Skip to main content

Posts

Showing posts from 2016

புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!

பெரிய பெரிய ஹோட்டல்கள், மால்கள், வணிக கடைகள் அபார்ட்மெண்ட்கள் எல்லாம் சீரியல் பல்புகளில் தலைக்கு குளித்து தயாராக இருக்கின்றன...!!! ஜல்லிக்கட்டு தடை, ஆசியா கப் 20-20 இந்தியா வெற்றி, மக்கள் நலக் கூட்டணி, ஸ்வாதி படுகொலை, ராம்குமார் தற்கொலை, உடுமலை பேட்டை ஆணவக் கொலை, தமிழக சட்டமன்ற தேர்தல், அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று வரலாற்றுச் சாதனை, பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம், பியூஸ் மானுஸ் கைது, நா.முத்துக்குமார் மரணம், காவிரி பிரச்சனை, ஒலிம்பிக்கில் சிந்து வெள்ளி, பணமதிப்பு நீக்கம், எந்திரன் 2.0 முதல் பார்வை வெளியீடு, வர்தா புயல், ஜெயலலிதா மரணம், ஓபிஎஸ் மீண்டும் முதல்வர், சோ மரணம், தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை, மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வைகோ விலகல், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்வு, எனக்கு வேலைக் கிடைத்தது மற்றும் இன்னும்பல தமிழக நிகழ்வுகளை தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு கிளம்பத் தயாராகிவிட்டது 2016...!!! நேற்று நடந்த நிகழ்வுகள் இன்று நினைவுகளாக மாறுவது போல 2016 பல நினைவுகளைத் தந்துள்ளது. அதில் நல்ல நினைவுகளைப் பொக்கிஷமா...
பேருந்தில் பின் சீட்டில் ஒரு வயதான பாட்டி யாரிடமோ போன் பேசிக்கொண்டு வந்தாள். அடுத்த முன் சீட்டிலேயே நான் உட்கார்ந்திருந்தால் அந்தப் பாட்டி பேசியது தெளிவாகக் கேட்டது. "மவனாயிருந்தாலும் மவளாயிருந்தாலும் நம்ம கைல பத்து ரூவா காசு இருந்த தான் மருவாத. அதான் காய்ச்சனா கூட பரவாலன்னு வேலைக்கு போயிட்டு வாரேன்"... இதைக் கேட்டதும் உடனடியாகத் திரும்பி பார்த்தேன். அந்தப் பாட்டி ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன. அவளுடைய கண்கள் கலங்கியதற்கு காரணம் ஜன்னலின் வழியே வீசும் பனிக்காற்றா இல்லை மனதில் விளாசும் பாசக்காற்றா..? என்று தெரியாமலேயே பேருந்து அவளை இறக்கிவிட்டு குழப்பத்துடன் கடந்து சென்றது... கார்த்திக் பிரகாசம்...

கெட்ட வார்த்தையில் நட்பு...!!!

பள்ளியில் படிக்கும் போது, ஒரு நல்ல பையனுக்கு அடையாளங்களாக கடைப்பிடிக்கப்பட்ட காரணிகளில், மிக மிக முக்கியமான ஒன்று கெட்ட வார்த்தை பேசாமல் இருப்பது. "அவன் எவ்வளவு நல்லவன் தெரியுமா.? ஒரு கெட்ட வார்த்தைக்கூட பேசமாட்டான்.." இப்படித்தான் ஒரு நல்லவனை அடையாளப்படுத்துவோம். போடாங்க லூசு..! இது தான் பள்ளியில் படிக்கும் போது நான் பேசிய அதிகபட்ச கெட்டவார்த்தை. இதற்கே, போடாங்கன்னு வேற ஏதோ சொல்லவந்து அப்படியே மாத்திட்டான்'னு நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். ஆதலால் நல்லவன் பட்டத்தை நிலைநாட்டுவதற்காகவே முடிந்தவரை கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்ப்போம். சொல்லாத கெட்ட வார்த்தையை சொல்லிவிட்டதாகச் சொல்லி வகுப்பில் என்னை அவமானப்படுத்திவிட்டான் என்று பேசிக் கொள்ளாமல் போன நண்பர்கள் உண்டு. இனிமேல் கெட்ட வார்த்தை பேசக் கூடாதென்று சத்தியம் வாங்கிய தோழிகள் உண்டு. அதே போல நல்லவன் பட்டத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எதற்கெடுத்தாலும், எந்தக் கேள்விக்கு பதில் சொன்னாலும் கூடவே ஒரு கெட்ட வார்த்தையைச் சேர்த்துக்கொள்ளும் ஆட்கள் வகுப்பில் கண்முன்னே டான் ஆனார்கள். அவர்களுக்கென்று தனிக்கூட்டம்...
"முத்தங்களுடன் நான்" என முடித்திருந்த கடிதத்தில் முத்தங்கள் மட்டும் முடியாமல்...!!!        கார்த்திக் பிரகாசம்...

வாட்டர் பாயிண்ட்

பேருந்து நிலையங்களில் தமிழக அரசினால் அமைக்கப்பட்ட குடிநீர் விற்கும் நிலையத்தில் ஒரு லிட்டர் குடிநீர் விலை பத்து ரூபாய். மத்திய அரசின் உடனான ஒப்பந்தத்தின் பேரில் ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் விற்கப்படும் "ரயில் நீர்" ஒரு லிட்டர் பதினைந்து ரூபாய். பெரும்பாலான கடைகளில் விற்கப்படுவது என்னவோ இருபது ரூபாய். நம்மூரில் திருப்பிக் கேட்டால்தான் ஐந்து ரூபாய் சில்லரைக் கிடைக்கும் என்பது வேறு விஷயம். ஆனால் அதே ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட "வாட்டர் பாயிண்ட்" என்று அழைக்கப்படும் கடைகளில் ஒரு ரூபாய்க்கு 300 மில்லியும், ஒரு லிட்டர் குடிநீர் ஐந்து ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆக ஒரு லிட்டர் குடிநீர்.. தி.நகர் பேருந்து நிலையத்தில் ஒரு விலை. மாம்பலம் ரயில் நிலையத்தில் ஒரு விலை. சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் ஒரு விலை. இந்த மூன்றும் குடிக்கத்தகுந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தானா..! விலையின் வேறுபாட்டைப் பொறுத்து தண்ணீரின் தூய்மையும் வேறுபடுகிறதா.? இல்லை எல்லாம் ஒரே தண்ணீர் தான், ஒரு மாதிரியான தூய்மைத்தன்மை கொண்டதுதான் என்றால் விலையில் ஏன் இந்த வித்தியாசம். ...
காசில்லா நேரத்தில் வரும் "ஒயிட் போர்டு " பேருந்து கடவுளின் மீதான கரிசனத்தைக் கூட்டுகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...
"விழிப்புணர்வுத் தேவை" என்ற விழிப்புணர்வே மாற்றத்திற்கான முதல் தேவை...!!! கார்த்திக் பிரகாசம்...
உயர் அதிகாரியின் தொந்தரவால் காவலர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது. மாறாக அது நம்மை சார்ந்தவர...
அலுவலுகத்திலுள்ள "சமூக சேவை செய்யும் அமைப்பின் மூலமாக" ஒரு குழந்தைகள் ஆதரவு இல்லத்திற்கு சென்றிருந்தோம். மொத்தம் பதினெட்டுக் குழந்தைகள். ஒவ்வொருக்கும் ஒரு கதை. ஆனால் அவற்றை சாதாரண ஒரு கதை என்ற அளவில் எளிதில் கடந்து விடமுடியாது. ஒவ்வொன்றும் நெஞ்சை உலுக்கும் மனதை உடைக்கும் கண்களை குளமாக்கும் கதைகள். அப்பா செத்துவிட்டார் என்பதற்காக அம்மாவால் ஆசிரமத்தில் விடப்பட்டவர்கள். அம்மா வேறொருவருடன் சென்றுவிட்டார் என்பதால் அப்பாவால் இங்கு விடப்பட்டவர்கள். பெற்றோர்களை விபத்தில் இழந்தவர்கள். தான் எப்படி கருவுற்றேன் குழந்தை ஈன்றேன் என்றே தெரியாத, இயல்பு நிலையையே உணராத ஒரு பெண்ணின் குழந்தை. அப்பா அம்மா இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்பதால் தாத்தா பாட்டியால் கவனிக்க முடியாமல் ஆதரவு இல்லத்திற்கு வந்தவர்கள் என்று துரத்தி விளையாட வேண்டிய வயதில் அனைவரும் அனாதைப் பட்டத்தால் சமூகத்தில் தூக்கி எறியப்பட்டவர்கள். நீங்கள் வளர்ந்து என்னவாகப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு போலீஸ், கலெக்டர், என்ஜினீயர், மிலிட்டரி என்று இடைஞ்சல் இல்லாமல் வந்து விழுந்தன குழந்தைகளின் பதில்கள். உங்களுக்கு என்ன வேண்டும் நாங்கள் வ...

மற்றுமொரு தலைகுனிவு..!

ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும் போதே ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு கைதாகிப் பின்பு பதவியை இழந்தது தேச அளவில் தமிழகத...

சிகரெட்

நீ இன்று கொன்றால் நான் நின்று கொல்வேன்...!!! சாம்பலாவது இன்று நான் நாளையென்னும் ஓர் நாளில் நீ...!!! கார்த்திக் பிரகாசம்...
மகன் மடியில் தூங்குகிறான் மனைவி தோளில் சாய்ந்து துயில்கிறாள் கணவர் நடுவில் சொக்கி சொக்கி விழுகிறார் மூவரையும் இரயில் தாலாட்டிக் கொண்டிருக்கிறது...!!! கார்த்திக் ப...
நீ எந்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்று யாராவது என்னைக் கேட்டால், ஒரு டீயை "ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு குடித்த தலைமுறை" என்று சொல்லலாம். பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில் அதிகாலையில் வேதியியல் பாடத்திற்கு டியூஷன் போக வேண்டும். ஒவ்வொரு நாளுமே இரவு படுக்கப் போகும் போது எப்படியாவது நாளை மட்டம் அடித்துவிட்டு நன்றாக தூங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் டியூஷன் போகும் வழியில் இருக்கும் அந்த டீக்கடையில் டீக்குடிப்பதற்காகவே எப்படியாவது எழுந்து கிளம்பி விடுவேன். டீக்குடிக்கவென்று அப்பா இரண்டு ரூபாய் தருவார். ஒரு ரூபாய் ஐம்பது பைசாவிற்கு ஸ்ட்ராங்காக ஒரு டீயும், 50 பைசாவிற்கு ஒரு வரிக்கியும் சாப்பிடும் போது அப்படியொரு ஆத்மதிருப்தி கிடைக்கும். ஏதோ அன்றைய நாளுக்கான அத்தனை பலன்களும் ஒரேபொழுதில் கிடைத்துவிட்டதாகத் தோன்றும். அப்படித் தொடங்கிய டீக்குடிக்கும் பழக்கம் இன்றளவும் வரையறை இல்லாமல் நீண்டுக் கொண்டிருக்கிறது. நா.முத்துக்குமாரின் "டீக்குடிக்கும் முன் ஒரு டீ. டீக்குடிக்கும் போது ஒரு டீ. டீக் குடித்தப் பின் ஒரு டீ" என்ற கவிதைதான் ஞாபகத்திற்கு வருகிறது ...
மர மனிதர்கள் மனித மரங்களை வெட்டித் தீர்ப்பது போதாதென்று நேற்று இந்தப் புயல் வேறு தன் பங்குக்கு ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி சாலைகளில் வீசி எறிந்திருக்கிறது.. மாநகரம் முழுவதும் மரக் குவியல்கள். இப்போதைக்கு சாலைகளை முடக்கி இருக்கும் மரங்களை அப்புறப்படுத்துவது மட்டும் நம் வேலை அல்ல. தழைக்க வாய்ப்பிருக்கும் மரங்களை வெறுமனே வெட்டி வீசி விடாமல் அதை வாழ வைக்க வழிச் செய்ய வேண்டும். இழந்த மரங்களுக்கு ஈடாக அதே இடத்தில் அல்லது அருகாமை இடத்தில் புதிய மரக்கன்றுகளை நட்டு முறையாகப் பராமரிக்க வேண்டும். இந்த வேலையை உடனே தொடங்க வேண்டும்.  இல்லையென்றால் இதுதான் வாய்ப்பென்று, மரங்கள் இருந்த தடங்களை முழுமையாக அழித்து அந்த இடங்களில் சிறுசிறு கட்டடங்களை முளைக்க வைத்து அதில் காசுப்பார்க்க ஒரு கூட்டம் தொடங்கிவிடும்.  கார்த்திக் பிரகாசம்...

ரஜினிகாந்த்...!!!

இந்தப் பெயரைக் கேட்டாலே மனதிற்குள் மகிழ்ச்சி  வெள்ளம் பொங்குகிறதே. ஏன்.? இந்த மனுசனின் பெயரைத் திரையில் பார்த்தாலே கண்கள் கலங்குகின்றதே. ஏன்.? யாரோ இவரைத் திட்டினா...
மாலை 5 மணி.. மதுரை இரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸிற்காக காத்திருந்தேன். நிலையத்தில் இலவச Wi Fi என்பதால் காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு முகபுத்தகத்தில் மேய்ந்து க...
விட்டுக் கொடுப்பது "தோல்வி" என்றால் நாம் அதிகமுறை தோல்வியைச் சந்தித்தவர்களாக இருப்போம்...!!! கார்த்திக் பிரகாசம்...
முன்னாள் முதல்வரின் திடீர் இறப்பினால் தமிழகத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் சட்ட ஒழுங்கை நேர்க்கோட்டில் வைத்திருந்த காவல்துறையின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்றாலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாததற்கு இன்னும் இரண்டு முக்கியமான காரணங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒன்று. டாஸ்மாக்'யை முன்கூட்டியே மூடியது. பெரும்பாலான அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க முடிந்ததற்கு டாஸ்மாக்'யை மூடியது மிக முக்கியமான காரணம். இரண்டு. முன்பெல்லாம் தங்கள் தலைவர்களின் துயரச் சம்பவங்கள் அல்லது எதிர்பாராத விளைவுகள் ஏற்படும் போது மக்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்த முறையான தளங்கள் எதுவுமில்லை. யாரிடம் பகிர்ந்து கொள்வது, எப்படித் துயரத்தில் இருந்து மீள்வது என்று தெரியாமல் சிலர் அராஜக செயல்களை கையில் எடுக்க அது அப்படியே ஊர் முழுவதும் பரவி விடும். ஆனால் இன்று அந்தச் சூழ்நிலை இல்லை. துன்பம் மகிழ்ச்சி புகழ் கோபம் என எதுவாயிருந்தாலும் வெளிப்படுத்த சமூக வலைத்தளங்கள் கண்முன்னே இருக்கின்றன. தனது மனநிலையை வெளிப்படுத்தவும், அதை ஏற்றுக் கொள்ளவும் அல்லது விவாதம் செய்யவும் தனக்கென்று உண்டான அல்லது உருவாக்கப்பட்ட ...

டிசம்பர் 6...

டிசம்பர் மாதம் இன்னொரு கறுப்பு அடையாளத்தைத் தன் மீது பூசிக் கொண்டுள்ளது. அதிலும் டிசம்பர் 6.. நடந்து 24 வருடங்கள் ஆயிருந்தாலும் இன்றளவும் பதற்றத்துடன் நினைக்க வைக்கும் பாபர் மசூதி இடிப்பு. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுரிமைக்காக கடைசிவரை போராடிய அம்பேத்கரின் மறைவு... இந்த இரண்டு கொடூர சம்பவங்கள் போதாதென்று இன்னொரு துயரச் செய்தியை வரலாற்றில் தாங்கிக் கொண்டு நிற்கிறது இந்த தினம்.. கார்த்திக் பிரகாசம்...
என்னது..? பிச்சைக்காரர்கள் கூட ஸ்வைப் மெஷின் பயன்படுத்துகின்றனரா..! "தனக்கு உதவி செய்ய விரும்பும் நபரிடம் கையில் பணம் இல்லை என்று சொன்னதால், ஒன்றும் பிரச்சனை இல்லை என்னிடம் ஸ்வைப் மெஷின் இருக்கிறது" என்று ஒரு பிச்சைக்காரர் சொல்வது போல அமைந்த வாட்ஸ் அப் வீடியோவைப் பற்றி பெருமையாக இன்றொரு கூட்டத்தில் மோடி பேசியுள்ளார். மேலும், நோக்கம் நல்லதாக இருக்கும் போது இந்தியர்கள் புதியவற்றை வரவேற்க காலம் தாழ்த்துவதில்லை என்றும் கூறியுள்ளார். அது சரிதான்.. நல்லதை வரவேற்க நாங்கள் காலம் தாழ்த்துவதில்லை. அதனால் தான் இந்த அளவிற்கு பணத் தட்டுப்பாடு நிலவும் போதுக்கூட இதனால் கண்டிப்பாக ஏதாவது நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதற்காக பிச்சைக்காரர்கள் பணமற்ற முறைக்கு தயாராகிவிட்டார்கள் என்று பெருமைப்பட முடியுமா..? முதலில் அந்த வீடியோ எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை.ஒருவேளை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நம் நாட்டில் பிச்சை எடுப்பவர் கூட ஸ்வைப் மெஷின் வைத்திருக்கிறார் என்பதை பெருமைப்பட நினைப்பது எந்த விதத்தில் தனது திட்டத்திற்கு கிடைத்த வெற்...
காக்க வேண்டிய ஏரிகள் கட்டடங்களாகிவிட்டன ஆனால் போக்க வேண்டிய சேரிகள்...? கார்த்திக் பிரகாசம்...

அறிவுப்பசி

அப்பா அம்மா இருவரும் உண்ணும் உண்ணாமல் உயிரைப் பசிக்கு தீனியாயிட்டு மகனைப் படிக்க வைத்தனர். பெற்றோரின் கஷ்டத்தை நன்கு அறிந்து வளர்ந்த பையன். முடிந்த எல்லாவற்றிலும் முன்னணியில் இருப்பான். மதிப்பெண்கள் அவன் அறிவிடம் மண்டியிட்டு காத்துக் கிடந்தன. ஒருநாள் அவன் பள்ளியில் கட்டுரைப் போட்டி அறிவித்தனர். போட்டியின் தலைப்பாக "அறிவுப்பசி" என்று அறிவிக்கப்பட்டது. அவன் அந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடிவெடுத்தான். போட்டி நாள் வந்தது. தன் ஆசையைப் பற்றி நிதானமாக வார்த்தைகள் சிதறாமல் உணர்வுகள் பிறழாமல் கட்டுரையொன்றை வடித்தான். எத்தனையோ மாணவர்கள் பங்கேற்றப் போட்டியில் அனைத்து ஆசிரியர்களும் ஒருதலைபட்சமாக அவனுடைய கட்டுரையைத் தெரிவு செய்தனர். பரிசு வழங்கும் போது மேடையில் அவன் எழுதிய கட்டுரையை ஆசிரியர் ஒருவர் வாசித்தார். "பசியை அத்தியாவசியமாகவும் ருசியை ஆடம்பரமாகவும் கருதும் குடும்பம் என்னுடையது. மூன்று வேளை முழுதாய் சாப்பிடுவது என்பதெல்லாம் எங்களுக்கு கனவில் மட்டுமே சாத்தியம். கனவில்கூட மூன்று வேளை உணவு கிடைக்குமா என்பது பற்றியதுதானே தவிர அதன் ருசியைப் பற்றி இருக்காது. ஏனென்றால் தினசரி சோற...
பி.ஏ வரலாறு படித்து விட்டு குடும்ப கஷ்டத்திற்காக டீக்கடையில் வேலை செய்யும் இளைஞன். தகவல் தொழில் நுட்ப பூங்காக்களுக்கு வெளியில் நின்றுக் கொண்டு கடந்து செல்பவர்களிடம் மட்டுமல்ல திரும்பிக்கூட பார்க்காதவர்களிடமெல்லாம் ஏதாவதொரு கடன் அட்டை அல்லது வங்கிக் கடனுக்கான அட்டையை நீட்டிக் கொண்டு நிற்பவன். மூன்றுவேளை சாப்பாட்டிற்காக பல அடி உயரத்தில் தொங்கி உயிரைப் பணயம் வைத்து கண்ணாடியைத் துடைக்கும் சாமானியன். புல் தரையை இயந்திரம் மூலம் சீர்ப்படுத்திக் குப்பையை கையில் அள்ளிக்கொண்டு செல்லும் பல அக்காக்கள். துடைக்க துடைக்க நடந்து கொண்டே இருக்கும் தரையை மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் பெரியவர். தினமும் இதுபோல இன்னும் பலரைத் தாண்டி தான் வாழ்க்கையின் அன்றாட நாளை நிறைவு செய்ய முடிகிறது. பலருக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக அமைந்து விடவில்லை. ஆனால் அதற்காக அவர்கள் வாழ்க்கையை வெறுமனே விட்டு விடுவதில்லை. பிடித்த வேலை பிடிக்காத வேலை எளிதான வேலை கடினமான வேலை என்பதையெல்லாம் தாண்டி "பசி" என்ற ஒற்றை அரக்கனிடமிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள மட்டுமே அன்றாட நாட்களை இத்தகைய வ...
நீ மறுத்துவிட்டதால் மறந்துவிடவில்லை வேண்டாமென்றதால் வெறுத்துவிடவில்லை தூரம் சென்றுவிட்டதால் துறந்துவிடவில்லை தொந்தரவு முடிந்ததென்று தொலைத்துவிடவுமில்லை நீ விருப்பமில்லையென்றதனால் விலகி நிற்கின்றேன் அவ்வளவுதான் நான் காதலிப்பது வேண்டுமானால் எனக்காக இருக்கலாம் ஆனால் இன்று விலகி நிற்பது உனக்காக என்றும் நான் இருக்கின்றேன் என புரிய வைப்பதற்காகவே ஒரே ஒரு சோகம் நான் கொண்ட காதலுக்காக நாம் கொண்ட நட்பை இழக்க வேண்டியதாயிற்று பரவாயில்லை காதலில் இழப்புகள்தான் இருப்பின் அருமையை இருத்தும் மறுப்புகள்தான் காதலின் மாண்பைக் காக்கும் வெறுப்புகள்தான் காதலின் புரிதலைப் பூர்த்திச் செய்யும் தூரங்கள்தான் காதலின் தொலைவைக் குறைக்கும் தொந்தரவுகள்தான் காதலில் துணிச்சலைக் கொடுக்கும் பிரிவுகள்தான் சில சமயங்களில் பிரியத்தை உணர்த்தும் உன்னிடமிருந்து விலகி நிற்கின்றேனே தவிர உன்னை விலக்கி அல்ல... கார்த்திக் பிரகாசம்...

கறுப்புச் சட்டை காதல்

நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ முறை அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தியுள்ளான் ராஜா. ஆனால் ஒருபோதும் பிரியா அதற்கு பதில் அளித்ததே இல்லை. புரிந்தாலும் புரியாதது போல் அப்போதைக்கு சமாளித்து விட்டு வேறு பேச்சுக்கு சென்று விடுவாள். எப்படியோ அவள் தன்னை மறுக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை என்று மனதை தேற்றிக் கொள்வான் ராஜா. என்றோ ஒரு நாள் தன்னை ஏற்றுக் கொள்வாள் தன் காதலைப் புரிந்து கொள்வாள் என்று ராஜாவும் காத்திருந்தான். ராஜா கறுப்புச் சட்டை விரும்பி அணிபவன். பார்க்கும் போதெல்லாம் கறுப்புச் சட்டையையே அணிவதற்காகப் பிரியா அவனைத் திட்டிக் கொண்டே இருப்பாள். ஆனால் அவன் அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் இருந்து விடுவான். அன்று ராஜாவின் பிறந்தநாள். இருவரும் சந்திப்பதற்காக ஏற்கனவே பேசி இருந்தனர். பிறந்தநாள் அன்றாவது கறுப்புச் சட்டை அணிய வேண்டாம் என்று பிரியா சொல்லி இருந்தாள். ஆனால் ராஜா அதைப் பொருட்படுத்தவில்லை. வழக்கம்போல கறுப்புச் சட்டையை மாட்டிக் கொண்டு இன்று எப்படியாவது அவளது முடிவைக் கேட்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினான் சிரித்த முகமாக நின்றுக் கொண்டிருந்தப் பிரியா, இவன் கறுப்புச்...

"Khoya-Paya"

கேட்பாரற்றுக் கிடக்கும் குழந்தைகளை எங்கேயாவது கண்டால் புகைப்படத்துடன் இத்தளத்தில் http://khoyapaya.gov.in/  பதிவு  செய்யலாம். இதன் மூலம் குழந்தையைத் தொலைத்தவர்கள் இத்தளத்தில் தேடும் போது தங்கள் குழந்தையை கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கேட்பாரற்றுக் கிடக்கும் குழந்தையைப் பற்றி குறிப்பிடுவதற்கும், தொலைந்த குழந்தையைத் தேடுவதற்கும் இந்தத் தளத்தை பயன்படுத்திக் கொள்ளவும். கார்த்திக் பிரகாசம்
அவளும் நானும் பிரிவும் புரிவும் கார்த்திக் பிரகாசம்
நிர்வாணக் குழந்தையின் குதூகலத்தில் கடந்த காலத்தின் துயரங்களைத் துடைத்து கண்ணீரில் தூக்கிலிட்டாள் அந்த இளம் விதவை தாய்...!!! கார்த்திக் பிரகாசம்...

அவள் நாளை அவனைச் சந்திக்கப் போகிறாள்...

அவனைச் சந்திக்கும் போதெல்லாம் பிய்த்துக் கொண்டு கிளம்பும் கண்ணீர்த் துளிகளுக்கு கணக்கு வழக்கில்லை கட்டிப்பிடிக்கத் துடிக்கும் கரங்களும் அதைக் கட்டுப்படுத்திக் கொல்லும் கண்ணியமும் அவளுக்கொன்றும் கவலையில்லை அஞ்சனத்தையே கண்ணீருக்கு தடுப்பணை ஆக்குவதும் அவனின் விரல் பசிக்கு வெட்கத்தை விருந்தளிப்பதும் அவள் எப்போதும் விரும்பி ஏற்கும் இன்னல்கள் இதோ இந்த இரவு நகர மறுக்கின்றது இதயம் இடைவெளியின்றி இசைக்கின்றது ஏசி அறையின் வெப்பம் வேர்வையை விதைக்கின்றது நகங்களின் உயரம் எச்சிலில் கரைகின்றன விரல்களின் சடக்கைச் சத்தம் அறையின் செவிகளில் செத்து மடிகின்றன கால்கள் நிலத்தை முரட்டுத் தனமாக முத்தமிடுகின்றன முந்திக் கொண்டு வரும் உறக்கம் இன்று பரதேசம் போய்விட்டது அவள் நாளை அவனைச் சந்திக்கப் போகிறாள்... கார்த்திக் பிரகாசம்...
இறந்த காலமெல்லாம் அவளோடு இருந்த காலமென்பதால் அவள் இல்லாத எதிர்காலம் என்னவாகுமோவென்று நிகழ்காலம் நித்தம் நித்தம் நிம்மதியின்றி நகர்கின்றது...!!! கார்த்திக் பிரகாசம்...

தூய்மையான இந்தியா

இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் பயன்படுத்த முடியாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் "ஊழலுக்காக எதிராக நாம் எடுக்கும் முதல் முதல் போராட்டம் இது" என்று கூறியுள்ளார். நள்ளிரவு முதல் நேரடியாகப் பயன்படுத்த முடியாதே தவிர மருத்துவமனைகள், இடுகாடுகள் மற்றும் எரிபொருள் நிலையங்களில் 500, 1000 தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என்றும் டிசம்பர் 31 வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென்று இவ்வாறு அமல்படுத்தியதில் பாதகங்கள் பல இருந்தாலும் சில முக்கிய சாதகமான விடயங்களையும் நாம் கவனம் கொள்ள வேண்டியுள்ளது. பணத்தை பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் பலர், இப்பொழுது கண்டிப்பாகத் தங்கள் பணத்தை வெளியே எடுத்தே வேண்டும். அவ்வளவு பெரிய தொகையை மாற்ற வேண்டும் என்றால் கண்டிப்பாக வங்கிகளின் மூலம் தான் மாற்ற முடியும். எனவே பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கருப்பு பணங்கள் வங்கிக்கு மாற்றப்படும் போது முறையான வெள்ளை பணமாக மாறும். வரி காட்டாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அத்தகையத் தொகைகளுக்கு அவர்களாகவே முன்வந்து வரிக்...
உணர்வுகளின் முதலீடில்லாமல் உறவுகளின் நிலை தான் என்னவோ..? கார்த்திக் பிரகாசம்...
இன்றைய தினம் இன்றோடு முடிவதற்காக அல்ல...!!! கார்த்திக் பிரகாசம்...

இந்தியாவில் முதல்முறையாக ஆன்லைன் வாக்குப்பதிவு

புதுச்சேரி நெல்லித்தோப்பு தேர்தலில் ஆன்லைன் வாக்குப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராணுவத்தில் பணிபுரிபவர்கள், இடைத்தேர்தலில் ஆன்லைன் மூலம் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. கார்த்திக் பிரகாசம்...

லஜ்ஜா அவமானம்

இந்தியாவில் 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயம் பங்களாதேஷத்தில் இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் தொகுப்பு தான் லஜ்ஜா. தஸ்லிமா நஸ்ரினால் எழுதப்பட்டு, கே.ஜி.ஜவர்லால் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உண்மை அல்லது உண்மைக்கு அருகாமையான விடயங்களை கதையின் பாத்திரங்களும் மூலம் பதிமூன்று நாட்களில் முடியும் நாவலாக அமைத்திருக்கிறார் தஸ்லீமா நஸ்ரின். இந்துக்கள் என்ற போர்வையில் ஒரு சிலரால் அல்லது சில அமைப்பால் செய்யப்பட்ட ஒரு செயல், இந்துக்கள் சிறுபான்மையாக உள்ள ஒரு தேசத்தில் எந்த அளவுக்கு கொடுமைகளை, மதம் என்ற பெயரில் வக்கிரங்களை அவர்களுக்கு இழைத்துள்ளது என்பதை ஆழமாக விவரிக்கின்றது. மதச்சார்பற்ற நாடு என்று வெளியில் மார்த்தட்டிக் கொண்ட தேசம் (பங்களாதேஷ்), அரசியல் கட்சிகளால் எப்படி இஸ்லாமிய தேசமாக உருமாற்றப்பட்டது அதனால் மற்ற மதத்தினர்(குறிப்பாக இந்துக்கள்) மேற்கொண்ட இடப்பெயர்வு ஆகியவற்றை புள்ளி விவரங்களுடன் பதிவு செய்கின்றது. ஒருங்கிணைந்த வங்காளிகளாக பங்களாதேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களை, சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லீம் இந்து என்று மதமென்ற மண்ணுக்குள் புதைத்து வ...
கவலைக்குக் காந்தத் தன்மை உண்டு.. ஒரு கவலை ஓராயிரம் கவலைகளை ஈர்க்கும் வல்லமையுடையது... கார்த்திக் பிரகாசம்...
அவளும் அவனை காதலித்தாள் அது பொய்யில்லை ஆனால் நிஜமுமில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
மழை நின்று வெகுநேரமாகிவிட்டது இருந்தும் மரத்தடியிலேயே காத்திருக்கிறேன் மரக் கிளைகளின் தூறல் நிற்க...!!! கார்த்திக் பிரகாசம்...
முகநூலில் சமூக ஆர்வலர் ஒருவரின் பெயரில் இயங்கும் பக்கமொன்றில் புகைப்படத்துடன் ஒரு கேள்வி. ஐஸ்லாண்டில், ஊழல் செய்யும் அதிகாரிகளின் புகைப்படங்கள் கழிவறைகளில் தொங்கவிடப்படும். இந்தியாவிலும் இதை பின்தொடரலாமா.? என்று அதில் வினவப்பட்டிருந்தது. நல்ல யோசனை தான். ஆனால் அதில் ஒரு சட்டச் சிக்கல். அத்தனை கழிவறைகள் இந்தியாவில் இருந்தால் நம் மக்கள் ஏன் இன்னும் அவசரத்துக்கு வெட்டவெளியிலும் மறைவிலும் இருளிலும் ஒதுங்க போகிறார்கள்.. கார்த்திக் பிரகாசம்...
நேற்று முதல் நகரத்தில் குவிந்து கிடக்கும் பலவூர் மனிதக் குப்பைகளை ஊர் வாரியாகப் பிரித்து இரவுபகல் பாராமல் புறநகரில் கொண்டு குவித்துக் கொண்டிருக்கின்றன சென்ன...
தோள்கள் உராய்ந்து விரல்கள் விரதம் விடுத்து கால்கள் கனமிழந்து திசைத் தெரியா வழியில் எதையும் தொலைக்காமல் எதையோ தேடிக் கொண்டிருந்த மாலைப் பொழுதில் கண்களைக் கண்டு பிரிவொன்று நேர்ந்தால் பிணமாகி விடுவேன் என்றாள்.. காதலை மட்டும் காட்டடி கல்லறையிலும் உன் கண்ணீர்த் தடங்களை என் இதழ்கள் உலர வைக்கும் என்றான்... கார்த்திக் பிரகாசம்...

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

இன்றைய தலைமுறையினாரால் அதிகம் அறியப்படாத ஒரு பெயர் . அதுவும் ஒரு முதல்வரின் பெயர். சுதந்திர இந்தியாவில் தமிழகத்திற்கான முதல் முதல்வர். ஆம். நம் தமிழ்நாட்டின் தலைச் சிறந்த முதல்வராக கருதப்படும், இன்னும் கொண்டாடப்படும் காமராஜருக்கு முன்பே தமிழகம் கண்டெடுத்த நேர்மையின் சிகரம். காந்தியக் கொள்கைகளில் அதிகம் ஈர்ப்புக் கொண்ட ஓமத்தூரார், இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். ஆனால் அந்த இரண்டு வருடங்களில் அவர் செய்த சாதனைகள் மற்றும் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு தான் இன்றுவரை தமிழகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காந்தியின் மீது கொண்ட பற்றினால் தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டவர். இடையில் தனிக் கட்சி அமைக்க சூழ்நிலை அமைந்தும், மற்ற கட்சிகளில் இணைய பல அழைப்புகள் வந்தும் தான் சார்ந்த கட்சிக்கு எத்தகைய துரோகமும் செய்ய கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று கடைசிவரை காங்கிரஸ்லேயே இருந்தவர். ஆட்சிக் கட்டிலையும்,அதிகாரப் பசியையும் அறவே புறம் தள்ளியவர். நேர்மையையும் எளிமையையும் கண் மூடும் காலம் உயிர் மூச்சாக கொண்டவர். நிஸாம் கட்டுப்பாட்ட...
சாக்கடையில் குப்பைகளும் சாலைகளில் நாமும் பெரிய வித்தியாசமில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
தீபாவளிக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துக்களுக்கான கட்டணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை(17/10/2016) அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் வழக்கமான கட்டணத்தை விட 50% க்கும் மேல் அதிகமாக உள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கும்படி ஒரு தொலைப்பேசி எண்(044-32000090) குறிப்பிடப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கட்டணமே 50% க்கு அதிகமாக உள்ள நிலையில், "ரெட் பஸ்" போன்ற முன்பதிவு செய்யும் இணைய தளங்களில் கட்டணம் 100%ஐத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தீபாவளி நாள் நெருங்க நெருங்க இந்தக் கட்டணம் மேலும் உயர வாய்ப்பு அதிகமுள்ளது. ஒருவேளை எங்கேயாவது மறைமுகமாகவோ அல்லது ஒரு சிலரோ தவறு செய்தால் அதைக் கண்டிக்க புகார் அளிக்கலாம். எல்லாருக்கும் தெரிந்தே பகிரங்கமாக இப்படியொரு பகல் கொள்ளை நடக்கும் போது யாரிடம் புகார் செய்ய முடியும். ஏனென்றால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்தே இது நடக்கிறது பண்டிகைக்கு சொந்த ஊருக்கு போயிட்டு வர மட்டும் 1500 முதல் 2000 செலவாகும் என...
வெட்டிய மரத்தில் செய்த ஜன்னல்களும் கதவுகளும் வீட்டில் திறந்தே கிடக்கின்றன ஆனால் காற்று தான் வரவில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
செல்லம்மாள் கல்லூரி நிறுத்தத்தில் இப்பொழுது அனைத்து பேருந்துகளும் நின்றுச் செல்கின்றன. அதுமட்டுமில்லாமல் பிரேத்யேகமாக நிறுத்தத்தில் ஓரிரு ஆய்வாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. இது எத்தனை நாட்களுக்கு என்று தெரியவில்லை. ஆனால் ஒரு சாதாரண பேருந்து நிறுத்தத்திற்கு மூன்று மாணவிகளின் உயிர்க் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் ஒருநாளும் மறந்து விடக்கூடாது... கார்த்திக் பிரகாசம்...
சிலருக்கு இறப்பில் விடிவு காலம் சிலருக்கு சிலர் இறப்பதினால் விடிவு காலம்...!!! கார்த்திக் பிரகாசம்...
நீண்ட நாட்கள் கழித்து அப்பாவுடன் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கிறேன். நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலத்தில், டிராவிட் கங்குலி கும்ப்ளே என வீரர்களின் பெயர்கள...

நடந்து செல்பவர்களின் கதி...?

நேற்று மூன்று கல்லூரி மாணவிகள் பலியான அந்த இடத்தில் அப்படியொரு விபத்து நடந்ததற்கான தடயங்கள் கூட இன்று இல்லை. சிந்திக் கிடந்த மாணவிகளின் ரத்தம், மாநகரத்தின் விறுவிறுப்பில் மிக விரைவாய் உறைந்து போய்விட்டது. சிதறிக் கிடந்த புத்தங்கங்களும் திண்பண்டங்களும் மக்கிய குப்பைகளாகி விட்டன. இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதை அறிந்திருந்தும் எதுவுமே நடக்காதது போல அந்த இடத்தை மிக எளிதாக வாகனங்கள் கடந்து செல்கின்றன. பரபரப்பான வாழ்க்கையில் தனக்கு நேராத வரை கவனக் குறைவால் ஏற்படும் இதுப் போன்ற விபத்துகளைப் பற்றியும், வாழவே ஆரம்பிக்காமல் இறந்து போன உயிர்களை பற்றியும் நினைத்து பார்க்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை. இறப்பதற்கு இன்னும் உயிர்கள் நிறைய இருப்பதனால் இறந்து போன உயிர்களைப் பற்றி கவலைப்படவும் யாரும் தயாராயில்லை. வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததனால் இத்தகைய விபத்து நேர்ந்தது. கல்லூரிக்கு அருகில் பேருந்து நிறுத்தம் இல்லாததால் தான் விபத்து நேரிட்டது என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் கல்லூரிக்கு சரியான இடத்தில் அனைத்து வகை பேருந்துகளும் நின்று செல்லும் வகையில் பேருந்து...

விடியா இரவு...

அனலாய்த் தகித்துக் கொண்டிருந்த அந்த வெப்பப் போர்வைக்குள் அவன் அவளது ஆண்மையில் அடங்கியும் அடக்கியும் அவள் அவனது பெண்மையில் அடைந்தும் அடையாமலும் விடியா இரவிலோர் முடியா பயணம்... கார்த்திக் பிரகாசம்...
விதைகள் வேறானாலும் வேர்களில் வேறுபாடில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
அடுத்தவன் குறையை சுட்டிக் காட்டுவதிலும் குத்திக் காட்டுவதிலும் தான் மனிதனுக்கான வேறுபாடு அடங்கியுள்ளது...!!! கார்த்திக் பிரகாசம்...
உணர்வுகள் ஒரு உயிர்க்கொல்லி...!!! கார்த்திக் பிரகாசம்...
"ஜிப்ஸி" ராஜு முருகனின் "ஜிப்ஸி" நூலைப் படித்து முடித்த நேரம், ஒரு நாடோடியாய் வாழ மனம் நாட்டம் கொள்கிறது. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் வேதனையுடன் வெளிப்படுத்துகின்றன. நாம் பார்க்க மறுத்த/மறந்த பல நாடோடிக் குழுக்களின் முகங்களை உண்மை பிசகாமல், அலங்கார வார்தைகளால் உணர்வுகளை அசிங்கப்படுத்தாமல் அவர்களின் வாழ்க்கையை அவர்களினூடே வாழ்ந்து நம்மையும் அவர்களோடு வாழ வைத்திருக்கிறார். அன்றாட வாழ்க்கையில் நாம் மிக எளிதாகக் கடந்துச் செல்லும் சர்க்கஸ் மனிதர்கள், ரோட்டில் கயிறு மேல் நடந்து வித்தை காட்டுபவர்கள், இரவு நேரத்தில் தெருக்களில் குறி சொல்லிச் செல்லும் குடுகுடுப்பைக்காரர்கள், ராமர் கிருஷ்ணர் அனுமர் என சாமி வேடமிட்டு தெருவில் காசுக் கேட்டு வருபவர்கள் மற்றும் சவுக்கால் தன்னை அடித்துக் கொள்பவர்கள் என நாம் சிறிதும் நினைத்துப் பார்க்காத மனிதர்களைப் பற்றியெல்லாம் நெஞ்சத்தில் நெகிழ வைக்கிறது. இந்தப் புத்தகத்தை படித்தப் பின், கண்டிப்பாக மேற்கூறிய மனிதர்களை நாம் எளிதாக கடந்து சென்று விட முடியாது.. கார்த்திக் பிரகாசம்... ...
மனிதன் பசியைப் பணமாக்கவும் கல்வியைக் காசாக்கவும் கற்றதே மனித நேயத்தின் மிகப்பெரிய வீழ்ச்சி...!!! கார்த்திக் பிரகாசம்...
புதிதாக பார்க்கும் ஒவ்வொரு முகமும் ஏதாவதொரு பழைய முகத்தை நியாபகப்படுத்தி விடுகிறது...!!! கார்த்திக் பிரகாசம்...

சர்க்கஸ்...

கோமாளியாய் நடிப்பவனைப் பார்த்து ஆயிரம் கோமாளிகள் ஏளனமாகச் சிரிக்கிறார்கள் தானுமொரு கோமாளியென்று அறிந்தும் அறியாமலே...!!! கார்த்திக் பிரகாசம்...
பலருக்கு சாகும்வரை தெரிவதில்லை வாழவில்லையென்று...!!! கார்த்திக் பிரகாசம்...

சூரிய உத(ப)யம்...

குளிருக்கு இதமாக இருளாடையை இழுத்து போர்த்தியிருந்த ஆகாயம் வெளிச்ச கீறல்களை சோம்பலுடன் பிரசவித்த நேரம் தன் ஒளி நாணயங்களை சிதறடித்து கொண்டே பிறந்த குழந்தை போல் சிறியவனாய் கோபமற்றவனாய் அமைதியானவனாய் மேகங்களை திறந்து மெல்ல மெல்ல வெளியே வந்தான் சூரியன் பாடித் திரிந்த பறவைகள் பரதேசம் போயின மண்ணுக்குள் குழி பறித்து உறங்கி கொண்டிருந்த நண்டுகள் நடுக்கத்துடன் நடுநிசியில் விழித்த கோபத்தில் வெளியேறின காதலித்துக் கொண்டிருந்த காக்கைகளும் கரையை கவிதையில் நனைத்துக் கொண்டிருந்த காதலர்களும் கண் இமைக்கும் நேரத்தில் காணாமல் போயினர் அலைகள் தொட்டு நனைக்க பாதங்கள் இல்லாமல் அலைந்தன ஆனால் அவனின் வெளிச்ச கீறல்கள் இவை எதையும் பொருட்படுத்தியதாய் தெரியவில்லை மெல்ல மெல்ல மேலே வந்தான் ஆனந்தமாய் ஆடித் திரிந்த அலைகள் ஆசிரியரைக் கண்ட மாணவனை போல அடங்கி ஒடுங்கின வெளிச்சம் பட்டு வெட்கமடைந்த மணல்வெளியும் இப்பொழுது வேதனையில் வெப்பத்தை உமிழத் தொடங்கியது இருளில் இன்பமாய் இசைத்துக் கொண்டிருந்த கடற்கரை வெளிச்சத்தில் வெளிச்சத்தின் வெப்பத்தில் வெறிச்சோடி போனது...!!! கார்த்திக் பிரகாசம்...
என்னை வேண்டாம் என் காதலையாவது...??? கார்த்திக் பிரகாசம்...
ஒருவருக்கருகே ஒருவராக இருந்த நாம் இனி ஒருவருக்குள் ஒருவராய்...!!! கார்த்திக் பிரகாசம்...
பிறந்தநாள் வாழ்த்துகள் சொல்லச் சொல்லி இறந்து போன நண்பனின் முகத்தைக் காட்டுகின்றது முகப்புத்தகம்... மறந்தும் நினைத்து விடக்கூடாதென்று கருதுமொன்றை மறக்காமல் நினைவுபடுத்திவிட்டது... கார்த்திக் பிரகாசம்...
விழப் போகும் இடத்தில் முள்ளொன்றை கண்டு குத்தி விடுமென நடுங்கினேன் ஆனால் குத்தப் போகும் முள் என் தோலை கடினப்படுத்தும் என்பதை ஒருபோதும் மறக்கவில்லை...!!! கார்த்திக் பிரகாசம்...

சோக மழை...!!!

காலை வேளையில் வரவேற்க யாருமில்லாததால் வாழ்த்த யாருக்கும் மனமில்லாததால் உற்சாகமிழந்து வெறுமனே சாலையை மட்டும் நனைத்துக் கொண்டிருக்கிறது தூறல் மழை...!!! கார்த்திக் பிரகாசம்...

நதிகள் இணைக்கப்பட்டால்...?

மூன்றாம் உலகப் போர் மூண்டால், அதற்கான காரணம் கண்டிப்பாக தண்ணீராகத் தான் இருக்கும் என்று ஏற்கனவே அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.. இந்த நிலையில் இந்தியாவிலுள்ள நதிகள் எல்லாம் இணைக்கப்பட்டால் கண்டிப்பாக தண்ணீர் பிரச்சனை தீரும். அதில் எந்த விதமான சந்தேகமும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் நம் சமூகத்தில் நாளுக்கு நாள் பரந்த மனப்பான்மை மறைந்து குறுகிய மனப்பான்மை பரந்து விரிந்து கொண்டிருக்கிறது. தன்னை பற்றிய நினைப்பு மட்டுமே எப்பொழுதும் மேலோங்கி நிற்கிறது. ஒருவன் அடுத்த வேளை உணவுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் போது, இங்கு ஒரு கூட்டம் அடுத்த நான்கு நாட்களுக்கான உணவைப் பத்திரப்படுத்த நினைக்கிறது. உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்தும், ஒரு அரசாங்கம் தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. அதையும் மீறி தண்ணீர் திறந்து விடச் சொல்லும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக துணை ராணுவத்தை அழைக்கும் அளவுக்கு நம் நாட்டிற்குள்ளேயே மனித நேயம் செத்துக் கொண்டிருக்கிறது. சட்டத் திட்டங்கள் வலுவிழந்துக் கொண்டிருக்கின்றன. ஆக நாளைக்கே இந்தியாவிலுள்ள நதிகளெல்லாம் இணைக்கப்பட்டாலும் அதன் உண்மையான, முழுமையான பலனென்பது, யாருக்கும் பாதகம்...
புகைப்படம்...!!! உயிருக்கு உயிரான உறவுகளையும் உணர்வுகளையும் ஒற்றை நூலில் நெய்த ஆடையாக உறவுகள் பிரிந்தாலுமே  உணர்வுகள் குழையாமல் உயிர்ப்புடன் உடுத்தியிருக்கும் உயிரற்ற உன்னதம்...!!! கார்த்திக் பிரகாசம்...
மின்மினி...!! விளக்கில்லா வீட்டிலும் விலையில்லா மின்சாரம்...!!! கார்த்திக் பிரகாசம்...
விடுமுறை இல்லையென்று அமெரிக்காவில் இருந்துக் கொண்டே வீடியோவில் பார்த்து முதியோர் இல்லத்தில் செத்துக் கிடக்கும் அம்மாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்துகையில் தன்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதான் அந்த பாசமான மகன்...!!! கார்த்திக் பிரகாசம்...
ஆட்டக்களத்தில் அவள் என்னவோ நாட்டிற்க்காகப் பதக்கம் வெல்லத் தான் போராடினாள்... ஆனால் நாட்டிற்குள் ஒருபுறம் அவளுக்கு தங்கம் கிடைக்குமா அல்லது வெள்ளி கிடைக்குமா என்ற போராட்டம்... மறுபுறம் தங்கமோ வெள்ளியோ அது கிடக்கட்டும் முதலில் அவள் என்ன சாதி என்று தெரிந்துக் கொள்ள போராட்டம்... நங்கை செய்த சாதனைக்காக பதக்கம் வென்றிருக்கிறாள்... அதில் சாதி முலாம் பூசி நாட்டிற்குள் அவளைத் தோற்கடித்துவிட வேண்டாம்... கார்த்திக் பிரகாசம்...
அவளுடன் காதலைப் பகிர்ந்துக் கொண்டேன்...  ஆவலுடன் கண்களில் ஆமோதித்தாள்... கொஞ்சம் நெருங்கி வந்தாள் நெஞ்சம் நொருங்கிப் போனேன் உடம்பெல்லாம் உறைந்து போன நிலையில் கைகளைப் பிடித்தாள்... உணர்வோடு சேர்ந்து உயிரும் உடலை விட்டு வெளி வந்ததாய் தோன்றியது.. வியர்வைத் துளிகள் என் பதற்றத்தை வெகுவாக விளம்பரப்படுத்தின... என் காதினருங்கே உதடுகளை குவித்தாள்.. வியர்வைத் துளிகள் குளிர்ந்தன.. "இதைச் சொல்ல இத்தனைக் காலமா" வெகுகாலம் காக்க விட்டிர்கள் என்று உதடுகளைத் தண்டித்துவிட்டு கன்னங்களை மட்டும் சீண்டிச் சென்றாள்...!!! கார்த்திக் பிரகாசம்...
செத்த பிறகாவது சுகமாய் வாழ வாழும் போதே செத்து பிழைத்தாவது காப்பீட்டுத் தொகையை மாதாமாதம் தவறாமல் செலுத்தி விடுங்கள் என்று எச்சரித்தது அந்த விளம்பர அறிவிப்பு...!!! கார்த்திக் பிரகாசம்...
தோல்வி கொடூரமாக உரசும் போதெல்லாம் கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு பழகியதால் என்னவோ வெற்றி வந்து மென்மையாக தொடும் போதும் கண்கள் கண்ணீர்த்துளிகளால் கனத்து விடுகின்றன ஆனந்தமாக...!!! கார்த்திக் பிரகாசம்...

அவள் என்ன நிறம்...?

அவ்வளவு வெளுப்புமில்லை... அந்தளவு கருப்புமில்லை... கருப்பும் வெளுப்பும் கலவியின் முடிவில் கண்ட வெட்கத்தில் கொண்ட நிறம்...!!! கார்த்திக் பிரகாசம்...
மாற்று வழிகள் எப்பொழுதும் தயாராய் இருக்கின்றன.. ஆனால் மாற்றிக் கொள்ள தான் யாரும் தயாராக இல்லை...!!! கார்த்திக் பிரகாசம்...
பள்ளி முடியும் நேரமாகிவிட்டது அந்த இரு சிறுவர்களும் உற்சாகமாயினர் மூளை சுறுசுறுப்பானது மணியோசையை எதிர்பார்த்து மும்மரமாய் காத்திருந்தனர்...!!! பள்ளிக்கூட மணியோசை கேட்டது கேட்ட நொடி மட்டும்தான் தாமதம் இருவரும் வாசலை நோக்கி வேக வேகமாய் ஓடிப்போயினர்...!!! சீருடையுடன் பள்ளியை விட்டு வெளியே  வந்த  மாணவர்களிடம்  அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை விற்று பள்ளியை விட்டு வீடு திரும்பினர் அந்த சீருடையற்ற பள்ளி மாணவர்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...
நாம் இரண்டு பேரைப் பார்த்து கேலியாகச் சிரிக்கும் போது நம்மை நோக்கி நான்கு பேர் இளக்காரமாக சிரித்துக் கொண்டிருப்பார்கள்...!!! கார்த்திக் பிரகாசம்...

கன்னிக் கழியா இரவுகள்...!!!

வெளிச்சத்தின் வாசமே தெரியாததனால் கன்னித் தன்மை கொஞ்சமும் இழக்காமல் இரவின் வீதிகளில் இருளை மட்டும் அணிந்து வெளிச்சமென்னும் வீரன் வந்து கற்பை களவாட தெரு திறந்து காத்து கிடக்கின்றன பல கிராமத்து இரவுகள்...!!! கார்த்திக் பிரகாசம்...