Skip to main content

Posts

Showing posts from 2015

வருடத்தின் கடைசி நாள்...!!!

இந்த வருடம் இது வரை... *அளித்த அனுபவங்கள் ஆகாயம் வரை...!!! *அடைந்த அவமானங்கள் போதுமான வரை...!!! *கொண்ட கவலைகள் கானலாகும் வரை...!!! *சந்தித்த சந்தோசங்கள் சாம்பலாகும் வரை...!!! *கண்ட தோல்விகள் வெற்றி பெறும் வரை...!!! *பெற்ற வெற்றி மீண்டும் தோல்வி வரும் வரை...!!! *ஏமாற்றங்கள் எதிர்பார்க்கும் வரை...!!! *எதிர்பார்ப்புகள் ஏமாறும் வரை...!!! *நீங்கா நினைவுகள் நெஞ்சிருக்கும் வரை...!!! *உண்டான நட்பு உயிர் பிரியும் வரை...!!! கார்த்திக் பிரகாசம்...
உன் மௌன இரைச்சலினால் என் மனதில் கண்ணீர் ஓலங்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஏழைப் பெண்ணின்  நெற்றியில் வீற்றிற்கும் ஒற்றைப் பொட்டு போல யாதுமில்லாமல் அனாதையாக  இருக்கும் வானை ஆடம்பரம் இல்லாமல்  அலங்கரித்துக் கொண்டிருக்கிறது பௌர்ணமி நிலவு...!!! கார்த்திக் பிரகாசம்...
மணிக்கு முப்பது வயதாகி விட்டது.. அவன் பெண் பார்க்காத இடம் இல்லை. நல்ல கம்பெனியில், அதிக சம்பளம் கொடுக்கக் கூடிய வேலையில் இருந்தும் அவனுக்கு பெண் தர யாரும் முன் வரவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. மணிக்கு ஐந்து வயதிருக்கும் போதே அவனது பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். ஐந்து வயதிலேயே அனாதையான மணியை, அவனது உறவினர்களும்  கை விட்டனர். பெற்றோரையே இறந்த பிறகு, தன்னைக் கைவிட்ட  உறவினர்களுக்காகப் பெரிதும் கவலைப்படாமல் அந்த ஊரை விட்டே வந்து விட்டான் மணி. ஊரை விட்டு வந்த மணி, ஒரு டீக்கடையில்  வேலைக்கு சேர்ந்தான். போகப் போக அந்த டீக்கடையே அவனுக்கு நிரந்தர ஆறுதலானது.. டீக்கடையில் வேலை செய்யும் ஒருவரின் உதவியுடன் பகுதி நேர பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தான்.. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தான். பெரிய கல்லூரியொன்றில் உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பு மணிக்குக் கிடைத்தது. வேலைச் செய்த டீக்கடையில் இருந்து விலகிக் கல்லூரி சேர்ந்தான். கல்லூரி இறுதி ஆண்டில் நல்ல கம்பெனியில் வேலைக் கிடைத்தது. நல்ல வேலைக் கிடைத்து விட்டது. அடுத்து என்ன..! அவனுக்கென்று வாழ்...

சுனாமி நினைவு தினம்...

எங்கள் பசியை ஒருபோதும் தீர்க்க முடியாதென்று உன் பசியை ஒரே நாளில் தீர்த்துக் கொண்டாயோ...??? உயர்ந்தெழுந்த ஆழிப் பேரலைகள் உயிரை அழிக்கப் போகும் போர்ப் பறைகளென அறியாமல் போனோமே...!!! தாயே தன் பிள்ளைகளைக் கொல்லத் துணிவாளென கனவிலும் கண்டுணர்ந்ததில்லையே...!!! ஜலத்தினால் சாந்தியாய் இருந்த எங்கள் வாழ்வு ஜலத்திலையே சமாதியடையுமென்று ஜென்மத்திலும் நினைக்கவில்லையே...!!! கருணை உள்ளம் கொண்டே கடல் தாயே...!!! நீ அள்ளிச் சென்ற என் தந்தையிடம் சொல் உன் மகள் அங்கு அனாதையாய் அழுதுக் கொண்டிருக்கிறாளென்று...!!! நீ தூக்கிச் சென்ற என் தாயிடம் சொல் உன் மகள் பெரிய மனுஷி ஆனது கூட தெரியாமல் தெரியப்படுத்த சொந்தமும் இல்லாமல் தெருக்களிலே திரிந்துக் கொண்டிருக்கிறாளென்று...!!! நீ சுழட்டிச் சென்ற என் சகோதரனிடம் சொல் உன் சகோதரி சண்டைப் போட ஆளில்லாமல் காற்றிடம் தனியாக கதைப் பேசிக் கொண்டிருக்கிறாளென்று...!!! கடல் மாதாவே...!!! சொந்தங்களை இழந்து இப்பொழுது தான் மீண்டு வந்துக் கொண்டிருக்கிறோம் இதுப் போன்ற சோதனைகளைத் தர ஒருபோதும் நீ மீண்டும் வந்து விடாதே...!!! கார்த்திக் பிரகாசம்....
"இஸ்லாமியர்களெல்லாம் தீவிரவாதிகள் அல்ல.. எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் அல்ல" என்பதை உலகுக்கு உரக்க உரைக்கும் சம்பவமொன்று கென்யாவில் நடந்துள்ளது. கென்யாவில் பேருந்தை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். பேருந்தில் கிறித்துவர்களும், இஸ்லாமியர்களும் இருந்துள்ளனர்.. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த போகின்றனர் என்று யூகித்த பேருந்தில் இருந்த இஸ்லாமியர்கள், தங்கள் வைத்திருந்த உடைகளை உடனடியாக கிறித்துவர்களுக்கு அணியக் கொடுத்துள்ளனர். பேருந்தில்  ஏறிய தீவிரவாதி, இஸ்லாமியர்கள் தனியாகவும் கிறித்துவர்கள் தனியாகவும் நிற்கும் படி கையில் துப்பாகியுடன் மிரட்டியுள்ளான். அதற்கு மறுத்த இஸ்லாமியர்கள், 'சுடுவதாக இருந்தால் எங்கள் அனைவரையும் ஒன்றாக சுடுங்கள் அல்லது விடுதலை செய்வதாக இருந்தாலும் எங்கள் அனைவரையும் ஒன்றாக விடுதலை செய்யுங்கள்' என்று கூறியுள்ளனர்.. இதனால் வெறுப்படைந்த தீவிரவாதிகள், உங்களை பிறகு பார்த்து கொள்கிறேன் என்று கிறித்துவர்களைப் பார்த்து எச்சரிக்கை செய்து விட்டு பேருந்தில் இருந்து இறங்கி சென்றுள்ளனர்.. பேருந்தில் இருந்த இஸ்லாமி...
மேடு பள்ளங்கள் தடுக்கும் போதும் கல் பாறைகள் தாக்கும் போதும் எவ்வித சலனமும் இன்றி ஆற்றின் போக்கில் அடித்துப் போகும் இலையைப் போல் அவமானங்கள் அரங்கேறும் போதும் சந்தோசங்கள் சங்கடங்கள் சாய்க்கும் போதும் தருணங்களில் மூழ்கி விடாமல் உடைந்து வீழ்ந்து விடாமல் வீழ்ந்தாலும் தளர்ந்து விடாமல் சகல சூழ்நிலைகளையும் சந்(சா)தித்து உலவினால் வாழ்க்கை சமுத்திரத்தில் நம் சங்கமத்திற்கென்றும் தனிப் பாதை தானாக தோன்றும்...!!! கார்த்திக் பிரகாசம்...
சுயநிலை மறந்து தன் கனவுகளில் திளைத்திருப்பது வாழ்வதை விட சுகமானது...!!! கார்த்திக் பிரகாசம்...
குண்டுக் குழிகளில் குதித்திறங்கி கர்ப்பம் கலைந்த காரிகையின் வயிறாய் குறை(கரை)ந்து போனது பேருந்தின் முன் சக்கர வட்டகை...!!! கார்த்திக் பிரகாசம்...

