வழக்கமாக தாமதமாக வரும் அந்த ரயில், அன்று வழக்கத்தை விட ரொம்ப தாமதமாக வந்தது.. மிகவும் பிடித்த "வைரமுத்து" எழுதிய "வைரமுத்து சிறுகதைகள்" புத்தகம் கையில் இருந்ததால் தாராளமாக காத்திருந்தான் மணி...
ஆயிரமாயிரம் பேர் சுற்றி இருக்கும் போது, அவன் மட்டும் தனியாக உலாவிக் கொண்டிருந்தான்.. அவனது நினைவுகள் லேசான இறகாய் பள்ளிக் காலத்தை நோக்கி பறந்து கொண்டிருந்ததன...
எவ்வளவு அன்பான ஆசிரியர்... எப்பொழுதும் சிரித்த முகமாகவே இருப்பாரே...
பள்ளிக்கு அனுப்ப முடியாது என்று நிறுத்திய போது, வீட்டிற்கே வந்து அப்பா, அம்மாவிடம் பேசியவராயிற்றே... அன்று அவர் வரவில்லை என்றால், என் படிக்கும் ஆசை வெறும் கனவாகத் தானே போயிருக்கும்...
எத்தனை முறை, எனக்காகத் தேர்வுக் கட்டணத்தைக் கட்டி இருப்பார்...
எல்லோருக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, எனக்கு சற்று அதிகம் கொடுப்பாரே... எது படித்தாலும் மனப்பாடம் என்ற மாயவலைக்குள் மண்டியிருந்த என்னை, புரிந்துப் படித்தால் மறத்தல் ஒருபோதும் நெருங்காது என்பதை உணர வைத்தவராயிற்றே...
இந்த புத்தகம் படிக்கும் பழக்கம் கூட, அவர் ஏற்படுத்திக் கொடுத்தது தானே.. பள்ளியில் படிக்கும் போது, அவர் படித்தப் புத்தகங்களை கையொப்பமிட்டு எனக்குத் தருவாரே...
ஒரு கட்டத்தில் வாழ்க்கையைப் பார்த்துப் பயந்து கொண்டிருந்த என்னை, வாழ்க்கையோடு போராட தன்னம்பிக்கை அளித்தவராயிற்றே... வகுப்பறையைத் தாண்டி அவர் சொல்லிக் கொடுத்த பாடங்கள்தானே இன்று வாழ்வை வழிநடத்திக் கொண்டிருக்கிறது...
என்னைப் போல் எத்தனையோ கேட்பாரற்றுக் கிடந்த மாணவர்களை, வாழ்க்கையில் கரையேற்றி விட்டிருப்பார்...
அந்த நல்ல மனிதர் இறந்துவிட்டாரே.. இரண்டு நாட்களுக்கு முன்கூட அவருடையே பணிஓய்வு விழாவில், அவரை பார்த்து கவிதை ஒன்றைப் படித்துக் காட்டிவிட்டு வந்தேனே...
மணியின் மனதில் ராமசாமி ஆசிரியர் பற்றிய பலபல நினைவுகள்
ஒவ்வொன்றாய் நீந்தி வந்தன... மனமும், கண்களும் கட்டுப்பாட்டை இழந்து துடித்தன...
இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு படித்துக் காட்டிய கவிதை வரிகளை ஒருமுறை வாய்விட்டு சொல்லிப் பார்த்தான்..
சுதந்திரமே சொந்தமாயினும்
காற்றுக்குத் தான்
ஓய்வுண்டோ...!
நேற்றனாலும்
நாளையனாலும்
நேரத்திற்குத் தான்
ஓய்வுண்டோ...!
இடம் மாறித் துடித்தாலும்
இதயத்திற்குத் தான்
ஓய்வுண்டோ...!
அமாவாசையோ பௌர்ணமியோ
கடல் அலைகளுக்குத் தான்
ஓய்வுண்டோ...!
பணிக்காலம் நிறைவானாலும்
பள்ளிச் சுவர்களில் எதிரொலித்துக்
கொண்டிருக்கும்

உங்கள் பாடங்களுக்கும்
பசுமை நினைவுகளுக்கும் தான்
ஓய்வுண்டோ...!
கண்ணீருற்று அவன் கன்னத்துக் குழிகளில் தேங்கி நின்றது...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment