கல்லூரி சேரும் வரையுலுமே அம்மா தான் அவனை சினிமாவிற்கு கூட்டிச் செல்வாள்... தங்கைக்கு சினிமா என்றால் அவ்வளவு பிடித்தம் இல்லை.. அதனால் சினிமா விசயத்தில் அவனும் அம்மாவும் மட்டும் தான் கூட்டு...
மெயின் ரோட்டில் இருந்து பிரியும் சின்ன கிளை ரோட்டின் கடைசி ஓரத்தில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஸ்ரீமான் தியேட்டர்... சரியாக வீட்டில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் இருக்கும்... ஆண்கள் பெண்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து அமர வேண்டும்.. பால்கனி டிக்கெட் எடுக்கும் வசதியுள்ள பணக்காரர்கள் மட்டும் ஒன்றாக டிக்கெட் எடுத்து அமர்ந்து கொள்ளலாம்... பால்கனி டிக்கெட் 12 ரூபாய்.. பெஞ்சு டிக்கெட் 8 ரூபாய்.. தரை டிக்கெட் 3 ரூபாய்.. தரை டிக்கெட் குறைவாகத் தான் கொடுப்பார்கள்.. அதனால் 2 30 மணிக்கு தொடங்கும் படத்திற்கு 1 மணிக்கே கூட்டிச் சென்று விடுவாள்...மதிய சாப்பாட்டை டப்பாவில் கட்டிக் கொண்டு போன நாட்கள் கூட உண்டு...
அவன் ரஜினி காந்தை அளவு கடந்து நேசிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை... ஏனென்றால் அவன் அம்மாவிற்கு ரஜினி, விஜய் படங்கள் என்றால் அவ்வளவு விருப்பம்.. எழுந்து நின்று கைத்தட்டி விசில் அடிக்காத ஒரே குறை தான்..
படையப்பா படத்தில் ரஜினி, "மணிவண்ணனைப் பார்த்து எங்க அம்மா என்ன சொல்றாங்களோ அதான் கடைசி" என்று சொல்லும் வசனத்தில், "ரஜினி, ரஜினி தான்" என்று பெருமிதப்பட்டுக் கொண்டாள்.. படையப்பா படத்திற்கு இரண்டாம் முறை செல்லும் போது, "ரஜினி படம் மட்டும் தான் எத்தன தடவ பாத்தாலும் சலிக்காது" என்று சொல்லி அவன் அப்பாவின் கோவத்திற்கு ஆளானாள்..
ஷாஜகான் திரைப்படத்தின் கடைசி காட்சியில் விஜய் அழுதுக் கொண்டிருக்கும் போது அவளும் சேர்ந்து அழுதுக் கொண்டிருந்தாள்.. அப்பொழுது ஒரு தருணத்தில், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு "அந்த பொண்ணு இல்லனா என்னா வேற நல்ல பொண்ணா கிடைப்பா, நீ அழாத விஜய்ன்னு" சமாதானமெல்லாம் செய்தாள்...
வேலைக்கு வந்து முதன்முறையாய் இன்று, அவன் அம்மாவை சினிமாவிற்குக் கூட்டிச் செல்கிறான் என்றதும்,மனதில் பொக்கிஷமாய் புதைந்து கிடந்த பல நினைவுகள் மீண்டும் உயிர் பெற்றன...
அம்மா.. நேரம் ஆச்சு மா.. சீக்கிரம் வா... !!!
தோ. வந்துட்டேன் டா... போலாம்...
டேய்... ரஜினி படத்துக்குத் தானே...???
அவன் சிரித்துக் கொண்டே...., மொதல்ல வண்டில ஏறு மா...!!!
அவனும் அம்மாவும் வண்டியில் கிளம்பினர்...
கார்த்திக் பிரகாசம்...

Comments
Post a Comment