காற்று...

சுத்த காய்கறிகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்த காலம் போய், இப்பொழுது சுத்தமானக் காற்றை ஏற்றுமதி செய்யும் காலம் வந்துவிட்டது. சுத்தமான காற்றை பிற நாட்டிலிருந்து வாங்கி சுவாசிக்கும் அளவிற்கு அவசியம் ஏற்பட தொடங்கிவிட்டது என்றால் நம்ப முடிகிறதா...! நம்பித்தான் ஆக வேண்டும். ஆம். தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் சீனாவிற்குத் தான் இந்த நிலை. தொழில் துறையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும், கூடவே காற்றும் பெருமளவில் மாசடைந்து வருகின்றது. அதிகரித்து வரும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையினாலும், வாகன பயன்பாட்டாலும் அம்மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் "விடாலிட்டி ஏர்" என்ற கனடா நாட்டு நிறுவனம் பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் போன்ற அந்நாட்டு மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது. ஏற்கனவே நம் நாட்டில், தங்கள் அணைகளில் உள்ள தண்ணீரை பகிர்வதிலும், உற்பத்தி செய்த மின்சாரத்தைக் கொடுப்பதிலும், புது அணைக் கட்டுவதிலும் மாநிலங்களுக்குக்கிடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு கொண்டிருக்கிறது.. இதில், இனி வரப் ப...
மூன்று வருடங்களுக்கு முன் டெல்லி தலைநகரில், ஓடும் பேருந்தில் சில சமூக துரோகிகளால் கற்பழிக்கப்பட்டு, ஆடையின்றி சாலையில் தூக்கி எறியபட்டாள் ஒரு பெண்.. அந்த கொட்டும் குளிர்ச் சாமத்தில், பெண்ணாகப் பிறந்ததைத் தவிர வேறெந்த பாவமும் அறியாத ஒரு மலர், அதன் இலையோடு சேர்த்து கிள்ளி எறியப்பட்டது... மூன்று வருடங்களாய் "நிர்பையா" என்று ஊடகங்களால் அறியப்பட்ட அந்த மலரின் பெயரை, நேற்று நடந்த மூன்றாம் ஆண்டு இரங்கல் கூட்டத்தில், அந்த பெண்ணின் உண்மையான பெயரை, அவருடைய தாயார் ஊடகங்களின் முன்னால் முதன் முறையாக அறிவித்தார்... ஆறு தீயவர்களால் பாதியிலேயே அணைக்கப்பட்ட அந்த தீபத்தின் பெயர் "ஜோதி சிங்". இந்திய வரலாற்று புத்தகத்தின் சில பக்கங்களை இந்த பெயர், செந்நீரால் நிரப்பபட்ட செங்கோலால் சிதைத்து விட்டது... காலங்கள் ஓடிவிட்டன காயங்கள் ஆறிவிட்டன ஆனால் தழும்புகள் மறையவில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
அலுவலக நேரங்களில் ஆளுநர் மாளிகையில் இருந்து  அண்ணா பல்கலைகழகத்தைக் கடப்பதிலையே சென்னை வாசிகளின் அரை ஆயுட் காலம் முடிந்து விடும் போலிருக்கிறது.அதிலும் டைடல் பார்க்கைத் தாண்டி யாராவது செல்ல வேண்டும் என்றால் காலையில் வீட்டிலிருந்து கிளம்பு போது தங்கள் இஷ்ட தெய்வத்தைக் கும்பிட்டு விட்டு தான் வர வேண்டும். இன்னைகாவுது அலுவலகத்திற்குச் சீக்கிரம் செல்லலாம் என்றால் முடியவில்லை. சரி. மாலையில் அலுவலகம் முடிந்தாவுது வீட்டை   சீக்கிரம் அடையலாம் என்றால் அதுவும் முடியவில்லை.. பேருந்தும், போக்குவரத்து நெரிசல்களுமே, சென்னை வாசிகளின் சராசரி ஆயுட் காலத்தில் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.. கார்த்திக் பிரகாசம்...
பயன்படவில்லை என்பதை விட சிலர் பயன்படுத்தபடுவதில்லை என்பதே நிதர்சனம்...!!! கார்த்திக் பிரகாசம்...

பீப் பாடல் - சலசலப்பு

நடிகர் சிலம்பரசன் பெண்களைப் பற்றி பாடிய அந்த பாடல் வலைத்தளத்தில் வெளியான நாள் முதல் அந்த பாடலுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலைத்தள வாசிகளிடையே தினம்தினம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.. ஒருபுறம் பாடல் பிடித்திருந்தால் கேளுங்கள். பிடிக்காவிட்டால் விட்டுவிட்டு வேற வேலையைப் பாருங்கள் என்று சில நபர்களால் கருத்து சொல்லப்பட்டு வரப்படுகிறது. மறுபுறம் மாதர் சங்கம், பெண்கள் அமைப்பு என்று பெண்களை இழிவாகவும், கொச்சை வார்த்தைகளாலும் பாடியதற்காக சிலம்பரசன் மீது எதிர்ப்புகளும் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தை ஒரு நடிகர் சமந்தப்பட்ட தனிப்பட்ட பிரச்சனையாக மட்டும் எடுத்து கொள்ள முடியவில்லை. இதை ஒரு சமூக பிரச்சனையாகத் தான் காண முடிகிறது. நம் நாட்டை பொறுத்தவரையில், நடிகர் என்பவரை வெறும் நடிகராக மட்டும் மக்களால் பார்க்கபடுவதில்லை. தனக்கு பிடித்த நடிகரை தன் குடும்பத்தில் ஒருவராகவும், அந்த நடிகர், படத்தில் சொல்வதையெல்லாம் உயிர் மூச்சாக கருதி, வாழ்க்கையில் பின்பற்றுபவர்கள் தான் நம் நாட்டில் ஏராளம். தன் வீட்டின் சொந்த சுப நிகழ்ச்சி அழைப்பிதல்களிலும்,பேனர்களிலும் கூட தனக்க...
மணியும் பிரியாவும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தனர்.. மணி பிரியாவின் மீது உயிரையே வைத்திருந்தான். பிரியாவும் மணியை தன் வாழ்வில் கிடைத்த மிக பெரிய பொக்கிஷமாக நினைத்தாள்.. பிரியாவின் தந்தை, அவர்களின் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் இருவரும் பிரிய நேர்ந்தது.. பிரியாவின் பிரிவை ஏற்க முடியாத மணி, தினமும் கதறி அழுதான். தன்னை பிரிந்ததற்காக பிரியாவைத் தினம்தினம் திட்டி தீர்த்தான்.. வருடங்கள் வயதுக்கு வந்த பெண்ணின் முகப்பருக்களைப் போல வேகமாக முதுமை அடைந்தன. பிரியாவின் நினைவிலிருந்து ஓரளவு மீண்டு வந்திருந்த மணி வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.. அவர்கள் அழகான குழந்தையையும் ஈன்றனர். மெல்ல மெல்ல பிரியாவை  முற்றிலுமாக மறந்த மணி, தொழிலில் சிறந்து விளங்கினான்.. சொத்துக்கள் பல சேர்த்தான்.. ஒரு நாள், மணிக்கும் மரணம் அவன் வீட்டைத் தேடி வந்தது. மரணப் படுக்கையில் மணி, இந்த வாழ்கையை அளித்ததற்காக கடவுளுக்கு நன்றி சொன்னான். தன் மனைவியைச் சந்திக்கும் முன் வரை, தொழிலில் தோற்று இருக்கிறேன்.. இவள் இல்லை என்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை என்று நினைத்த பெண்ணை இழந்திருக்கிறேன...
இரக்கமில்லா மழையினால் இறக்கங்களிலெல்லாம் மழை வெள்ளம்...!!! கார்த்திக் பிரகாசம்...
அவள் அப்படியொரு அழகு...!!! அவளுக்கு அவ்வளவு அறிவு...!!! அவள் அழகில் அடங்காத அறிவு தான் உண்டோ...?? அவள் அறிவில் வியக்காத அழகு தான் உண்டோ...?? அவள் அறிவினில் அழகானவள்...!!! அவள் அழகிலும் ஓர் அறிவானவள்...!!! கார்த்திக் பிரகாசம்...
மகனுக்கு அமெரிக்காவில் வேலை... இத்தனை நாளாய் அப்பாவிற்கு ரொம்பத் தான் பெருமை... ஆதலால் தான் என்னவோ, இன்று அவர் இறந்து கிடக்கும் போது அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூட அவரது மகனால் வர இயலவில்லை... தன் மகன் அமெரிக்காவிற்குச் சென்று  வேலை செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்ட தந்தை, தான் இறக்கும் போது தன்னோடு மகன் இருக்க வேண்டும் அல்லது தன் இறுதி ஊர்வலத்திற்கு அவன் வர வேண்டுமென்று ஆசைப்படவில்லை போலிருக்கிறது.. தான் பிறந்த போது தன்னை முதல்முறையாக தொட்டிலில் தூக்கிப் போட்ட தந்தையை, அவர் இறந்த போது கடைசியாக சுடுகாட்டில் தூக்கி போட மகனால் முடியவில்லை... மகன் சம்பாதித்து அனுப்பிய பணமெல்லாம் வீட்டில் உள்ள பீரோ முழுவதும் நிறைந்திருக்கின்றன. என்ன..! பாவம்..! அவற்றிற்கு அழத் தெரியவில்லை... மகனோ அமெரிக்காவில் அப்பாவை நினைத்து அழுது கதறுகிறான்.. அவரது பாதங்களை தன் தலையில் வைத்து தொழத் துடிக்கிறான்.. ஆனால் என்ன அவனின் கண்ணீர்த் துளிகளைக் கண்டுக்கொள்ள கூட அங்கு ஆள் இல்லை... உடனடியாக கிளம்ப பதறுகிறான். அவன் நேரம், விமானத்தில் இடம் கிடைக்கவில்லை.. இரண்டு நாட்கள் கழித்துத் தான் கிளம்ப முடியும். மகன் வரும் ...

திருவண்ணாமலை பயணம்...!!!

     முதல் முறையாய் திருவண்ணமலைக்கு நண்பர்களுடன் பயணம் மேற்கொண்டிருந்தேன்.. இதற்கு முன் சென்றதில்லை என்பதால் கிளம்புவதற்கு முன் இருந்தே கோயிலைப் பற்றியும் மற்றும் கிரிவலம் பற்றியும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்து கொண்டே இருந்தன...     காலை 3 30 மணிக்குக் கோயிலை அடைந்ததும் 4 15 க்கு தொடங்கிய கிரிவலத்தை சரியாக 6 30 மணிக்கு முடித்துவிட்டோம்..    கிரிவல பாதை மொத்தம் 14 கிமீ.. வழி நெடுகிலும் சிறியவர் முதல் பெரியவர் வரை ஏராளமான பக்தர்கள், தீபத்தை தரிசித்துக் கொண்டே நடந்துக் கொண்டிருந்தனர்..    கிரிவல பாதை பெரும்பாலும் மரங்களால் சூழ்ந்திருந்ததால் ரம்மியான சூழல் நிலவியது. அதிலும் அங்கு வீசும் காற்றில் நிரம்பியிருந்த மூலிகை மணத்தை, சுவாசிக்க சுவாசிக்க ஒரு புது விதமான புத்துணர்ச்சி உண்டாகியது..    நடக்க நடக்க நீண்டு கொண்டே இருந்த பாதைச் சுற்றி முடிக்கும் வரை ஒரு போதும் அலுப்பை ஏற்படுத்தவில்லை. எப்பொழுது முடியும் என்ற ஏக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.. மாறாக அது முடிவைத் தேடாத பயணம் போல அமைந்தது..    மொத்தத்தில்...

நவம்பர் 22...

  வேலைத் தேடி அவ்வப்போது வந்து போன நாட்கள் போக, சென்னையில் வேலைக்கென்று சேர்ந்து இன்றோடு முழுதாக மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன..   வேலை முக்கியமா..? இல்லை சம்பளம் முக்கியமா..? என்ற யோசனைக்குக் கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல், வேலை தான் முக்கியம் என்று ஒருமனதாக முடிவெடுத்து, நவம்பர் 22,2012 அன்று ரூபாய் 6500 சம்பளத்திற்கு ஒரு சிறிய கம்பெனியில் சேர்ந்த நினைவுகள் மயில் தோகையைப் போல மனதில் விரிகின்றன... கார்த்திக் பிரகாசம்...
சந்தேகத்தின் மீதான அதித நம்பிக்கையும் நம்பிக்கையின் மீதான கடுகளவு சந்தேகமும் கூட தோல்விக்குத் தான் தோள் கொடுக்கும்...!!! கார்த்திக் பிரகாசம்...

சென்னை காதலன்...!!!

வந்தவர்களையெல்லாம் வாழ வைத்து விட்டு அவர்கள் பல பேரின் வாயில் இன்று வசைபட்டுக் கொண்டிருக்கிறாய்...!!! ஏற்கனவே மழையினால் சிதைந்து விட்ட சூழ்நிலையில் ஊட்டி வளர்த்த பலரின் வார்த்தைகளால் இன்னும் சித்ரவதை அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்..!!! வக்கற்று நின்ற போது வாழ நம்பிகையூட்டி என்னை வாழ்த்தியது நீ மட்டும் தான்...!!! இன்று நீ கலக்கமுற்று நிற்கும் போது உன் மீது வெறுப்பை உமிழ்பவன் நானல்ல...!!! நான் எப்பொழுதும் உன்னை காதலிக்கிறேன்.. ஆம்..!! நான் ஒரு சென்னை காதலன்...!!! கார்த்திக் பிரகாசம்...

முதல் முறை...!!!

முதல் முறை என் தெருவைத் தாண்டிச் சென்றேன்.. உன் சாதி என்னவென்று கேட்டார்கள்...!!! முதல் முறை என் மாவட்டத்தைத் தாண்டிச் சென்றேன்.. உன் மதம் என்னவென்று கேட்டார்கள்...!!! முதல் முறை என் மாநிலத்தைத் தாண்டிச் சென்றேன்.. உன் தாய் மொழி என்னவென்று கேட்டார்கள்...!!! என் நாட்டைத் தாண்டிச் சென்றேன்.. முதன் முறையாக என்னை ""இந்தியன்"" என்று ஒப்புக் கொண்டர்கள்..!!!. ஆங்கில வலைத்தலத்தில் படித்தது... கார்த்திக் பிரகாசம்...
     ரயில் பயணம் எப்பொழுதுமே சில சுவாரசியமான அனுபவங்களை ஏற்படுத்தும்.. அதனாலேயே ரயில் பயணம் என்பது இதுவரையில் சுகமானதாகவே இருந்து கொண்டிருக்கிறது.     இரண்டு நாட்களுக்கு முன்பு மேற்கொண்ட ரயில் பயணம் கூட பல விதமான அனுபவங்களை ஏற்படுத்தியது.. கூடவே சில தாக்கங்களையும் ஏற்படுத்தியது..     பொதுவாக ரயில் பயணத்தின் போது பல புது மனிதர்களையும், சில வயதான அல்லது சில மாற்றுத்திறனாளிகள் பிச்சைக் கேட்டு வருபவர்களையும் காண நேரிடும்..     ஆனால் அன்று சற்று வித்தியாசனமான முறையில் இருவர் உதவிக் கேட்டு வருவதைக் காண முடிந்தது..     முதலில் ஒரு கர்ப்பமான பெண் தன் இடது கையை வயிற்றில் வைத்தவாறே உதவிக் கேட்டு வந்தார். பயணித்தவர்களில் சிலர் தங்களது சட்டைப் பையில் தீவிர தேடுதல் வேட்டை நிகழ்த்தி சில சில்லறை நாணயங்களைக் கொடுத்தனர். ஒரு சிலர் ஒன்னும் இல்லை என்று பிரக்ஞை செய்து அனுப்பினர்.    அந்த கர்ப்பிணிப் பெண் சென்ற சில மணி நேரங்கள் கழித்து வேறொரு பெண்மணி ஒரு இளம்பெண்ணுடன் உதவிக் கேட்டு வந்தார். தன் மகள் ஒரு ஏழைப் பெண் என்றும், அவளின்...
அப்பாவின் எதிர்பார்ப்பும் மகனின் யதார்த்தமும் என்றுமே ஒன்றிணைய முடியாத ஒரே இலக்கிற்கான ஒரே திசையில் பயணிக்கும் இரு வெவ்வேறு தண்டவாளங்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
    சந்திரா வேலைக்குச் செல்ல மிக  தாமதமாகிவிட்டது..  ஒரு ஆளாக மகனின் திருமண வேலைகளை செய்து கொண்டிருப்பதால் அன்று எப்பொழுதும் செல்லும் நேரத்தை விட வெகு தாமதமாகி இருந்தது..     பதற்றத்துடன் அவள் வீட்டினுள் நுழையும் போதே ராணியின் கண்களில் பட்டுவிட்டாள்.. ராணியின் வீட்டில் தான் சந்திரா வேலைப் பார்க்கிறாள்..     ஏற்கனவே சந்திராவின் வருகைக்காகக் காத்திருந்த ராணி அவளைப் பார்த்ததும் கோவமாக திட்டினாள்.. தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டு விட்டு சமையல் அறைக்குச் சென்றாள். சந்திரா எப்பொழுதும் தாமதமாக வருபவள் அல்ல.. ஆனாலும் ராணி திட்டியதற்காக அவள் வருந்திக் கொள்ளவில்லை. ஏனென்றால் அந்த தெருவில் யாருமே வேலை தராத போது ராணி மட்டும் தான் பெரிய மனதோடு அவளுக்கு வேலைத் தந்தாள்..    அதனால் எப்போதுமே சந்திராவிற்கு ராணியின் மீது பற்றும் மரியாதையும் அதிகமாக இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு ராணி சந்திராவிடம் ஒருபோதும் பரிவு காட்டியதில்லை..    சமையலறைக்குள் சென்ற சந்திராவைப் பின் தொடர்ந்து அன்றைய வேலைகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு முடிக்கும்படிச் சொல்ல...
வாடகை வீட்டில் வாழ்பவனின் கனவுகளில் கடன் பட்டாவது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை...!!! சொந்தமாக வீடு வாங்கியவனுக்கு ஒரு நாளாவது  கடனில்லாத கனவு வர வேண்டும் என்ற ஆசை...!!! கார்த்திக் பிரகாசம்...
வாழ்க்கையில் தேடி வந்த தோசங்களுக்கிடையில் மனிதன் நாள் தோறும் நாடிச் செல்லும் ஒரே தோஷம் சந்"தோஷம்"...!!! கார்த்திக் பிரகாசம்...
விரும்பி வந்தவள் இல்லை ஒரு கயவனை நம்பியதால் விற்கப்பட்டவள்...!!! உன்னை என் மகள் போல்  கவனித்து கொள்வேன் என்றான் அன்று என் நன்றியை கண்ணீரால் அவனுக்கு காணிக்கையிட்டேன்...!!! ஆனால் இப்பொழுது தான் புரிகிறது அவன் சொன்ன மகளின் அர்த்தம் "விலைமகள்" ...!!! வந்தவர்களின் கால்களையெல்லாம் தொட்டு காப்பாற்ற கெஞ்சினேன்...!!! ஆனால் அவர்களுக்கு தன் மகளைப் போல் தன் மனைவியைப் போல் தன் சகோதரியைப் போல் தன் தாயைப் போல் நான் ஒரு பெண்ணாக தெரியவில்லை சுகம் தரும் பொருளாகத் தான் தெரிந்தேன்...!!! அவர்களுக்கு விந்தணு வெளிப்பட்ட பிறகு கிடைக்கும் சுகம் மட்டுமே தெரிந்ததே தவிர என் கண்களில் வெளிப்படும் கண்ணீருக்கான காயங்கள் தெரியவில்லை...!!! என்னை விற்ற கயவன் ஒரு ஆண்மகன்...!!! என்னை போன்ற அறியாப் பெண்களை அறிந்து இதை தொழிலாக செய்பவன் ஒரு ஆண்மகன்...!!! தினம்தினம் என்னை தேடி வந்து அலைபவன் ஒரு ஆண்மகன்...!!! ஆனால் இந்த சமுகம் எனக்கு மட்டும்  இட்ட பெயர் " விபச்சாரி "...!!! பெண்களின் உடல் விற்பனை பொருளல்ல ...!!! கார்த்திக் பிரகாசம்...
தீபாவளி வந்துவிட்டது.. **மகனுக்கு புது மொபைல் வாங்க வேண்டும் என்ற கவலை...!!! **மகளுக்கு வட இந்திய டிசைன் சுடிதார் வாங்க வேண்டும் என்ற கவலை...!!! **மனைவிக்கு எக்ஸ்சேஞ் ஆபரில் வேற வாஷிங் மிஷின் வாங்க வேண்டும் என்ற கவலை...!!! **அப்பாவிற்கு யார்கிட்ட கடன் வாங்குவது என்ற கவலை...!!! கார்த்திக் பிரகாசம்...  
கண்ட கனவெல்லாம் நினைவானது கடைசியாக கண்ட கனவில்...!!! கார்த்திக் பிரகாசம்...  
புத்தகம் பருகும் புத்துணர்ச்சியும் தே(ன்)நீர் தருகும் அனுபவங்களும் சொக்க வைக்கும் சுகங்களின் சொர்க்கம்... கார்த்திக் பிரகாசம்...
மணி பத்தானது...!!! மனமோ பைத்தியமானது...!!! தேர்வறையில் நான்...!!! கார்த்திக் பிரகாசம்...
"பிடிக்கும்" அதிகபட்சத்தின் குறைந்தபட்ச வெளிப்பாடு... "பிடிக்காது" குறைந்தபட்சத்தின் அதிகபட்ச வெளிப்பாடு... கார்த்திக் பிரகாசம்...
பார்க்கும் முன்னே பழகி விடுவது தாயின் முகத்தில்... பார்த்த உடனே பாழாகி விடுவது கண்ணியின் முகத்தில்... கார்த்திக் பிரகாசம்...

அக்டோபர் 15..

விஞ்ஞான அறிவால் உலகத்தையே வியக்க வைத்த இந்திய மாணவர்களுக்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்ந்த டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த தினம்... கார்த்திக் பிரகாசம்...

நண்பனுக்கு...

மீசைக் கூட எட்டிப் பார்க்கா வயதிலேயே நட்பு தன் பிஞ்சு பாதங்களை நமக்குள் எட்டுவைக்க ஆரம்பித்துவிட்டது...!!! எதிர்பார்க்கவில்லை நம் நட்பின் பாதங்கள்  எதிர்காலத்தையும் எதிர்த்து நிற்குமென்று...!!! நமக்குள் ஏன் இந்த ஒற்றுமை...!!! இது சாத்தியமானது நம் நம்பிக்கையென்னும் நட்பினிலா அல்லது நட்பு என்ற நம்பிக்கையினிலா...!!! மொத்தத்தில் கருவுற்றிருந்த காலம் நம் நட்பை சுகப் பிரசவம் செய்துவிட்டது.. இனி அந்த நட்பென்னும் குழந்தையை நல்ல முறையில் வளர்த்து காலத்தைக் கர்வம் கொள்ள வைக்க வேண்டியது நம் கடமை...!!! கார்த்திக் பிரகாசம்...
எழுதவோ படிக்கவோ தெரியாத தாயைப் பற்றி மகன் தன் நன்றியுரையில் முதல் வாக்கியமாக எழுதுகிறான்.. "" என் முதல் ஆசிரியைக்கு "" சமர்ப்பணம்... கார்த்திக் பிரகாசம்...
விடையில்லா விடயத்திற்கு ஆயிரக்கணக்கான கேள்விகள்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஆங்கிலத்தில் படித்த ஒரு அழகிய கதை.. தமிழில், குழந்தைகளுக்கான பள்ளியொன்றில் குழந்தைகளுக்கு ஒரு சிறிய  போட்டி நடத்த ஆசிரியர்களால் திட்டமிடப்பட்டது..  போட்டியின் தலைப்பாக "அப்பா எனக்காக செய்ததில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம்" என்று அறிவிக்கப்பட்டது.. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு பிடித்த, தன்னை கவர்ந்த தந்தையின் விஷயங்களை தங்களுக்கே உண்டான மழலை மனத்தில் எழுதி இருந்தனர்.. ஒவ்வொரு பதிலும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பாக இருந்ததால் ஆசிரியர்களிடையே பயங்கர குழப்பம் ஏற்பட்டது.. கடைசியாக, ஒரு குழந்தை எழுதி இருந்த பதில் அனைவருக்கும் ஆனந்தத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியது.. பிறகு அனைத்து ஆசிரியர்களும் ஒரு மனதாக அந்த குழந்தைக்கு பரிசளிக்க முடிவு செய்தனர்.. அந்த குழந்தை எழுதி இருந்தது. "என் அப்பா எனக்காக செய்ததிலேயே நான் மிக பாக்கியமாக கருதும் விஷயம் அவர் என் அம்மாவை திருமணம் செய்து கொண்டது தான்"..
தினம் தினம் விடியல்... இரவுக்கு மட்டும் தானோ..? கார்த்திக் பிரகாசம்...
முன்னொரு நாளில் பிரியமானவர்களின் பிறந்த நாட்கள் மூளையின் ஏதாவது ஒரு மூலையில் ஞாபகம் வைக்கப்பட்டன...!!! இன்றைய நாட்களில் முகநூலின் முன்னெச்சரிக்கையால் ஞாபகப் படுத்தபடுகின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...
"அவன்" ஆக இருந்த ஓர் உறவு "அவர்"ஆக மாறும் போது "அவர்" ஆக இருந்த பல உறவுகள் நொடி பொழுதில் "அவன்" ஆகி ஆவியாகின்றன...!!! கார்த்திக் பிரகாசம்...
அரசனோ ஆண்டியோ எவனாயினும் அரியாசனம் அமர அறியா சனங்களின் ஆள்காட்டி விரல்கள் அணி திரள வேண்டும்...!!! கார்த்திக் பிரகாசம்...

தண்ணீர் தேசம்..

வைரமுத்துவின் மற்றுமொரு குறிப்பிட தகுந்த படைப்புகளில் ஒன்று.. தமிழ் ரோஜா மற்றும் கலைவண்ணன் அவர்களின் காதலைப் பேசும் கடல் தேசம்.. ஆரம்பத்தில் காதலின் மீது ஆசையைக் காட்டி அடுத்து   கடலின் மீது அச்சத்தை ஏற்படுத்தி பிறகு காதலின் மீது நம்பிக்கை உண்டாக்கி கடைசியில் கடலின் கருணையைக் காட்டி முடிகிறது... அதே நேரத்தில், உயிரை பணயம் வைத்து கடலில் சென்று மீன் பிடிப்பவர்களின் வாழ்க்கையையும் பழத்தில் ஊசியை ஏற்றுவதை போல  மனதில் ஏற்றிச் செல்கின்றன வைரனின் வரிகள்.. பயம் உயிரைக் குடிக்கும்.. நம்பிக்கை வாழ்வை மீட்கும்.. கார்த்திக் பிரகாசம்...
எமனாக வந்த பட்டம்... "பட்டம்" விட செய்யப்படும் "மாஞ்சா நூல்"கழுத்தை அறுத்து சென்னை பெரம்பூரில் 5வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்... பட்டதைப் பறக்கச் செய்யுங்கள் உயிரைப் பறிக்கச் செய்யாதீர்கள்... கார்த்திக் பிரகாசம்... 
ஒரு முனையில் தண்ணீருக்குள் தள்ளாடுபவர்களின்  வாழ்க்கை.. மற்றெல்லா முனைகளிலும் தண்ணீரில் தள்ளாடுபவர்களின்  வாழ்க்கை.. தமிழகம் ஒரு தண்ணீர் தேசம்.. கார்த்திக் பிரகாசம்...

சைக்கிளைத் தேடும் சாலை...!!!

தார்த் தோள்களில் உன்னை சுமந்து இந்த கல் தேசமும் தாய்மை வரம் பெற்றது... வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக வேண்டாம் மொட்டிலிருந்து விடுபட்ட பூவாக பிறந்து வா.. மீண்டு வா... மீண்டும் வா... உன் தேய்ந்த ரப்பர் பாதங்கள் இந்த கல் தேசத்தில் மீண்டும் கால் பதிக்க நிறம் கறுத்து மனம் வெறுத்து உன்னைத் தேடி அலைகிறேன்... கார்த்திக் பிரகாசம்...
பார்வை மங்கிய தெருவிளக்கொன்று வெகுநாட்களாக பகலில் தொலைத்ததை இரவில் மட்டும் தேடிக் கொண்டிருக்கிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
இறந்து போன இலைகளுக்கு இறுதி அஞ்சலி இழைப்பதால் காற்றின் கண்களில் ஈரப்பதம்... கார்த்திக் பிரகாசம்...
மூச்சுத் திணறலுக்கு    மாத்திரை போட்டு விட்டு  பலூன் பலூன் என்று கூவினான்...!!! அவன் மூச்சுக் காற்றில்  உயிர் கொண்ட பலூன்கள்  சைக்கிளில் ஒய்யாரமாக  சிரித்துக் கொண்டிருந்தன...!!! கார்த்திக் பிரகாசம்...
கடவுளுக்கு பயப்படாதவன் கூட கண்காணிப்பு கேமராவிற்கு பயப்படும் காலம்....!!! கார்த்திக் பிரகாசம்...
பேராசை - மனிதனை   முடியும்வரை முடுக்கிவிடும் முடியாவிட்டால்  முடித்துவிடும்...!!! பேராசை இழப்பின் தொடக்கப்புள்ளி...!!! கார்த்திக் பிரகாசம்...
பயணிகள் கவனத்திற்கு... பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் போது முடிந்தவரை தேவையான அளவு சில்லறை காசு வைத்து கொண்டு ஏறுங்கள்.. 5 ரூபாய் டிக்கெட்டிற்கு 100 ரூபாயை நீட்டினால், பாவம் அந்த நடத்துனர் மட்டும் என்ன செய்வார்.. பெரும்பாலும் இன்று, சில்லறை இல்லாமல் பேருந்தில் ஏறிவிட்டு நடத்துனரிடம் சண்டைக்கு நிற்கும் பயணிகளின் காட்சி வெகு சாதாரணமாகிவிட்டது.. நாம் கொடுத்தால் தானே அவரின் பையில் சில்லறை இருக்கும்.. சில நடத்துனர்கள் சில்லறை இல்லை என்று கடுமையாக நடத்தினாலும் நாம் கோபம் அடைய தேவையில்லை.. ஏனென்றால் தொடர் பணியின் அலைச்சலினால், விரக்தியினால் அவர்கள் அப்படி பேசுகிறார்கள்.. நம்மை பொறுத்தவரையில் அந்த ஒரு பேருந்து; அந்த ஒரு நடத்துனர்... அவ்வளவு தான்.. ஆனால் அவர்களுக்கு தினமும் ஆயிரமாயிரம் பயணிகள் மற்றும் ஆயிரமாயிரம் கடுஞ்சொற்கள்... சில்லரையால் ஏற்படும் சில்லறைத்தனமான பிரச்சனைகளைத் தவிர்ப்போம்.. கார்த்திக் பிரகாசம்...
எனை ஏறி மிதித்தாலும் நீ தடுமாறும் போது உனை தாங்கி பிடிப்பேன்...!! இப்படிக்கு உன் காலணி... கார்த்திக் பிரகாசம்...
     புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "அக்னி பரிட்சை" என்ற நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு.சீமான் அவர்களின் பதில்களும், கேள்விகளும் மனதுக்குள் ஆழமான தாக்கத்தையும், கேட்பாரில்லாமல் கிடந்த கேள்விகளையும் மனதுக்குள் கேட்டுவிட்டன... **கல்வியும், மருத்துவமும் தானே மக்களின் மிக முக்கியமான தேவைகள். பிறகு ஏன் அரசாங்கம் ஆடு மாடு மிக்சி கிரைண்டர் என்று பொருள்களை இலவசமாக தருகின்றது ஆனால் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக தரவில்லை...?? **மத உணர்வும், சாதி உணர்வும் நம் மொழி உணர்வை, தமிழன் என்ற இன உணர்வை மறக்கடிக்க வைத்துவிட்டனவா...?? **மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான தண்ணீரையே காசு கொடுத்து வாங்கி குடிக்கும் அளவிற்கு நம் நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா...?? **வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடு.. மிக பெருமையான விடயம் தான்.. ஆனால் வந்தவர்கள் வசதியாக வாழ்கின்றனர்; வாழ வைத்தவர்கள் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனரே.. வந்தவர்களையெல்லாம் வாழ வைத்தது நம் குற்றமல்ல ஆனால் வந்தவர்களையெல்லாம் ஆள வைத்தது நம் குற்றமோ...?? **ஒருவன...
"இல்லை"கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

உலக தற்கொலை தடுப்பு தினம்...

புத்திசாலித்தனத்தின் போர்வையைப் போற்றிக் கொண்டு புறமுதுகைக் காட்டி போதனை செய்யும் முட்டாள் தனம் தற்கொலை...!!! பிரச்சனைகள் நிரந்தமானதுமில்லை...!!! தற்கொலை அதற்கு தீர்வுமில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
ஏமாற்றத்தினால்  ஏற்பட்ட மாற்றம் நல்ல ஏற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில்... கார்த்திக் பிரகாசம்... 

என் ஆசிரியருக்கு ஒரு கடிதம்...

 அன்புள்ள நௌசத் கான் அவர்களுக்கு.,         முதலில் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.. எனக்கு அமைந்த ஆசிரியர்களில் மிகச் சிறந்த ஆசிரியர் நீங்கள்...          நான் பெற்ற நல்ல மதிப்பெண்களுக்கும், என் மீதான மற்றவர்களின் சில நன் மதிப்பீடுகளுக்கும்  நீங்கள் தான் முதன்மையான காரணம்.. நீங்கள் வகுப்பறையில் சொல்லிக் கொடுத்த பாடங்கள் மதிப்பெண்களுக்கு பயன்பட்டன. வகுப்பறைக்கு வெளியே நீங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் என் வாழ்நாள் முழுவதும்  பயன்பட்டுக் கொண்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...         நீங்கள் என் மீது எடுத்துக் கொண்ட அன்பையும், அக்கறையையும் என்னால் ஒருபோதும் மறக்க இயலாது...         என்னை எனக்கே அடையாளப்படுத்தி, என் திறமைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்கள்...          நீங்கள் சொல்லிக் கொடுத்த கன்னிச்சாரோ வினையும், எஸ்டராக்குதல் வினையும், d தொகுதி f தொகுதி தனிமங்களும், அணு அமைப்பும், அயனி ஆரமும், D-ப்ராக்ளே சமன்பாடும் அடிக்கடி என் மண்டைக்குள்...
உலகத்திற்கு அறிமுகமாகும் குழந்தைகளுக்கு உலகத்தை அறிமுகபடுத்தும் மூத்த முகம்.. பலமுகம் கண்ணெதிரே இருந்தாலும் பாரபட்சம் காட்டா கலை முகம்... விண்மீன்களாய் மின்னிக்  கொண்டிருக்கும் ஒவ்வொரு மாணாக்கர்களை யும் முழு நிலவாய் மாற்ற  தங்களை இரவாய் இருட்டிக் கொள்ளும் இனிய முகம்.. எங்களை எங்களுக்கே அறிமுகப்படுத்தி எங்கள் திறமைகளை  உலகிற்கு அடையாளப்படுத்தி   சமுதாயத்தின் ஆணிவேராய்  அமைந்திருக்கும் ஆசிரியர்களுக்கு  நன்றி நிறைந்த   வாழ்த்துக்கள்.. . கார்த்திக் பிரகாசம்...
விரும்பிச் செய்தால் விலகிச் செல்வது கூட விருது கொடுத்து வியக்க வைக்கும்...!!! கார்த்திக் பிரகாசம்...
      நம் நாட்டில் " பிச்சை கேட்பது " பிரதானமான தொழிலாகிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகமும் பயமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது... மக்கள் அதிகம் கூடும் இடங்களான, திரையரங்குகள் மற்றும் வணிக வளாகங்களின் வாசல்களிலும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் சிலர், பொது மக்களிடம் பணம் கேட்பதும், ஒரு வேளை தர மறுத்து விட்டால் அவர்கள் பின்னாடியே சென்று கெஞ்சுவதுமாக எண்ணிக்கையில் சிலராக இருந்த இவர்கள் இன்று பலராக பலவிதமாக பெருகிக் கொண்டு வருகின்றனர்... பணத்தைத் தவிர மற்ற உதவிகள் செய்ய முன்வந்தாலும் அவர்களில் பெரும்பாலனோர் ஏற்றுக் கொள்வதில்லை.. இதில் குழந்தைகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை தான் அதிகமாக காணப்படுகிறது.. சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் மனதளவில் மிகவும் பாதிப்பதாக இருந்தது.. வார விடுமுறை நாளில் நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தேன். ஒரு வணிக வளாகத்தில் இருந்து வெளியே வரும் போது, 5 முதல் 8 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி என்னுருகில் வந்து கையை நீட்டினாள். நான் அந்த சிறுமியிடம் என்ன படிக்கிறாய்.. உன் பெற்றோர்கள் மற்றும் வீடு எங்கே என்ற...