Skip to main content

Posts

Showing posts from 2014

மறந்தேன்...!!!

பசிக்கு நீரைக் குடித்து வளர்ந்ததால் ருசியை மறந்தேன்..! அன்றாடங்காட்சி ஆதலால் அறுசுவை உணவுகளை மறந்தேன்..! ஆசைகளை இழந்து பழகியதால் பணத்தை மறந்தேன்..! தாழ்ந்துப்படுக்...
நொடிகளெல்லாம் நெடிகளாக ஆவியாகிக் கொண்டிருக்கின்றன அவளது நெருக்கத்தில்...!!! நிமிடங்களெல்லாம் நிஜத்தை மறந்து மீனை விட வேகமாக நீந்திக் கொண்டிருக்கின்றன அவளது நினைவில்...!!! நாட்களெல்லாம் நீ இல்லை நான் இல்லை என்று அலறியடித்து ஓடிக் கொண்டிருக்கின்றன அவளது உரையாடலில்...!!! வருடங்களெல்லாம் பாகுத்தன்மையற்ற நீரைப் போல வழிந்தோடிக் கொண்டிருக்கின்றன அவளது காதலில்...!!! கார்த்திக் பிரகாசம்... 
நடிகன் நாட்டை ஆளத் துடிக்கிறான்... நாட்டை ஆள்பவன் சிறந்த நடிகனாக திகழ்கிறான்.. கார்த்திக் பிரகாசம்...
மூக்குத்தியில் மொத்த அழகையும் முத்தமிழையும் ஒருசேர முடிந்து வைத்திருக்கிறாள்... அன்பாக அணைத்துப் பேசும் போது இயல் தமிழையும் கால் கொலுசு சிணுங்குவதைப் போல கொஞ்சிப் பேசும் போது இசைத் தமிழையும் பொய்யாக சண்டையிடுவதைப் போல நடிக்கும் போது நாடகத் தமிழையும் கற்பிக்கிறாள்... அந்த மூக்குத்தி அழகில் காதலில் மூழ்கிவிட்டேன் அவளின் மீதும் தமிழின் மீதும்... கார்த்திக் பிரகாசம்...
தன் பிறந்த மகளுக்காக குடியைக் கைவிடுவதாக மனைவிக்கு சத்தியம் செய்துவிட்டு தன் செல்ல மகளுக்கு 'மது'மி'தா' என்று பெயரிடுகிறார் அந்த பாசக்கார தந்தை..   கார்த்திக் பிரகாசம்..
தூக்கத்தைக் கெடுப்பதும் பின்பு துக்கத்தைக் கொடுப்பதும் காதலின் வழக்கம்.. கார்த்திக் பிரகாசம்..
வேலைக் கிடைக்காதவனெல்லாம் வேலைக்கு ஆகாதவன் என்று அர்த்தம் இல்லை... கார்த்திக் பிரகாசம்...

இசைக் காதலன்...

செவிகளிடம் சிநேகம் கொள்ள வந்த காற்று தன்னுள் ஒளித்து வைத்திருந்த இசையால் செவிகளை செழுமையாக்கி தன்னுடன் கட்டி அணைத்துக் கொண்டுவிட்டது... கட்டி அணைத்ததில் கட்டுப்பாட்டை இழந்த செவிகள் இசையோடு காதல் கொண்டுவிட்டன... கார்த்திக் பிரகாசம்...
கற்பனை உலகத்திலும் கனவுதான் கண்டுக்கொண்டிருக்கிறேன் அவளும் என்னைக் காதலிக்கிறாள் என்று.. கார்த்திக் பிரகாசம்....
சில்லறையில் சிக்கிக் கொண்டிருக்கிறது நம் மனிதநேயம்.. கார்த்திக் பிரகாசம். .
கற்பனை உலகத்திலும் கனவுதான் கண்டுக்கொண்டிருக்கிறேன் அவளும் என்னைக் காதலிக்கிறாள் என்று.. கார்த்திக் பிரகாசம்....

இசைக் காதலன்..

செவிகளிடம் சிநேகம் கொள்ள வந்த காற்று தன்னுள் ஒளித்து வைத்திருந்த இசையால் செவிகளை செழுமையாக்கி தன்னுடன் கட்டி அணைத்துக் கொண்டுவிட்டது... கட்டி அணைத்ததில் கட்டுப்பாட்டை இழந்த செவிகள் இசையோடு காதல் கொண்டுவிட்டன... கார்த்திக் பிரகாசம்...
புரியும் போது காதல் விளங்க முடியா கவிதை.. பிரியும் போது காதல் விடைத் தெரியா  விடுகதை.. கார்த்திக் பிரகாசம்...
ஒவ்வொரு உயிரும் தண்ணீர்க் குடம் உடைத்து உலகுக்கு வருவதால் தான் என்னவோ அதே உயிர் பிரியும் போதும் தண்ணீர் நிரம்பிய பானையை உடைத்து வழியனுப்புகின்றனர் போலிருக்கிறது.. கார்த்திக் பிரகாசம்..
தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் சாதிக்க முடியாத இலட்சியத்தை பணத்தாலும் பதவியாலும் எளிதில் சாதித்து விட முடிகிறது... கார்த்திக் பிரகாசம்..
கண்கள் கலக்கும் போது கருவாகும் காதல் காமத்தைக் கடக்கும் போது உயிர் பெறுகிறது.. பலருக்கு காதல் கருவிலேயே சிதைந்து விடுகிறது.. சிலருக்கு மட்டும் காதல் உயிராகி உறவாகிறது.. கார்த்திக் பிரகாசம்...
மகன்: ஏன்ம்மா இப்போ உப்புமா செஞ்ச.. அம்மா: எப்போ பாத்தாலும் தோசை,இட்லியே செய்யறன்னு நீ சொல்லவும் தான கண்ணு உப்புமா செஞ்சேன். மகன்: அதுக்கு ஏன் உப்புமா செஞ்ச.. எனக்கு பிடிக்காதுனு தெரியாதா. அம்மா: தெரியும் கண்ணு. இன்னைக்கு மட்டும் சாப்புடு. நாளைக்கு நான் வேற செய்றேன். மகன்: போ. எனக்கு ஒன்னும் வேணாம்.. நான் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிறேன்.. அம்மா: இரு கண்ணு. ஹோட்டல் போகாத. நான் பெரிம்மா வீட்டுக்குப் போய் மாவு வாங்கிட்டு வந்து தோசை ஊத்தி தரேன்.. மகன்: ம்ம்ம்.... சில வருடங்களுக்குப் பின்...   மகன்: மச்சி.. காசு இல்ல டா. நைட் சாப்புடறதுக்கு என்ன பண்றது.. நண்பன்: 10 ரூபா இருக்கா.. மகன்: இருக்கு டா. அதான் கடைசி. ஏன்..? நண்பன்: பேசாம ரவை வாங்கி ரெண்டு பேரும் உப்புமா செஞ்சு சாப்பிட்டுக்லாம்.. மகன்: (வெறுமையான சிரிப்புடன்) அண்ணா.. ரவை ஒரு பாக்கெட் கொடுங்க... ரவையைக் கிண்டினான் உப்புமா ஆனது. கிண்டின உப்புமா அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்தது... கார்த்திக் பிரகாசம்...
ஆண்டாண்டு காலம் ஆண்டு அனுபவித்து விட்டு அனைத்தையும் அள்ளிச் சென்றான்.. ஆங்கிலத்தை மட்டும் அன்பளிப்பாக விட்டுச் சென்றான் .. இன்று அவன் மொழியை பிழையின்றி பேசினால் தான் வேலை என்கிறார்கள்.. பிழைக்க வந்தவன் இன்னும்  நம் பிழைப்பை பிணைக் கைதியாக வைத்திருக்கிறான்... கார்த்திக் பிரகாசம்...
ஒருவனின் அறிவாளித்தனம் அனைவரையும் சோம்பேறிகள் ஆக்கி விடுகிறது... கார்த்திக் பிரகாசம்...
வாய்ப் பேச்சு வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறது "வாட்ஸ் அப்பின்" வருகையினால்.. முகப்பேச்சு முடங்கிக் கொண்டிருக்கிறது "முகப்புத்தகத்தின்" மோகத்தால்.. ஆட்டோ ஓட்டுனரிடம் அட்ரஸ் கேட்டு செல்லும் பழக்கம் பழசாகி விட்டது "கூகிள் மாப்பின்" ஆதிக்கத்தால்.. கார்த்திக் பிரகாசம்...    

தூக்கம்...

கடவுள் கொடுத்த கருணை கொடை.. வருகிறேன் வருகிறேன் என்று பாசாங்கு கட்டாமல் கூப்பிட்ட மேனிக்கு கண்ணுக்குள் வந்து ஊஞ்சலாடும் உறவு.. நாம் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் வருகிறதா இல்லை அது வருவதால் தான் நாம் அதை நினைத்துக் கொள்கிறோமா என்று குழப்பமடைய வைக்கும் "கண் குழந்தை".. அடிக்கடி இன்னொரு உலகத்திற்குக் கூட்டிச் சென்று ஆச்சரியங்களை அள்ளித் தந்து கற்பனை உலகத்தின் கடவுச் சொல்லைக் கடத்தி கண்ணுக்குள் காட்டும் "மெய் நண்பன்".. பணம் இல்லாதவனிடம் கூட தேடிப் போய் நலம் விசாரிக்கும் "ஒரே விருந்தாளி".. கார்த்திக் பிரகாசம்...

கழிப்பறை

  மகராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண். பெயர் சங்கிதா.. இவர் திருமணமாகி வந்த நாள் முதலே கணவர் வீட்டில் கழிப்பறையே இல்லை. அவசரம் என்றால் பக்கத்தில் இருக்கும் முள்ளுக் காட்டிற்குத் தான் செல்ல வேண்டும்..    திருமணமாகி இத்தனை வருடமாய் சகித்துக் கொண்டிருந்த சங்கிதா சில தினங்களுக்கு முன் தனது மகள் பெரிய மனுசி ஆனவுடன் தனது தாலியைக் கழட்டி விற்று தன் வீட்டில் கழிப்பறையைக் கட்டி முடித்திருக்கிறார்.. இது ஒரு குடும்பத்தின் பிரச்சினை மட்டும் இல்லை. அந்த கிராமத்தின் பிரச்சினை. இது போல பல கிராமங்கள் நம் நாட்டில் இருக்கின்றன.        "கோயில்களை விட கழிப்பறைகள் தான் முக்கியம்" என்ற விளம்பர வாசங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசை மட்டும் நம்பி பிந்நாளில் குறைக் கூறாமல் சமுக அமைப்புகளும் தொண்டு நிறுவனங்களும் மற்றும் நடிகர்களின் நற்பணி மன்றங்களும் மக்களுக்கு கழிப்பறை கட்டும் முயற்சி மேற்கொண்டால் வெகு நாட்களாக இந்த அடிப்படை வசதிக் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்... கார்த்திக் பிரகாசம்...
மனிதனின் மனம் ஒரு நல்ல பொதுநலவாதி... தன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முற்படும் போது கூட இதனால் மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தான் முதலில் யோசிக்கிறது.. கார்த்திக் பிரகாசம்...
மதத்தில் இல்லை ""மனிதம்""... மனசாட்சியில் இருக்கிறது.. மனிதம் வளர்ப்போம்.. கார்த்திக் பிரகாசம்...
உரிமை இல்லாதவளின் உறவுக்காக உறக்கம் கெட்டுத் தொலைகிறேன்... கார்த்திக் பிரகாசம்...
    கடந்த ஞாயிறு, வாழ்வில் மறக்க முடியாத நாளாக நின்று விட்டது. ஆட்டோகிராப் படத்தில் "ஒவ்வொரு பூக்களுமே" என்ற பாடலுக்கு புல்லாங்குழல் வாசித்த திரு.பெருமாள் அவர்களை நண்பர் (கார்த்திக் பாஸ்கர்) மூலமாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.     மிகவும் பணிவான அனைவரிடமும் கனிவாக பேசும் மிக அற்புதமான மனிதர். தன்னம்பிக்கையின் மொத்த உருவம்.. செய்யும் தொழிலை அந்த கடவுளை விட ஒரு படி மேல் வைத்துப் பார்க்கிறார். அவருக்கு அசாத்தியமான விஷயமான விஷயங்களையும் எளிதாக சாத்தியமாக்கிக் கொள்கிறார். அவர் மீது அனு தாபம் வரவில்லை ஏனென்றால் அவரால் பார்க்க இயலாது என்பது அவர் சொன்னால் மட்டுமே தெரியும். ஆனால் மாறாக அவர் மீது வியப்பு ஏற்பட்டது. பார்வை இல்லை என்ற குறையையேக் குறைப்பட வைத்துக் கொண்டிருக்கிறார்.    கண் முன்னே இருப்பவர்களையெல்லாம் காரணமே இல்லாமல் வெறுத்துக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், தான் இதுவரை கண்டிராத இனியும் காண முடியாத தன் தாய் மீதும் தன்னையே நம்பி வந்த மனைவி மற்றும் மகன் மீதும் அளவில்லா அன்பையும் பாசத்தையும் கொண்டிருக்கிறார்.. கார்த்திக...

அவள்..

அறிமுகமில்லா அழகி அவள்.. ஆபரணம் அணியா ஓவியம் அவள்...!! பரிச்சயம் இல்லா பால் நிலவு அவள்...!! கண்டப் பொழுதில் மெய்க் குளிர வைக்கும் சூரியன் அவள்...!! தொட்ட கணத்தில் சுட்டெரிக்கும் நெருப்பு அவள்...!! கண்களில் கதைப் பேசும் சிற்பம் அவள்..!! வளையல் கொலுசு சிணுங்கள்களில் மனதை மயக்கும் இசைஞானி அவள்..!! கோபத்தின் போது கொதிக்கும் கடல் அவள்..!! அன்பைக் காட்டும் போது பொழியும் மழை அவள்...!! என் மனதை அவளுக்கு அடிமைப் படுத்திய ராணி அவள்...!! பாசத்தால் என்னை ஆளும் இன்னொரு அன்னை அவள்...!! கார்த்திக் பிரகாசம்...

பூவும் பெண்ணும்

தாயின் தாலாட்டுப் பாடலில்                  குழந்தை ஒய்யாரமாக அவள் மடியில் சிணுங்கிக் கொண்டே உறங்குவது போல பூக்களின் மடியில் காற்றின் தாலாட்டு இசையில் வண்டுகள் சௌகரியமாக உறங்கிக் கொண்டிருக்கின்றன.. பெண் இன்னோர்  உயிருக்கு(வாண்டுகளுக்கு) தாயாகி பாலூட்ட "பூ"ப்பெய்துகிறாள்..   பூக்களோ வண்டுகளுக்கு தேனூட்டி தாயாகின்றன.. பூக்களுக்குத் தாய்மைப் பண்பு இருப்பதனால் தான் எப்பொழுதும் அதை விரும்புகின்றனர் போலிருக்கிறது ""பெண்கள்"" .. தன்னைப் போன்ற தாய்மைப் பண்பு இருக்கும் பெண்ணின் கூந்தலை அடைந்தாள் அது ஓர் மோட்சம் என்பதை  உணர்ந்து தான்  தன் இறப்பைக் கூட சிரிப்புடன் விரைந்து  ஏற்றுக் கொள்கின்றன போலிருக்கிறது ""பூக்கள்"".. கார்த்திக் பிரகாசம்.. .

ஆசிரியர் தினம்..

பகலில் தெரியாத வானத்து நிலவாய் வகுப்பறையில் நாங்கள்... எங்களை முழு நிலவாய் மாற்றிய இரவாய் எங்கள் ஆசிரியர்கள் ... நற் செயல்களை கற்பித்து,கல்வி அறிவை ஊற்றெடுக்க வைத்து மற்றும் சமுதாயத்தில் ஒரு அடையாளத்தைப் பெற ஊன்றுக்கோலாக உறுதுணையாக இருந்த எங்கள் வாசவி மேல்நிலை பள்ளியின் ஆசிரியர்கள் திரு.நௌசத் கான், திரு.இரத்தின வேல், திரு. செந்தில் குமார், திரு.கிருஷ்ண மூர்த்தி, திரு. வெங்கடேசன் , திரு. செல்வ கிருஷ்ணண், திரு. லஷ்மி நாரயணண், திரு.அர்த்தநாரி, திரு.நிர்மல் குமார், திருமதி.ஜெயந்தி, திருமதி. பானுமதி, திருமதி. சித்ரா, திருமதி. ஹெலன், திருமதி. காளிகாம்பாள், திருமதி. ஷீலா, திருமதி. கனிமொழி, திரு. சுகுமார், திரு.தியாகராஜன், திருமதி. ராஜேஷ்வரி, திருமதி. காயத்ரி, திரு.பெருமாள், திரு.சுப்ரமணி, திரு.திருநாவுக்கரசு என எங்களை பெற்றெடுக்காத பெற்றோர்களான ஆசிரியர்கள் அனைவருக்கும்  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. வாழ்த்த வயது தேவையில்லை மனது இருந்தால் போதும் .. உங்கள் பிள்ளைகள் நாங்கள் எங்களுக்கு அந்த மனதை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.. எளிதில் தொடர்பு கொள்ள முடியாத  தொலைவில் இருந்தாலும...

ஆசை

   நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் அச்சாணி. சாமானியன் முதல் சக்கரவர்த்தி வரை அனைவரையும்  எந்த நிலைக்கு வேண்டுமானாலும் ஆயுத்தப்படுத்தும் ஆயுதம். பட்டினியில் இருப்பவனுக்குக் கூட பஞ்சம் இல்லாமல் கிடைக்கும் ஒரே விஷயம் "ஆசை" மட்டும் தான்.    அத்தகைய நம் ஆசையை  நமக்குள் மட்டும் வைத்துக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. அதை நாம் சம்பந்தப்பட்டவர்களிடம் திணிக்கும் போது தேவையற்ற விரக்தி வெறுப்பு மற்றும் ஏமாற்றம் தான் மிச்சம்.    இதற்கு ஒரு சிறு உதாரணம் இன்றைய "தி ஹிந்து" நாளிதழில் "ஆளுக்கொரு ஆசை" என்ற தலைப்பில் வெளியான சிறுக்கதை..    திருமணம் முடிந்த தினம் இரவு மணப்பெண்ணை அவளுடைய தோழிகள் முதலிரவுக்காக அலங்காரம் செய்து தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். மணப்பெண்ணும் முதலிரவு பற்றிய பதற்றத்துடனும் அதை விட அதிதமான ஆர்வத்துடனும் காத்திருந்தாள். ஒரு சில நிமிடங்களில் மாமியார் வந்து தன் மருமகளிடம் ""இந்த வீட்டில் குழந்தை சத்தம் கேட்டு ரொம்ப வருஷம் ஆச்சு. அதனால எண்ணி பத்து மாசத்துல என் கையில ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடுத்து விடு"" என்று அ...
ஆசை காதலுக்கும் கனவு வேலைக்கும் பெரிய ஒற்றுமை உள்ளது.. இரண்டு விஷயங்களுக்காகவும்  வெகு நாட்கள் காத்திருக்க வேண்டும். கடைசியில் கிடைத்ததை ஏற்றுக் கொண்டாக வேண்டும். கார்த்திக் பிரகாசம்.
காடுகளை அழித்து கட்டடங்கள் ஆக்கிவிட்டு காற்றுக்காக காத்திருக்கிறோம்.. கார்த்திக் பிரகாசம்.. 
படித்த படிப்புக்கான வேலைக்குத் தான் போவேன் என்று நானும் ஒரு காலத்தில் அடம் பிடித்துக் காத்துக் கொண்டிருந்தேன்.. எனது துறைச் சார்ந்த வேலைக்காக போராடினேன். எனது போராட்டம் மாதக் கணக்கில் வருட கணக்கில் நீண்டுக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் குடும்பத்துக்காக அப்பா வாங்கிய கடனும், அப்பா கஷ்டப்படும் நிலையைப் பார்த்து அம்மாவின் கண்களில் வழிந்த கண்ணீரும் என்னை ஏதோ ஒரு வேலைக்குச் செல்ல துரத்தியது. பிறகு ஒரு கம்பெனியில் வேலை. அப்பாக்கும் அம்மாக்கும் சந்தோஷம். இன்று வருடங்கள் உருண்டோடிவிட்டன. இருந்தாலும் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி கொன்று கொண்டு இருக்கிறது. கார்த்திக் பிரகாசம்..
பணம் சம்பாதிக்க பயன்படும் கருவி அல்ல கல்வி. உலகத்தை ஆள கிடைத்த ஆயுதம். கார்த்திக் பிரகாசம் ..

அப்பா -- அன்றைய இளைஞன்

அரபு நாட்டில் அடிமையாக வாழ சொத்துப்பத்துகளோடுச் சேர்த்து தன் சொந்த பந்தங்களையும் அடமானம் வைத்துச் சென்றவன் அன்றைய இளைஞன்.. கார்த்திக் பிரகாசம். ..

காதல்

      காதல்: வார்த்தைகளால் மட்டும் முழு உணர்வுகளையும் வெளிப்படுத்த இயலாத ஒரு உணர்வு. வார்த்தைகளுக்கு வறட்சியை  ஏற்படுத்திவிட்டு நினைவுகளில் வெள்ளத்தை உண்டாக்கும் உறவு. ஒரு கட்டத்தில் வார்த்தைகள் மௌனமாகி கண்களை  உயிர்த்தெழுந்து பேச வைக்கும் மாயாஜாலம்.      காதலிக்கும் ஒவ்வொருவருக்கும் தன் காதலனுடன்/காதலியுடன் பல ஆண்டுக் காலம் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்று படித்த ஒரு செய்தி பல ஆண்டுக்காலம்  ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தால் தான் காதல் என்றில்லை என்பதை உணர வைத்தது. இன்னும் 10 மணி நேரம் தான் உயிர் வாழ்வான் என தெரிந்தும் தன் காதலனைக் கரம் பிடித்த ஒரு காதலி.       உடல்நிலை சரியில்லாமல் மருத்துமனையில் இருக்கும் தன் காதலன் இன்னும் 10 மணி நேரத்தில் இறக்கப் போகிறான் என்ற துக்கச் செய்தியை மருத்துவர்கள் வாயிலாக அறிந்தவுடன் உறவினர்களின் எதிர்ப்பையும் அறிவுரையையும் மீறி மருத்துவமனையிலேயே திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, அந்தப் பெண் படுத்தப்படுக்கையில்  இருக்கும் தன் காதலனை கரம் பிடித்துள...

இந்த வார "அம்மா" திட்டம்.

      போன வாரம் "அம்மா உப்பு" திட்டம் என்றால் இந்த வாரம் அதாவது நாளை முதல் "அம்மா மருந்தகங்கள்" தமிழ் நாடெங்கும் ஆரம்பமாம். இன்னும் எது எது "அம்மா" திட்டத்தில் கொண்ட வர போகிறார்களோ தெரியவில்லை.        கிண்டலுக்குத் தான் எல்லோரும்  ஒரு நாள் தமிழ் நாடும் அம்மா நாடு என்று ஆக்கப்படும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். போகிற போக்கைப் பார்த்தால் அதும் கூடிய சீக்கிரத்தில் நடந்திரும் போலிருக்கிறது.        பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வரும் போது காமராஜர் அதற்கு அவரது பெயரை வைத்துக் கொள்ளவில்லை.. அத்திட்டத்தை மேம்படுத்திய எம்ஜிஆர் அவர்களும் அவரது பெயரை வைத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த இரு மாமனிதர்களுக்கும் தெரியும் அது மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக செய்யப்படுகிறது அதற்கு தாங்கள் உரிமை கொண்டாட முடியாது என்று. ஆனால் இன்று அவர்களது பெயர்களைச் சொல்லி ஆட்சி செய்பவர்கள் என்னவென்றால் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் அவர்களது பெயரை வைத்துக் கொள்கின்றனர்..       அரசு ...
கடவுளின் மீது வைக்கும் நம்பிக்கையை விட காலத்தின் மீது அதிகம் வைக்கிறேன் என்னையும் ஒரு நாள் மன்னனாக்கும்... கார்த்திக் பிரகாசம்..
"பூவாய்" நம் காதல் "முள்ளாய்" உன் நினைவுகள்... கார்த்திக் பிரகாசம்..
 பெரிய  ENGINEER ஆக வேண்டும் என்ற பல பேருடைய கனவு வெறும் EXCEL SHEET க்குள் முடங்கி விடுகிறது.. கார்த்திக் பிரகாசம்..
என் நண்பனும் நானும் வெளியில் சென்றிருந்தோம். நாங்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க இரு வேறு குடும்பத்தினர் சந்தித்து கொண்டனர்.. அவர்கள் பேசியதை வைத்து பார்க்கும் போது ஏற்கனவே நன்கு அறிந்தவர்கள் என்பது தெளிவாக தெரிந்தது. வழக்கமான கேள்வி மற்றும் விசாரிப்புகள் முடிந்தவுடன் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளைப் பற்றி பேச ஆரம்பத்தினர். இரு குடும்பத்தினருமே  தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் அது இருக்கிறது இது இருக்கிறது  என்று பெருமிதம் அடைந்துக் கொண்டிருந்தனர்.. இறுதியில் பள்ளி கட்டணம் பற்றி ஆரம்பித்தனர். அவர்கள் பள்ளிக் கட்டணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தவுடன் எனக்கும் என் நண்பனுக்கும் தூக்கிவாரிப் போட்டது. ஒருவர் என்னவென்றால் தன் பிள்ளை படிக்கும் பள்ளியில் தான் கட்டணம் மிகக் குறைவு அதுவும் வெறும் 42000 என்கிறார். அதற்கு  மற்றொருவர் என்னவென்றால் இங்கு 54000 ஆனால் பிள்ளைகளுக்கு சிங்கிங் டான்சிங் ஸ்விம்மிங் என்று அனைத்தும் கற்றுத் தருகிறார்கள் என்கிறார். என் மனதில் "அட பாவிகளா, எங்கப்பா எனக்கு கல்லூரிக்குக் கூட இவளவு செலவு செய்யவில்லையே" என்ற குரல் ஒலித்தது. இருந்தாலும் இவளவு செலவு...
காலம் கருணையற்றது... ஒவ்வொரு வினாடியும் சாமானியன் முதல் சக்கரவர்த்தி வரை ஒவ்வொருவரையும் தண்டித்துக் கொண்டிருக்கிறது.. கார்த்திக் பிரகாசம்..
தாயின் கருவறையை மிஞ்சிய கருணை இல்லம் ஒன்றுமில்லை.. கார்த்திக் பிரகாசம்...
நாளை 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.. சாதனைப் படைத்த தன் பிள்ளைகளைத் தூக்கி வைத்து கொண்டாடும் அதே பெற்றோர்கள் அவர்கள் தோல்வியுறும் போது தோள் கொடுத்து அவர்களுக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். உன்  சாதனை வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பதை தன் பிள்ளைகளுக்கு  உணர வைக்க வேண்டும். மதிப்பெண் மட்டும் வாழ்கையை நிர்ணயப்பதில்லை என்ற உண்மையை முதலில் பெற்றோர்கள் உணர்ந்து அதை தன் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.. அப்பொழுது தான் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மதிப்பில்லாமல் போகும் மதிப்பெண்காக மனதில் பல கனவுகளை சுமந்து கொண்டிருக்கும் இளம் பிஞ்சுகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும்  சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க முடியும். நாளை மறுநாள் வரும் செய்தித்தாளில் குறைவான மதிப்பெண் அல்லது  தேர்வில் தோல்வி என்ற காரணத்தால் மாணவன் அல்லது மாணவி தற்கொலை என்ற செய்தி வரக்கூடாது  என்ற பயம் கலந்த எதிர்ப்பார்ப்புகளுடன்.. கார்த்திக் பிரகாசம்..
தந்தை தன் மகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது, மகள்: அப்பா நாம் எங்கே செல்கிறோம்..? அப்பா: பள்ளிக் கூடத்திற்கு.. மகள்: பள்ளிக்கூடத்திற்கு எதற்காக செல்ல வேண்டும்..? அப்பா: நல்ல பண்புகளைக் கற்றுக் கொள்வதற்காக.... மகள்:  நல்ல பண்புகள் என்றால் எவை..? அப்பா: சாதி மதம் இனம் பார்க்காமல் அனைவரிடமும் அன்பு செலுத்துவது. பிறகு நன்கு படித்து அறிவை வளர்த்துக் கொள்வது.. மகள்: அப்போ சாதி முக்கியம் இல்லையா..? அப்பா:இல்லவே இல்ல மா.. மகள்: அப்புறம் ஏன் நேத்து பக்கத்துக்கு வீட்டு மாமாவிடம் என்னை பள்ளியில் சேர்ப்பதற்கு "சாதி சான்றிதழ்" கேட்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தீர்கள். அப்பா: ...........?? இது தான் இன்றைய நிலைமை.. ""சாதிகள் இல்லையடி பாப்பா"" என்று கற்பிக்கப்படும் அதே பள்ளியில் தான் "சாதி சான்றிதழ்" அவசியம் என்ற கட்டாயமும் உள்ளது. பாரதியார் பாடிய பாடல்களும் பெரியார் தோற்றுவித்த அறிவு சிந்தனைகளும் வெறும் மதிப்பெண்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நடைமுறையில் பயன்படுத்த பல்வேறு வழிகளில் தடைகள் உள்ளன.. இந்த தடைகள் நீங்கா வரை ...
    சென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இடங்களில் "தியாகராய நகரும்" ஒன்று. சொல்லப்போனால் சென்னையின் மிக முக்கியமான பகுதி. காலை முதல் இரவு வரை மனித தலைகளால் நிரப்பப்பட்டு இருக்கும். உயரமான கட்டிடத்தில் இருந்து பார்த்தால் வரிசையாக தெரியும் மனித தலைகள் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச் சாலை போல காட்சியளிக்கும். இன்னும் பண்டிகை நாட்கள் என்றால் சொல்லவே தேவை இல்லை.அந்த இடத்தில் டீக்கடை வைத்திருப்பவன் கூட கோடிஸ்வரன் ஆகி விடுவான். அந்த அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதும்.     துணிக் கடை,நகைக் கடை என்று மக்கள் வெள்ளமாய்த் திரண்டு இருப்பர். நகைக் கடைக்கு வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருப்பவன் "இவனுக்கெல்லாம்  மட்டும் எப்படி காசு கிடைக்குது" என்று பெருமூச்சு விட்டுவிட்டு செல்வான்.     மக்கள் அவர்கள் வாங்கும் பொருள்களின் கவர்கள், திண்பண்டங்களின் பேப்பர்கள்,கடையில் கொடுத்த விளம்பர பேப்பர்கள் மற்றும் வழியில் கொடுக்கப்பட்ட விளம்பர அட்டைகள் என அனைத்துக் குப்பைகளையும் அந்த இடத்திலேயே எரிந்து விட்டு சென்று விடுவார்கள். அப்போது ஏதும் தெரியாது...
நம் நாட்டில் பேச்சுலர்க்கு  வீடு கிடைப்பதும், படித்தவனுக்கு வேலைக் கிடைப்பதும் ரொம்ப கஷ்டம்.. கார்த்திக் பிரகாசம்..
முதல் நாளிலேயே 65000 பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை.. நம்மலலாம் ஆயிரம் அப்துல் கலாம் வந்தாலும் திருத்தவே முடியாது.. கார்த்திக் பிரகாசம்..
இன்றைய சூழ்நிலையில் பைனான்சில் பணம் போட்டவன் நிலைமையும் பொறியியலில் பட்டம் பெற்றவன் நிலைமையும் ஏறக்குறைய ஒன்று தான்.. இருவருக்கும் மிச்சம் இருப்பது என்னவோ ஏமாற்றமும், யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மன நிலையும் மட்டுமே.. இரண்டுக்குமே காரணம் நம் மனதின் ஓரத்தில் ஒன்றி இருக்கும் பேராசை. பெரும்பாலனோர் தன் பணத்தைப் பாதுக்காக்க  மட்டும் பைனான்சில் பணம் போடுவது கிடையாது அவன் தரும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தான்.. அதே போல பொறியியலைத் தேர்வு செய்யும் அதிகப்படியானோர் அறிவை வளர்த்துக் கொள்ள  அத்துறையை விரும்புவது அல்ல அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு தான்.. அறிவை வளர்த்துக் கொள்ளப் படிக்காமல் சம்பளத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு எத்துறையைத் தேர்வு செய்து படித்தாலும் அத்துறையில் வேலையில்லாப்  பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.. கார்த்திக் பிரகாசம்..
நம் நாட்டில், அதிகாரம் இல்லாமல் செய்தால் அது தவறு மற்றும் தண்டனைக்குரியது.. அதுவே, அதிகாரத்தோடு செய்தால் அது சட்டம்... கார்த்திக் பிரகாசம்....
மற்றவர் மீது அன்பு செலுத்த முடியாதவனுக்குத் தான் உண்மையான ஊனம்.. கார்த்திக் பிரகாசம்...
காதலும் நட்பும் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்க முடியாத உறவுகள்.. ஆதலால் தான் தோழன்/தோழியிடம் காதலையும் காதலன்/காதலியிடம் நட்பினையும் எதிர்ப்பார்க்கிறது மனசு.. கார்த்திக் பிரகாசம். ..
மதம் மாறுவது அவரவர் விருப்பம் ஆனால் மதம் மாறுவது என்பது நம்முள் வேற்றுமை உணர்வு மேலோங்கி நிற்பதற்கு அப்பட்டமான உதாரணம்.. கார்த்திக் பிரகாசம்...

கவலை

"எனக்காக கவலைப்படு" "எனக்காக கவலைப்படு" என்று மனதிற்குள் கவலைகள் முந்தியடித்துக் கொண்டிருக்கின்றன.. எதற்காக கவலைப்படுவது என்று தெரியவில்லை. ஆதலால் கவலைப்படுவதையே நிறுத்தி விட்டேன்.. கார்த்திக் பிரகாசம்...
நான் உன் அன்பிற்காக மட்டும் காத்திருந்த வேளையில் மற்றவர்கள் என் மீது செலுத்திய அன்பினை உதாசினப்படுத்தினேன் அதன் விளைவு இன்று நீ இன்னொருவரின் அன்பிற்காக காத்திருக்கிறாய் என்னை உதாசினப் படுத்திவிட்டு... கார்த்திக் பிரகாசம்..
மதச் சார்புள்ள கட்சி மற்றும் மதச் சார்பற்ற கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளுமே ஒரு விதத்தில் இறைவனின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.. ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை ஆனால் இன்று வரை அரசியல் கட்சிகள் அதற்காக அரும்பாடு பட்டு மக்களை ஏழ்மையாகவே வைத்து அவர்களிடம் இறைவனைக் காண முயற்சி செய்துக் கொண்டிருக்கின்றன..  கார்த்திக் பிரகாசம்..

பரிசு

    நாம் ஒருவருக்கு செய்த உதவியால் நமக்கு கிடைக்கும் மிக அற்புதமான பலன் என்பது என்றாவது ஒரு நாள் அவர் மீண்டும் நமக்கு உதவுவார் என்பதில் இல்லை. அது அவர்களால் நமக்கு ஏற்படும் உணர்வு சம்மந்தபட்டது. பணத்துக்கு பதில் பணம்.. உதவிக்கு பதில் உதவி என்பதில் இல்லை மகிழ்ச்சியும் மன திருப்தியும் . இதை மிக அழகாக ஒரு விளம்பர காணொளி மனதில் செலுத்திவிட்டு சென்றது.     ஒருவன் தினமும் தான் செல்லும் பாதையில், அவன் காணும் முடியாதவர்களுக்கும் வேண்டுபவர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே செல்கிறான். வழியில் வீணாக தண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது. அதை பூந்தொட்டிக்கு பயன்படுமாறு செய்கிறான். அதே போல் வயதான பாட்டிக்கு அவர் நடத்தும் தள்ளுவண்டி கடையை பள்ளத்தில் ஏற்ற உதவுகிறான்.     இப்படியாக செல்லும் போது ஒரு பெண் குழந்தையும் அவளுடைய தாயும் தங்கள் முன் ஒரு வாக்கியத்தை எழுதி வைத்து உதவிக் கேட்டு (நம்மூரில் பிச்சை) அமர்ந்து இருக்கின்றனர்.அதை பார்த்தவுடன் தன்னில் இருக்கும் பணத்தில் பாதியைக் குழந்தையின் கையின் கொடுத்துவிட்டு செல்கிறான். மறுநாளும் அதே இடத்தில அந்...
ரத்தம் உறிஞ்சும் போட்டி வைத்தால் அட்டைப் பூச்சிகளை மிஞ்சிவிடும் போலிருக்கிறது இந்த ஐ.டி கம்பெனிகள்.. கார்த்திக் பிரகாசம் ..
செல்லும் பாதை முட்களால் நிறைந்திருந்தால்  வலித்தாலும் பரவாயில்லை என்று மேற்கொண்டுச் செல்லலாம் ஆனால் பாதை உடலைத் துளைத்த தன் சொந்த பந்தங்களின் உயிரைப் பறித்த துப்பாக்கிக் குண்டுகளால் நிறைந்திருக்கிறதே அவர்களின் வாழ்க்கை என்ன செய்வது.. கார்த்திக் பிரகாசம்..
தன்னை இழந்து பிறருக்கு ஒளியுட்டுகிறேன் என்று மெழுகுவர்த்தி பெருமைப்பட முடியாது ஏனென்றால் அது படைக்கப்பட்டதே அதற்காகத் தான். அதே போல நாம் நம்மை ஈன்று வளர்த்த பெற்றோரைப் பேணிக் காப்பது நம் கௌரவமோ பெருமையோ இல்லை. நம் உயிரை ஈன்றாவது நம்மை ஈன்றோர் உயிரைக் காப்பாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை. கார்த்திக் பிரகாசம்..

பணம்

    என்ன செய்கிறோம் எதற்காக செய்கிறோம் என்பதை மறக்க வைக்கும் போதை.சொந்த பந்தங்களையும் உறவு முறைகளையும் தூக்கி ஏறிய துணிய வைக்கும் சகுனி. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனை ஆட்டி வைக்கும் மந்திரம். வாழ்வதற்கு பணம் வேண்டும் என்ற காலம் போய் வாழ்வதே பணத்திற்குத் தான் என்ற காலம் வந்துவிட்டது.    சமீபத்தில் படித்த ஒரு நிகழ்வு பணத்தின் மீதான கோபத்தை இன்னும்  அதிகபடுத்தியது.     நடுத்தர வயதுள்ள ஒரு நபர் கையில் ஆறு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை தூக்கிக் கொண்டு பேருந்தில் ஏறினார். மிகுந்த தடுமாற்றத்துடன் ஏறிய அவரை நோக்கி பேருந்து நடத்துனர் டிக்கெட் டிக்கெட் என்று கத்திக் கொண்டே வந்தார். ஆனால் அந்த நபர் எந்த ஒரு அசைவும் இல்லாமல் எதுவும் பதில் அளிக்காமல் இருந்தார். இது அந்த பேருந்து நடத்துனரை எரிச்சல் அடைய செய்தது.கோபத்துடன் "யோவ் டிக்கெட் என்றார்". நினைவு திரும்பிய அவர் தன் சட்டைப்பையில் ஒளிந்துருந்த ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.     யாருடனும் எதும் பேசாமல் அமைதியாக வந்து கொண்டிருந்த அவர் ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார். அவர...

வாடகை சைக்கிள்..

  சிறு வயது நினைவுகளை அவ்வப்போது மனதில் அசைப்போடுவது எப்போதுமே ஒரு இனம் புரியாத சந்தோஷம் தான் . பசுமரத்தாணிப் போல நெஞ்சில் பதிந்த பதிக்கப்பட்ட தருணங்கள் . அதில் ஒரு தருணத்தை நினைவுக் கூரும் வாய்ப்பு " தி ஹிந்து " நாளிதழில் திரைப்பட இயக்குனர் திரு . பாண்டிராஜ் அவர்கள் எழுதிய " பிளாஷ் பாக் " கட்டூரையைப் படிக்கும் போது ஏற்பட்டது .    ஆறாவது ஏழாவது படிக்கும் காலக்கட்டங்களில் விடுமுறையின் போது பாட்டி வீட்டிற்குச் செல்வதற்காக காத்திருக்கும் நாட்கள் ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட நாட்கள் . தாத்தா பாட்டியை பார்க்க   வேண்டும் என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும் அங்கு செல்ல வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது என்னவோ அங்கு கிடைக்கும் "" வாடகை சைக்கிள் "" க்காக தான் .    முழு ஆண்டுத் தேர்வு முடிந்த இரண்டு மூன்று நாட்களில் அம்மாவிடம் அடம் பிடித்து பாட்டி வீட்டிற்குச் சென்று விடுவேன் . விடுமுறை என்றாலே பாட்டி வீடு தான் . எங்கள் வீட்டில் இருந்து ...

கண்கள்..

    1 கோடியே 20 லட்சம். இது அரசோ அல்லது ஏதோ ஒரு தனியார் நிறுவனமோ செய்த ஊழல் அல்ல. உயர் அதிகாரி வாங்கிய லஞ்சமும் அல்ல. இது நம் இந்திய திரு நாட்டில் உள்ள பார்வை அற்றவர்களின் எண்ணிக்கை. ஆம். 1 கோடியே 20 லட்சம்.      இவர்களின் வாழ்க்கை  தினமும்  தொடங்குவதும் முடிவதும் இருளில் தான். இவர்களுடைய அன்றாட தேடல்களும் கேள்விகளும் கேள்விக்கான பதில்களும் இருளில் தான் புதைந்து உள்ளன. வாழ்வில் வெளிச்சத்தையே உணராதவர்கள்.இருந்தும் தன்னம்பிக்கையோடு வாழ்ந்துக் கொண்டிருப்பவர்கள்.       கண் எதிரே ஒருவர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது அதை கண்டுக் கொள்ளாமல் இருப்பது கூட பார்வை இல்லாததுக்கு சமம். நல்ல விதமாக அந்த ஆண்டவன் நமக்கு கண் பார்வை அளித்துள்ளான். நாம் உயிரோடு இருக்கும் வரை அதை பயன்படுத்திக் கொண்டு நம் வாழ்வு முடிந்த பிறகு மற்றவர்களுக்கு உதவுமாறு வழிவகை செய்தால் அவர்களுடைய வாழ்வும் ஒளி பெறும்.        நம் உயிர் உட்பட இந்த உலகில் எந்த ஒரு பொருளும் விஷயமும் நமக்கு சொந்தமானவை அல்ல. ஒரு கட்டத்தில் இந்த உயிரே...

முதல் சே(வே)லை..

     நண்பன் ஒருவன் பிரபல கம்பெனியின்  நேர்முகத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தான். அதன் ஒரு பகுதியாக "மறக்க முடியாத தருணம்"  என்ற தலைப்பில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு தருணத்தை ஒரு பக்க அளவில் தயார் செய்து வைத்திருந்தான் நேர்முகத் தேர்வுக்காக.. அதை அவன் எனக்கும் நண்பர்களுக்கும்  விவரித்தான். ஆனால் என் மனம் அதில் லயிக்கவில்லை. நான் என்னுள் புதைத்து  வைத்திருந்த மறக்க முடியாத தருணங்களை ஒவ்வொன்றாக அசைப் போட ஆரம்பித்தது என் மனம்.      அதில் மிகவும் முக்கியமான ஒன்று. இது நம்  பல பேருடைய வாழ்கையில் அனேகமாக ஏற்பட்டிருக்கும். பட்டப் படிப்பு முடித்தவுடன் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். அதுவும் வெளி ஊருக்கு. முதன் முறையாக வீட்டை விட்டு வெளியே 350 கிமீ கடந்து சென்னைக்கு .அப்படி இப்படி என்று அலைந்து  ஒரு வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 6250. பிடிக்காத வேலை என்ற போதும் மிகவும் அலைந்து கிடைத்த வேலை என்பதால் விடவும் மனமில்லை. பிடிக்காத வேலை என்பதாலோ என்னவோ முதல் மாதம் முடிய ஏதோ ஒரு வருடம் ஆனது போல் இருந்தது.     சம்பளம் ...