Skip to main content
அன்று காதலர்கள் தினம்..

மணி அவசரமாக அவசரமாக பிரியாவைப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தான்...

ஏற்கனவே "எப்போ தான்டா வருவ" ன்னு இரவில் இருந்து பத்து முறைக்கு மேல் போன் செய்து விட்டாள்...

பதிமூன்று வருடங்கள் நட்புக்குள் இருந்த அவர்களது உறவும், உணர்வும் மூன்று வருடங்களுக்கு முன்தான் காதலுக்கு இடம் பெயர்ந்தன..
சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள் பிரியா.. அவளது தந்தை இறந்த கால கட்டத்தில் தான், அவனது நட்பு அவளை தன் தோளில் அரவணைக்கத் தொடங்கியது...

பத்து வருடங்களாய் நண்பர்கள் தினத்தன்று தவறாமல் சந்தித்துக் கொண்டிருந்த அவர்கள், மூன்று வருடங்களாய் காதலர் தினத்தன்றும் தங்கள் கடமையைப் பின்பற்ற தொடங்கினர்.. இரு வீட்டின் சம்மதத்துடன் இருவரும் சுதந்திரமாய் காதலித்துக் கொண்டிருந்தனர்...

இந்த வருடம், எந்தவொரு காதலனும் காதலிக்குத் தந்திடாத ஒரு வித்தியாசமான பரிசைத் தரவிருப்பதாக பிரியாவிடம் மணி கூறியிருந்தான்...

அந்த எதிர்பார்ப்பின் மிகுதியால் நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்து கொண்டே இருந்தாள் பிரியா...

ஒருவழியாக பிரியாவின் வீட்டை அடைந்தான்... பைக்கின் ஹார்ன் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தாள் பிரியா.. இவன் அவளுக்குப் பிடித்த நீல நிறத்தில் சட்டை அணிந்திருந்தான்.. அவள் இவனுக்குப் பிடித்த "அரக்கு வண்ணத்தில்" சேலை அணிந்திருந்தாள்..

அழகான மௌனத்தில், இருவரின் கண்களும் தங்கள் காதலை முதல் முறை காண்பது போல, தங்களின் "காதலர் தின வாழ்த்துக்களை" காதலர்களின் அலைவரிசையில் பரிமாறிக் கொண்டிருந்தன... காதலில் மட்டும் தான் பல தடவை கழித்து பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போலவும், எல்லாம் பேசி முடித்தாலும் இன்னும் பேச ஏதோ இருப்பது போலவும் நிஜமும்,நிழலும் மாறி மாறி விளையாடிக் கொண்டிருக்கும்...அந்த விளையாட்டில் இருவரும் காதல் பிள்ளைகளாய் விளையாடிக் கொண்டிருந்தனர்...

"உள்ள வாப்பா..." பிரியாவின் அம்மா குரலில் இருவரின் காதல் அலைவரிசை தற்காலிமாக நிறுத்தப்பட்டது...

"இல்ல மா.. டைம் ஆச்சு... பிரியா வா போலாம்"... மணி அவசரபடுத்தினான்..
"மா.. நான் கிளம்புறேன்"" அவன் சொல்லி முடிக்கும் முன்பே, பிரியா பைக்கில் ஏறினாள்...

எங்கடா போகப் போறோம்...?

என்னடா கிப்ட் தரப் போற..? மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டே இருந்தாள்...

ஐந்து கிலோ மீட்டர் தள்ளிப் போய் அவன் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு தோப்புக்குள் பைக்கை நிறுத்தினான்... பையில் வைத்திருந்த "மரக்கன்று" ஒன்றை, ஏற்கனவே பரித்திருந்த குழியில் நட சொன்னான்.. அவளும் கேள்வி கேக்காமல், சொன்னதை செய்தாள்...

பிரியாவின் கண்கள் மணியையேப் பார்த்து கொண்டிருந்தன.. பின்பு மணி சொன்னான்... இந்த "மரக்கன்று" தான், நான் உனக்கு தரும் காதல் பரிசு... இதை ஒழுங்காகப் பராமரித்து மரமாக்க வேண்டியது உன் பொருப்பு.. இது தான் நம் குழந்தை... நம் முதல் குழந்தை.. ஒவ்வொரு காதலர் தினத்தன்றும், நாம் நமக்கென்று ஒரு குழந்தையை நட்டு வைத்துக் கொள்வோம்.. உனக்கு முன் நான் இறந்துவிட்டால் இந்த மரங்கள் உனக்கு நிழல் தரும்... ஒருவேளை எனக்கு முன் நீ இறந்துவிட்டால் இந்த மரங்கள் எனக்கு ஆறுதல் தரும்..

நாம் இருவரும் இறந்த பின்னர், இவை நம் பிள்ளைகளுக்கு உணவளிக்கும்.. வாழ்வாதாரத்தைப் பேணிக் காக்கும்.. மொத்தத்தில் நாம் இருந்து செய்ய வேண்டியதை, இந்த மரங்கள் நம் பிள்ளைகளுக்குச் செய்யும்..

இந்த மரக்கன்றுகள் நாளை பெரிய மரமாக வளர்ந்து, அவற்றின் கிளைகள் அசையும் ஒவ்வொரு அசைவிலும், தீராத நம் காதலின் தாகமும், பசுமையான நம் நட்பின் தருணங்களும் நிறைந்திருக்கும்... அவை வெளியிடும் ஒவ்வொரு துளிக் காற்றிலும் நம் இருவரின் மூச்சுக்காற்று ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும்...

பிரியா அழவில்லை ஆனால் அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது... அந்த கண்ணீர்த் துளியை தன் கைகளில் ஏந்திப் பிடித்தான்... ஏந்திய கண்ணீரை அந்த மரக்கன்றின் மண் பகுதியில் செலுத்தினான்...முதல் துளியை ருசித்த பரவசத்தில் மரக்கன்று சிலிர்த்தது...

மணியின் கண்ணீரை பிரியா துடைக்க, அவன் அவளை அணைக்க, அவளும் அவனை இறுகப் பற்றிக்கொள்ள வெட்கத்தில் தலைக் குனிந்தது மரக்கன்று...

கார்த்திக் பிரகாசம்...

Comments

Popular posts from this blog

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...

விடுதி வாழ்க்கை...!!!

கூண்டு போல அறை சிறகை ஒடிக்காத சுதந்திரம்...!!! நினைத்த நேரத்தில் தூங்கி நினைக்காத நேரத்தில் எழுவதை விட என்ன பெரிய சுதந்திரம்...!!! வாழ்க்கையிடம் நானோ என்னிடம் வாழ்க்கையோ வம்போ வாய்த் தகராறோ ஏற்படுத்திக் கொள்ள ஒருபோதும் நேரம் இருந்ததில்லை...!!! கையில் காசு இல்லை ஆதலால் கடனும் இல்லை...!!! கவலைகள் என்று ஏதுமில்லை களவுப் போக ஒன்றுமில்லை...!!! பீஸ் கட்டும் அப்பாவின் பீலிங்சை பகிர கூடவே இருந்த தோழி...!!! அடங்கிப் போகும் போது ஆறுதலுக்கும் மீறிப் போகும் போது அடிப்பதற்கும் தோள்பட்டையாய் இணைந்தே இருந்த தோழர்கள்...!!! கடலளவு துன்பங்களும் கானலாகிய மாயம் இம்மியளவு இன்பங்களும் இதமாய் மாறியது நியாயம்...!!! விடுதியில் இருந்தேன் பறவையாய்த் திரிந்தேன்...!!! மீண்டும் ஒருமுறை வேண்டும் அந்த விடுதி வாழ்க்கை...!!! கார்த்திக் பிரகாசம்...