன்னால் என்னை பார்க்காமல்
இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறாய்..
புரிகிறது.. எனக்கும் தான்...
நம் தொப்புள் கொடியை பிடித்து வெளியே வா...
உன் தலையை என் சிறிய துவாரங்களின் வழியே செலுத்து..
பச்சை வண்ண முகமூடி அணிந்திருப்பவர்களை பார்த்து பயப்படுகிறாயா..
பயப்படாதே நான் இருக்கிறேன்..
அவர்கள் மருத்துவர்கள்...
வெளிச்சம் கண்களை கூசுகிறதா..?
கண்களை மூடிக் கொள்...
என் வலியைப் பார்த்து கவலை கொள்ளாதே...
இது உன் பிறப்பிற்காக
நீ எனக்கு கொடுக்கும்
சன்மானம்...
நான் விரும்பி ஏற்கும்
வெகுமானம்...
வந்துவிட்டாய்.. இந்த உலகத்தில் பாதம் பதித்துவிட்டாய்...
உனக்கும் எனக்குமான பந்தம்
அந்த மூன்று நாட்கள் தள்ளிப் போனதில் தொடங்கி
பிறகு முந்நூறு நாட்கள் தள்ளி
இன்று முழுமைப் பெற்றிருக்கிறது...
கார்த்திக் பிரகாசம்...
Comments
Post a Comment