நல்ல மனிதர்களை கதையின் பாத்திரங்களாக்கி, முழுக்க முழுக்க நேர்மறை கருத்துகளையும், செயல்களையும் மட்டுமே அந்த பாத்திரங்களின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெயகாந்தன்...
கதையின் முக்கிய கதாபாத்திரமான ஹென்றியில் ஆரம்பித்து, தேவராஜன் துரைக்கண்ணு அக்கம்மா என அனைவருமே நேர்மறையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.. குறிப்பிட்ட கிராமத்தில் வாழும் எல்லா மனிதர்களும் நல்லெண்ணம் கொண்டர்வர்களாக இருப்பது கதையின் சுவாரசியத்தை அதிகரிப்பதுடன் மட்டுமில்லாமல், "வாழ்ந்தால் இதுப் போன்றதொரு கிராமத்தில் வாழ வேண்டும்" என்ற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது...
காதலுக்கோ, காமத்துக்கோ கதையில் கொஞ்சம் கூட இடமில்லை... எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாத, யாரைப் பற்றியும் கவலைக் கொள்ளாத, அதே சமயம் மற்ற மனிதர்களை மதிக்க தெரிந்த, உணர்ச்சிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க தெரிந்த ஒரு மனிதன் என மிக லேசாக ஆரம்பித்து, ஒரே வாசிப்பில் படித்து முடித்து விடும் அளவிற்கு சுவாரசியமாக, தன் நேர்க்கோட்டில் இருந்து சிறிதும் சிதறாமல் கதை நகர்கிறது...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment