"நான் கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்." அழுத்தமாக சொன்னாள் திவ்யா...
"முட்டாள் மாதிரி பேசாத திவ்யா.. சொன்னா புரிஞ்சிக்கோ..." "இவளுக்குச் சொல்லி கொஞ்சம் புரிய வை பிரியா" என்று தன் கனிந்த குரலில் கண்டிப்பாகச் சொன்னான் மணி..
"இதோ பாரு திவ்யா.. இன்னும் எவளோ நாள் நாங்க உயிரோட இருப்போம்னு தெரில.. நாளைக்கே நாங்க செத்து போய்டோம்னா உனக்கு யார் இருக்கா... உன்ன யார் கவனிச்சிப்பாங்க...எத்தன நாளைக்கு நீ தனியா வாழ முடியும்...
நாங்க உன் நல்லதுக்கு தான் சொல்லுவோம்னு உனக்கு தெரியும்ல... பையன், ரொம்ப நல்லவனா இருக்கான்... உன்ன நல்லபடியா பாத்துப்பான்... இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கோ மா திவ்யா.." என்று கண் கலங்கிக் கொண்டே சொன்னாள் பிரியா...
திவ்யாவிற்கு வார்த்தை வரவில்லை... தொண்டையில் சிக்கிக் கொண்டிருக்கும் வார்த்தைகளை கடினப்பட்டு மீட்டுச் சொன்னாள்...
என் கணவர் இறந்த நாளில் இருந்து , நான் விதவை என்று ஒருபோதும் உங்களால் உணர்ந்ததில்லை... என்னை மகள் போல் பார்த்துக் கொண்டீர்கள்... இருவரும் சத்தியம் செய்யுங்கள் "அடுத்த ஜென்மத்தில், நீங்கள் எனக்கு மாமனார் மாமியாராக இல்லாமல், அப்பா அம்மாவாக இருப்பீர்கள் என்று".. நான் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்கிறேன் என மணி, பிரியாவின் காலில் விழுந்து கதறி அழுதாள் திவ்யா...
மணியும், பிரியாவும் சிரித்தபடி சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கள் மகனின் போட்டோவை பார்த்து கண்ணீர் விட்டபடி திவ்யாவிற்கு சத்தியம் செய்தனர்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment